இன்று தக்காளியின் விலை நூறு ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது.

 குழம்புக்குப் பயன்படும் தக்காளியின் விலை கட்டுப்படுத்தப் படவில்லையே என்று புலம்புகிறார்கள் மக்கள்.

தக்காளி பளபளப்பாகவும், சிவப்பாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

தக்காளியைப் போல, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் பளபளப்பாகவும், சிவப்பாகவும் அழகாகவும் பேசினார்கள். நாட்டை முன்னேற்றுவோம் என்று பொய் வாக்குறுதிகளைத் தந்து ஆட்சியைப் பிடித்தார்கள் பா.ஜ.க வினர். என்ன ஆயிற்று?

 யார் வங்கிக் கணக்கிற்கும் ரூபாய் 15 லட்சம் இதுவரை வரவில்லை.

 பெட்ரோல், டீசல், முக்கியமாக ‘கேஸ் சிலிண்டர்’ விலை தாறுமாறாக ஏறி விட்டது.

 அரசுடைமையான மக்களின் சொத்துகளான எல்.ஐ.சி, விமானம் உள்ளிட்ட நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. இரயில்வே, வங்கி உள்ளிட பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.

 ஜம்மு காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்து அதை இரண்டாகப் பிரித்தாகி விட்டது.

 ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே பண்பாடு என்று நாட்டின் பன்முகத் தன்மைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது கத்தி.

 மணிப்பூர் பற்றி எரிகிறது. அங்கு மக்கள் மடிகிறார்கள்.

 எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கத்துறை ‘கடமை’ தவறாமல் வேலை செய்கிறது.

 இஸ்லாமியர்களின் வாக்கு எங்களுக்குத் தேவையில்லை என்று கர்நாடகத்தில் கூறிய பா.ஜ.க, சிறுபான்மையினர், பட்டியலின, பழங்குடியினருக்கு எதிராக நிற்கிறது.

 மதச்சார்பற்ற நாட்டை மதவாதத்தால் பிளவுபடுத்தப் பார்க்கிறது. வடக்கே ராமனைத் தூக்குகிறார்கள். கர்நாடகத்தில், அனுமன் என்கிறார்கள். தமிழ்நாட்டில் முருகனுக்கு வேல் தூக்கி ஓடுகிறார்கள்.

 சொல்வது ‘எல்லோரும் இந்துக்கள்’ என்று. செய்ய முயல்வது சனாதனத்தைக் கொண்டு வருவது.

 அவர்கள் சொல்வது ராம்ராஜ்யம். உண்மையில் அது ‘மநு’ராஜ்யம்.

- அன்றைய சிவப்புத் தக்காளி இன்று காவியாகி விட்டது.

 நேற்று பா.ஜ.க. கொடுத்த தக்காளி (வாக்குறுதி) இன்று அழுகி விட்டது. இனி அது எதற்கும் பயன்படாது. என்ன செய்வது?

 அழுகிய தக்காளியை வீசுங்கள். 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.கவையும் தக்காளியைப் போல தூக்கி எறியுங்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It