(ஒரு கூட்டத்தில் பேசியது)
பி.ஜே.பியுடன் எனக்கு என்ன வாய்க்கா வரப்பு தகராறா? நான் ஒரு கிருத்துவப் பள்ளியில் படித்தேன். இசுலாமிய வீட்டிலேதான் சாப்பிட்டேன். எங்கள் வீட்டில் இருந்தேன். மூன்று பேரும் ஒன்றாக வளர்ந்தோம். ஒரு குழப்பமும் இல்லை. இந்த குழப்பத்தை ஐந்து வருடத்தில் உருவாக்கியது நீ என்றால், எனக்கு நீ வேண்டாம். வெளியே போ. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீ பாலம் கட்டு, நல்லவனைக் கூப்பிட்டுச் சிலை வை. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்கு இந்த தேசத்தின் ஆதாரம் எது என்றால் வேறுபாடு இன்றி நாங்கள் வாழ்வதுதான். அதைப் பாழாக்குவதைத் தான் நீ செய்வாய் என்றால், எனக்கு நீ வேண்டாம்.
இசுலாமிய வீடுகளில்தான் நான் வாழ்ந்தேன். மதுரை முனிச்சாலையை ஒட்டி இருக்கும் இசுலாமியர்களின் வீடுகளினால் ஒரு குழப்பமும் வந்தது இல்லை, சாதாரணமாக இருந்திருக்கிறோம். பள்ளிக்கூடம் முதல் கல்லூரிப் படிப்பு வரை கிருத்துவப் பள்ளியில் தான் படித்தேன். ஒரு குழப்பமும் இல்லை. அதைக் கேடென்று நீ சொல்வதால் நான் வேண்டாம் என்கிறேன்.
தமிழிசை செளந்தரராஜன் ஒருபொழுதும் நிர்மலா சீதாராமன் ஆகவே முடியாது. எனக்குத் தமிழிசை செளந்தரராஜனை அதிகம் பிடிக்கும். என் அக்காவைப் போல் ஒரு தோற்றத்தில் இருக்காங்க. எனக்கு, பார்க்கும் பொழுது நெருக்கமாக இருக்காங்க. அவங்களைப் பலமுறை பார்த்திருக்கிறேன். எனது சிறு வயதில் இருந்து பார்த்திருக்கிறேன். எதிர் வீட்டில், பக்கத்து வீட்டில், கடைக்குப் போன இடத்தில், எல்லா இடத்திலேயும், பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக, பேருந்தில், எல்லா இடத்திலேயும் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஆளுதான் அவங்க..
தேர்தலில் அவ்வளவு வேலை செய்தாங்க. தோற்போம் என்று தெரிஞ்சும் வேலை செஞ்சாங்க. நிர்மலா சீதாராமன் என்ன செஞ்சாங்க, எங்க பார்த்திங்க அவங்கள? ஆனா அவங்க இன்னிக்கு மந்திரி ஆயிட்டாங்க. எங்க அக்காவுக்கு மட்டும் இது புரியாது.
எங்க அக்கா இன்றைக்கு என்ன சொல்லுறாங்க. எனக்கு இந்தி தெரியாததால்தான் என்னால் மத்திய அமைச்சர் ஆக முடியலனு. இந்தி படிக்காததால் நான் எனது வாழ்க்கையில் முன்னேற முடியாது போய்ட்டேன்னு சொல்றாங்க.
எனது வீட்டு பக்கத்துலதான் இந்தி பிரச்சார சபா இருக்கு. தமிழ் நாட்டிலே பூட்டிட்டோமா? போய் படிங்க. இங்கு இந்தி படிக்காதிங்கனு யாரையும் சொல்லல. நல்லா படிங்க. இந்தி பிரச்சார சபா இருக்கும், போய்ப் படிங்க. என்னைய படின்னு நீ சொல்லாத. அதுதான் இங்கே பிரச்சனை. என்னைய படின்னு நீ சொல்லாத. இந்திப் பிரச்சார சபா திறந்து தான் இருக்கு,
யாரும் தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபாவைப் பூட்டிவைக்வில்லை. இந்திப் பிரச்சார சபாவில் மாணவர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்காங்க ஒரு பிரச்சனையும் கிடையாது. போய் படிங்க. ஆனாஅதை என்னை படிச்சுத்தான் ஆகணும்னு சொன்னா படிக்கமாட்டேன்.
தமிழ் நாட்டில எவன் நம்மள மதிக்கலையோ அவனைப் பிடிக்கவே பிடிக்காது, நீ மோசமாகக் கூட இரு, எப்படி வேண்டுமானாலும் செய். ஆனா நீ பார்க்கும் பொழுது அண்ணே வாங்கண்ணேன்னு சொல்லணும் இல்லையா?
தமிழ் நாட்டில் என்ன கோபம் வந்துடிச்சுன்னா, என்ன நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரானு. எதுக்குமே வரமாட்டங்கிற, புயல் அடிச்சாலும் வெயில் அடிச்சாலும் வர மாட்டேங்கிற அந்தக் கோவம் தமிழ்நாட்டுல இருக்கு. அதை அவங்க புரிஞ்சிக்கணும்.