மாட்டுக் கோமியம் குடித்தால் காய்ச்சல் நீங்கும், நோய்கள் விலகும், அது உடலுக்கு மிகவும் நல்லது என்று சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி அண்மையில் ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணம்தான், ஆனால் இந்துத்துவக் காவிகள், தமிழ் மக்கள் மீது தொடுக்கும் ஒருவகையான பண்பாட்டுப் போர் இது.
ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.கவினர் காலூன்ற முடியாத தமிழ்நாட்டில் மாட்டரசியல் / கோமிய (மூத்திர) அரசியலை நுழைக்க முயல்கிறது.
மாட்டு அரசியல் உத்தரப் பிரதேசத்தில் சாணம் கலந்த கோமியம் அதாவது மாட்டு மூத்திரம் குடிக்கும் அளவுக்கு காவிகளுக்குக் கைகொடுத்தது.
அதுபோல 'பசு புனிதம்' என்று இந்துத்துவப் போர்வையில் அதைத் தமிழ்நாட்டிலும் நுழைக்கப் பார்க்கிறது காவி அரசியல்.
அறிவியல் அடிப்படையில் மருத்துவர்களும், அறிவியல் ஆய்வாளர்களும் 'கோமியத்தை' மறுத்து விட்டார்கள்.
ஆனால் அறிவியல், விஞ்ஞானத்தின் வழியாக மருத்துவம் படித்த தமிழிசை சவுந்தரராஜன் மாட்டுக் கோமியத்தை மருந்துக்கு இணையாகச் சொல்கிறார். அண்ணாமலை, எச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்ற காவி இந்துத்துவங்கள் காமகோடிக்கு ஒத்து ஊதுகிறார்கள் என்றால் அதற்குப் பின்னணியில் இருப்பது காவிச் சாயம்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் வாழும் இந்துக்கள், பெரியாரிய சிந்தனையில் இருப்பவர்கள் என்பதை ஒவ்வொரு தேர்தல்களும் சொல்கின்றன.
உ.பியை நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் மாட்டு அரசியல், மாட்டு மூத்திர அரசியல் செய்ய முனையும் காவிச் சங்கிகள், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கூட்டம் தெறித்து ஓடப் போகிறது தமிழ்நாட்டில் இருந்து, தமிழ் மக்களிடம் இருந்து - வழக்கம் போல!
- கருஞ்சட்டைத் தமிழர்