அமித்ஷா, பாஜகவின் தேசியத் தலைவர். அவர் நிர்வாக இயக்குனராக இருக்கும் அகமதாபாத் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் நவ 8-12ம் தேதிகளுக்குள் ரூ500 கோடி பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு கூட்டுறவு வங்கியில் வெறும் மூன்று நாட்களுக்குள் இவ்வளவு அதிகமாகப் பணம் செலுத்தப்பட்டதும், மாற்றப்பட்டதும் எப்படி..? அதுவும் ‘ஊழலற்றவர்களாக’ ‘புனித ஆன்மாக்களாக’, ‘கருப்புப் பணத்தை ஒழிப்பவர்களாக’க் கூச்சலிடும் பாஜகவின் தலைவர் அமித்ஷா நிர்வாக இயக்குநராக இருக்கும் வங்கியில் இந்த நிலையெனில், பாஜகவின் கள்ளப் பண ஒழிப்பின் நோக்கமென்ன?

amith shah 300தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ராணுவத்தை வைத்தும், சங் பரிவாரங்களை வைத்தும் மிரட்டுவதைக் கட்டப்பஞ்சாயத்தாகப் பார்க்காமல் எப்படி பார்ப்பது?

கூட்டுறவு வங்கிகள் பழைய பணத்தை மாற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளில் பழைய பணம் மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு, கேரளா, வங்காளம் போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு கடன் தர விடாமல் கூட்டுறவு வங்கிகளை முடக்கிய பாஜக- மோடி அரசு, தனது குஜராத் மாநிலத்தில் மட்டும் திறந்து விட்டிருக்கிறது. குஜராத்தில் 18 கூட்டுறவு வங்கியில் 17 வங்கிகள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. இதுமட்டுமல்லாமல் குஜராத் அமைச்சர் சங்கர்பாய் சவுத்ரி தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் 200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது.

கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்ற ரிசர்வ் வங்கி தடைவிதித்திருந்த நிலையில் இது எப்படிச் சாத்தியம் என்கிறீர்களா?... ரிசர்வ் வங்கியின் தலைவர், குஜராத்தி மார்வாடி கும்பல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆக, இந்தப் பண முடக்கம் என்பது பாஜகவினர் மட்டும் தங்களது கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் யுக்தி என்பதைத் தவிர்த்து வேறில்லை. குஜராத்தி- மார்வாடிகளுக்கு மட்டுமே இதில் லாபமிருக்கிறது என்பதால்தான் மதுரையில் மார்வாடிகள் பண முடக்கத்தை ஆதரித்து ஊர்வலம் போக முடிகிறது.

குஜராத் பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ யதின் ஓஜா, அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் பணம் செலுத்த நின்றிருந்த பாஜகவின் கும்பல்களைப் பற்றிய வீடியோ தன்னிடம் இருப்பதாகப் பகிரங்கமாக மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு, 56 இன்ச் மோடி இதுவரை பதிலளிக்கவில்லை.

அமித் ஷா எனும் பாஜகவின் தேசியக் கட்சித் தலைவர் செய்திருக்கும் இந்த 500 கோடி ரூபாய் கருப்புப் பணம் குறித்து ‘துணை ராணுவத்தோடு’ ரெய்டு நடத்துவார்களா?

அல்லது ‘இந்த நேர்மை, யோக்கியம், ஊழல் ஒழிப்பு’ நாடகங்கள் எல்லாம் தமிழகம் போன்ற பகுதிகளுக்கு மட்டுமா?

சென்ற டிசம்பர் 19ஆம் தேதி திங்கள் கிழமை, இவ்வங்கியின் அகமதாபாத் ஆஷ்ரம் சாலையில் இருக்கும் தலைமைக் கிளையில் அமலாக்கத் துறையினரால் 7 மணி நேரம் நடத்தபப்ட்ட சோதனை இதுவரை ஊடகங்களால் பகிரங்கப்படுத்தப்பட வில்லை. தமிழகத்தில் நடந்த செய்தி மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாஜக செய்யும் இந்தத் திருட்டுத் தனத்தையும், அயோக்கியத் தனத்தையும் கண்டும் காணாமல், தங்களது கட்சித் தோழர்கள், கட்சிக் கிளைகள் மூலம் மக்களைத் திரட்டாமல், சிறுவணிகர்கள், தொழிலாளர்களைத் திரட்டாமல், தொழிற்சங்கங்களை, பேராசிரியர் சங்கங்களை, மத்திய ஊழியர் அமைப்புகளைத் திரட்டாமல் வீதிக்கு வரவைக்காமல் கள்ள மௌனம் காக்கும் சி.பி.எம் போன்ற கட்சிகள் இருக்கும்வரை பாஜக உயிர் வாழவே செய்யும். இவ்வளவு பெரும் தேசிய நெருக்கடியின் பொழுதும், ஏழைகள் சுரண்டப்படும் பொழுதும் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை இழுக்கு செய்யும் இந்த மார்க்ஸ்சிஸ்ட் கும்பல் இருக்கும் வரை நேர்மையான இளைஞர்கள் காய் அடிக்கப்படுவது நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஒரு புறம் பாஜக-வின் இந்துத்துவத்திற்கு கள்ள மௌனத்தின் மூலம் ஆதரவு, மறுபுறம் இளைஞர்களைக் காயடிப்பது என நகரும் இந்த வலையிலிருந்து மீள்வது அவசியம். மார்க்ஸிஸ்ட் கட்சியின் நேர்மையற்ற தரகுத் தலைமை உடனடியாக முடக்கப்பட்டு நேர்மையான இளைஞர்கள் அக்கட்சியைக் கைப்பற்றவேண்டும்.

இத்தனைக்குப் பிறகும் எவராவது மோடி -பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தால் சரியான முறையில் ஆதாரங்களோடு பதில் தாருங்கள் தோழர்களே.

தேசபக்தியாம், நாடு முன்னேற்றமாம்.

“அமித்ஷாவை கைது செய். பாஜக அமைச்சர்கள், தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்து.”

இதைக் கேட்பதைவிட்டு, தமிழகத்திலிருக்கும் ஊழல் பெருச்சாளிகளை நோக்கி மட்டும் உங்கள் கைநீளுமெனில் நீங்களும் பாஜகவின் கைக்கூலிகள் என்றே அர்த்தம்.

ஊழலைப்பற்றியும், கருப்புபணத்தைப் பற்றியுமான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவினை நோக்கி கை நீட்டாதவர்கள் அயோக்கியர்களே.

அமித்ஷாவின் இந்த அயோக்கியத் தனத்தை வெளிவிடாமல் ஊடகங்கள் முடக்கி இருக்கின்றன. மம்தா மட்டுமே இது குறித்துப் பேசி இருக்கிறார். தமிழக ஊடகங்கள் இதுகுறித்துப் பேசவேண்டும், அம்பலப்படுத்த வேண்டும்.

நேர்மை, யோக்கியதை எனப் பேசும் நிர்மலா சீத்தாராமனிடம் இந்தக் கேள்வியைத் தமிழக ஊடகங்கள் கேட்குமா?

தமிழகத்தின் ஆளும்கட்சி- எதிர்க்கட்சி தலைவர்கள் இதுகுறித்து பேசுவார்களா..?

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும், ஊடகங்களும், சிந்தனையாளர்களும் இதுகுறித்துப் பகிரங்கமாக பேச வேண்டும்.

ஒரே குரலில் பேசத் தமிழகம் தயாராக வேண்டும்.

இல்லையெனில் அழிக்கப்படுவோம்.

Pin It