thivadudhurai aadheenam1973ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் மனிதனை மனிதன் எடுத்துச்செல்லும் கை ரிக்சா இழுக்கும் முறை ஒழிக்கப்பட்டது. கை ரிக்சா உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு இலவசமாகச் சைக்கிள் ரிக்சாக்களும் வழங்கப்பட்டன. மனிதனை உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்லும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இது நடந்து 50 ஆண்டுகள் ஆகப் போகிற நிலையிலும் பார்ப்பனியத்தின் பெயரால் மனிதனை மனிதன் தூக்கிச் சுமக்கும் அவலநிலை இன்றும் தொடர்கிறது.

 மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேசம் என்ற பெயரில், பல்லக்கில் மனிதனை வைத்து மனிதன் சுமக்கும் சுயமரியாதை அற்ற இச்செயல் கடந்த 07.02.2022 அன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வைத் தடுக்க வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களால் காவல்துறைக்கு ஒரு கடிதம் அளிக்கப்பட்டு, புகார் செய்யப்பட்ட நிலையிலும் காவல்துறையின் பாதுகாப்போடு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திராவிடர் கழகத்தின் கடிதத்திற்கு, பட்டினப்பிரவேசம் நிகழ்வு நடைபெறாது என்று காவல்துறையால் உறுதி அளிக்கப்பட்ட நிலையில் அவ்வுறுதி மீறப்பட்டுள்ளது. ஏமாற்று நாடகம் நடத்தப்பட்டுள்ளது. எதிர்ப்புத் தெரிவித்த திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சங்கராச்சாரியார்களே பல்லக்கில் வருவதை விட்டுவிட்ட நிலையில் ஆதீனங்கள் இவ்வாறான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தந்தை பெரியாரின் வழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக அரசின் கவனத்திற்கு இது போன்ற நிகழ்வுகள் கொண்டு செல்லப்படாமல் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறுவதாகத் தெரிகிறது. இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறா வண்ணம், பார்ப்பனியத்திற்குத் துணைபோகிய அதிகாரிகளைத் தமிழக அரசுக் கண்காணித்து அவர்கள்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பகுத்தறிவாளர்களின் கோரிக்கை.

1973ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் மனிதனை மனிதன் எடுத்துச்செல்லும் கை ரிக்சா இழுக்கும் முறை ஒழிக்கப்பட்டது. கை ரிக்சா உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு இலவசமாகச் சைக்கிள் ரிக்சாக்களும் வழங்கப்பட்டன. மனிதனை உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்லும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இது நடந்து 50 ஆண்டுகள் ஆகப் போகிற நிலையிலும் பார்ப்பனியத்தின் பெயரால் மனிதனை மனிதன் தூக்கிச் சுமக்கும் அவலநிலை இன்றும் தொடர்கிறது.

 மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேசம் என்ற பெயரில், பல்லக்கில் மனிதனை வைத்து மனிதன் சுமக்கும் சுயமரியாதை அற்ற இச்செயல் கடந்த 07.02.2022 அன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வைத் தடுக்க வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களால் காவல்துறைக்கு ஒரு கடிதம் அளிக்கப்பட்டு, புகார் செய்யப்பட்ட நிலையிலும் காவல்துறையின் பாதுகாப்போடு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திராவிடர் கழகத்தின் கடிதத்திற்கு, பட்டினப்பிரவேசம் நிகழ்வு நடைபெறாது என்று காவல்துறையால் உறுதி அளிக்கப்பட்ட நிலையில் அவ்வுறுதி மீறப்பட்டுள்ளது. ஏமாற்று நாடகம் நடத்தப்பட்டுள்ளது. எதிர்ப்புத் தெரிவித்த திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கராச்சாரியார்களே பல்லக்கில் வருவதை விட்டுவிட்ட நிலையில் ஆதீனங்கள் இவ்வாறான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தந்தை பெரியாரின் வழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக அரசின் கவனத்திற்கு இது போன்ற நிகழ்வுகள் கொண்டு செல்லப்படாமல் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறுவதாகத் தெரிகிறது. இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறா வண்ணம், பார்ப்பனியத்திற்குத் துணைபோகிய அதிகாரிகளைத் தமிழக அரசு கண்காணித்து அவர்கள்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பகுத்தறிவாளர்களின் கோரிக்கை.

- வெற்றிச்செல்வன்

Pin It