அண்மையில் 25-12-2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தன் எக்ஸ் தளத்தின் மூலம் ஒரு செய்தியைச் சொல்லியிருந்தார். அதில் அவர் "சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது, குணமும் இருக்கிறது. பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளி விவரங்கள், எதிர்காலம் எதிர் நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது" என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஒன்றியத்தின் பன்முகத்தன்மை, கலாசாரம், ஒற்றுமையைச் சீரழிக்கிறது மதவாத பா.ஜ.க. என்பதைத் தெளிவாகக் கோடிட்டு இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

இதுதான் நாட்டின் இன்றைய நிலை.

அதனால் பா.ஜ.க உள்ளிட்ட மதவாதக் காவிக் கும்பல்களைத்  துடைத்தெறிய வேண்டும் இந்த மண்ணில் இருந்து, மக்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்