ஆளு­ந­ருக்கு பதி­லாக ஆரி­ய­னர்!

மாநி­லங்­க­ளுக்கு ஆளு­நர்­கள் வரு­வார்­கள் என்று பார்த்­தோம். ஆனால், ஆளு­ந­ருக்கு பதி­லாக ஆரி­ய­னர்­கள்­தான் வந்து கொண்டு இருக்­கி­றார்­கள். ஆளு­நர் வேலை­யைப் பார்ப்­ப­தற்­குப் பதி­லாக, கல்வி வளா­கங்­க­ளில் சங்­கி­களை உரு­வாக்­கு­கின்ற வேலை­யைத்­தான் செய்து கொண்டு இருக்­கி­றார்­கள். இங்கு ஒரு ஆரி­ய­னர் இருக்­கி­றார். நான் யாரைச் சொல்­கி­றேன் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும்.  உயர்­கல்­வித்­துறை அமைச்­ச­ருக்கு நன்­றா­கவே தெரி­யும்.

திரா­விட இயக்­கம், பல ஆண்­டு­கள் பாடு­பட்டு, தமிழ்­நாட்­டில் நிறைய பல்­க­லைக்­க­ழ­கங்­கள், கல்­லூ­ரி­க­ளைக் கட்டி வைத்­தால், அங்கு எல்­லாம் சென்று விழா என்­கிற பெய­ரில் சங்­கிக் கருத்­து­க­ளைத் தொடர்ந்து பரப்பி கொண்டு வரு­கி­றார். அவ­ருக்கு தமிழ்­நாடு என்ற வார்த்தை பிடிக்­காது. அவ­ருக்கு தமிழ்த்­தாய் வாழ்த்­தும் பிடிக்­காது. திரா­வி­டம் என்­கிற வார்த்­தை­யும் பிடிக்­காது. அவ­ருக்­குப் பிடித்­தது எல்­லாம் ஒன்றே ஒன்­று­தான். ஒரே­யொரு வார்த்­தை­தான் அது என்ன வார்த்தை என்­றால், மன்­னித்­துக் கொள்­ளுங்­கள்.

udhayanidhi stalin 267இவை எல்­லா­வற்­றை­யும் அண்­ணா­வை­யும், திரா­வி­டத்­தை­யும் கட்­சி­யின் பெய­ரில் வைத்­தி­ருக்­கின்ற அடி­மை­கள் என்­றைக்­கா­வது கண்­டித்து இருக்­கி­றார்­களா? இல்லை, கண்டு கொள்­கி­றார்­களா? கண்டு கொள்ள மாட்­டார்­கள்.ஏனென்­றால், அவர்­க­ளுக்கு எது­வுமே தெரி­யாது.திரா­வி­டத்­திற்கு அர்த்­தமே என்ன என்று சொல்­லத்தெரி­யா­த­வர்­தான் அந்­தக் கட்­சி­யின் தலை­வர். ஆனால், இவை எல்­லா­வற்­றை­யும் நாம் கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்டு மக்­க­ளும் தொடர்ந்து கவ­னித்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்.

சங்­கத்­தின் தேவை!

இந்த மாதி­ரி­யான நேரத்­தில் இந்த சங்­கத்­தின் தேவை என்­பது மிக மிக முக்­கி­ய­மா­னது. எனவே இந்த பணியை முன்­னெ­டுத்த பேரா­சி­ரி­யர் அண்­ணன் சுப.வீ அவர்­க­ளுக்­கும், அக்கா அருள்­மொழி அவர்­க­ளுக்­கும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மருத்­து­வர் சகோ­த­ரர் எழி­லன் அவர்­க­ளுக்­கும், இந்த சங்­கத்தை ஒருங்­கி­ணைத்த மாரப்­பன் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கும் என் பாராட்­டு­க­ளை­யும் வாழ்த்­து­க­ளை­யும் நன்­றி­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

முக்­கி­ய­மாக அண்­ணன் சுப.வீ அவர்­கள், அக்கா அருள்­மொழி அவர்­க­ளெல்­லாம் இன்­றைக்கு திரா­விட இயக்­கத்­தின் பேரா­சி­ரி­யர்­க­ளாக இருந்து, நம் திரா­விட இயக்­கக் கொள்­கை­க­ளைப் பட்­டி­தொட்டி எங்­கும் கொண்­டு­போய் சேர்த்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள். நம் கொள்­கையை, வர­லாற்றை எல்­லோ­ரி­ட­மும் சேர்க்­க­வேண்­டும் என்று தி.மு.க இளை­ஞர் அணி­யின் சார்­பாக, கலை­ஞ­ரின் மூத்­தப்­பிள்ளை என்று அவர் எப்­போ­தும் செல்­கின்ற `முர­சொ­லி’­­யில் `பாச­றைப் பக்­கம்’ என்ற ஒரு பக்­கத்தை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆரம்­பித்­தோம்.

அதில் அண்­ணன் சுப.வீ அவர்­கள் `எழுதி வளர்ந்த இயக்­கம்’ என்ற ஒரு தொடரை தொடர்ந்து எழு­தி­னார். அதே­மா­திரி அக்கா அருள்­மொழி அவர்­கள் திரா­விட இயக்க பெண் போரா­ளி­களை பற்றி தொடர்ந்து எழு­தி­னார்­கள்.

நம் மருத்­து­வர் எழி­லன் அவர்­கள் `டாக்­டர் கலை­ஞர்’ என்ற தலைப்­பில், மருத்­து­வத் துறைக்கு நம் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆற்­றிய பணி­க­ளைப் பற்றி ஒரு தொட­ராக எழு­தி­யுள்­ளார். அவர்­க­ளின் கொள்­கைப் பணி போற்­று ­த­லுக்கு உரி­யது. இது­வ­ரைக்­கும் இரண்டு வரு­டங்­க­ளில்

அவர்­க­ளுக்கு நன்றி சொன்­ன­தில்லை. அந்­தப் பணி­க­ளுக்­காக இந்த மேடையை அவர்­கள் மூன்று பேருக்­கும் நன்றி சொல்­வ­தற்­காக பயன்­ப­டுத்­திக் கொள்­கி­றேன்.

திரா­விட இயக்­கம்!

1920-–களில் தமிழ்­நாட்­டில் சமஸ்­கி­ரு­தப் பேரா­சி­ரி­யர்­க­ளுக்கு அதிக சம்­ப­ளம் வழங்­கப்­பட்­டது. எவ்­வ­ளவு தெரி­யுமா மாதம் 300 ரூபாய் வழங்­கப்­பட்­டது. ஆனால், தமிழ்ப் பேரா­சி­ரி­யர்­க­ளுக்கு எவ்­வ­ளவு தெரி­யுமா சம்­ப­ளம். மாதம் வெறும் 75 ரூபாய் சம்­ப­ள­மாக வழங்­கப்­பட்­டது. அதை எதிர்த்­துப் போராடி, தமிழ்ப் பேரா­சி­ரி­யர்­­களின் சம்­ப­ளத்தை உயர்த்­திய இயக்­கம்­தான் திரா­விட இயக்­கம்.

அந்­தக் காலத்­தில் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் சேர வேண்­டும் என்­றால் அந்த மாண­வர்­க­ளுக்கு சமஸ்­கி­ரு­தம் தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்­பது ஒரு அடிப்­படை தகுதி. அப்­போ­து­தான் மருத்­து­வக் கல்­லூரி விண்­ணப்­பங்­களே கொடுக்­கப்­ப­டும். அதை எதிர்த்து போராடி ஒழித்­த­தும் நம் திரா­விட இயக்­கம்­தான். அத­னால்­தான் இன்­றைக்கு பிற்­ப­டுத்­தப்­பட்ட, பட்­டி­யல் இன மாண­வர்­கள் எல்­லாம் மருத்­து­வ­ருக்­குப் படிக்­கி­றார்­கள்.

ஆனால், இன்­றைக்கு எத்­தனை மருத்­து­வர்­க­ளுக்கு இந்த வர­லாறு தெரி­யும். இந்த வர­லாறு எல்­லாம் பல மருத்­து­வர்­க­ளுக்கு தெரி­யவே தெரி­யாது. அந்­தக் காலத்­தில் இருந்த சங்­கி­கள் மட்­டும், நம் கல்வி வளர்ச்­சி­யைத் தடுக்­க­வில்லை. இப்­போது இருக்­கின்ற சங்­கி­க­ளும் அதே வேலை­யைத்­தான் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நீட் க்யூட் என்று பல பெய­ரில் நம் கல்­வி­யைத் தடுக்­க­லாம் என்று பார்க்­கி­றார்­கள்.

குடும்­பத் தொழில்!

நாம் கஷ்­டப்­பட்டு மாண­வர்­களை உயர் கல்­விக்­குக் கொண்டு வர முயற்சி செய்­கி­றோம். ஆனால், சங்­கி­கள் எப்­ப­டி­யா­வது மாண­வர்­களை உயர்­கல்­வி­யி­லி­ருந்து விரட்டி அடிக்க, பல திட்­டங்­க­ளைக் கொண்டு வந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். இப்­பொ­ழு­து­கூட ஒன்­றிய அரசு `விஸ்­வ­கர்மா திட்­டம்’ என்று கொண்டு வந்து இருக்­கி­றார்­கள். நம் மாண­வர்­களை அவர்­க­ளின் குடும்­பத் தொழி­லைச் செய்ய வைத்து, அவர்­க­ளின் படிப்பை கெடுக்­கின்ற திட்­டம்­தானே அது.

திரா­வி­டம் என்ன சொல்­கி­றது, வங்­கிக் கடன் வாங்­கி­யா­வது உயர்­கல்வி படி என்று சொல்­வ­து­தான் திரா­வி­டம். ஆனால் நீ குலத்­தொ­ழில் செய், நான் உனக்கு கடன் தரு­கி­றேன் என்று சொல்­வ­து­தான் ஆரி­யம். இந்த மாதிரி பிற்­போக்­குத்­தன­மான திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­து­விட்டு அதை­யெல்­லாம் நிறை­வேற்ற வேண்­டும் என்று சொல்லி, மாநில அர­சுக்கு தொடர்ந்து நெருக்­கடி கொடுத்­துக் கொண்டு இருக்­கி­றது ஒன்­றிய அரசு.

இதை­யெல்­லாம் நடை­மு­றைப்­ப­டுத்­தாத மாநி­லங்­க­ளுக்கு ஒன்­றிய அரசு அதற்­கான முறை­யான நிதி­யை­யும் ஒதுக்­கு­வது இல்லை. இதற்கு மத்­தி­யில்­தான் நம் திரா­விட மாடல் அரசு மாண­வர்­க­ளுக்கு அடுக்­க­டுக்­கான திட்­டங்­க­ளைக் கொண்டு வந்து கொண்­டி­ருக்­கி­றது.

(கடந்த 26.10.2024  அன்று நடைபெற்ற திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் தொடக்க விழாவில் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.)