துயரங்கள் சீழ்பிடித்த காயங்களை
வெட்டியெறிகிற பொறுமையில்
நீயும் நெருப்புதறினாய்...

காயங்கள் கழிந்தது போக
மிச்சமிருக்கிற தசைத்துணுக்குகளில்
ஒரு கவிதையின் வலிமையை
நான் உயிராக தைத்திருந்தேன்

பயணங்களில் பெட்டிகள்தோறும்
இருக்கைகள் தோறும் நீ உட்கார்ந்த
தடங்களில் யார்யாரோ பயணிப்பதைப்
போல உரிமை கொள்ள முடியாத
ஓர் உறுதிமொழியை உச்சரித்துப்போனாய்...

ஆறிவிட்ட காயங்களுக்குப் பின்னரும்
தீர்க்க முடியாத நோய்க்காட்பட்ட
நோயாளியின் அவஸ்தையைப் போல்
நிழலுக்குள் யாருமறியாமல் கரைகிறதென்
போராட்டம் உனதானதாகவே அப்போதும்...

- ஹரணி

Pin It