அடையாளங்களைத் தொலைத்துவிட்டதாக
அறிக்கையொன்றினை
வெளியிட்டிருந்தானவன்
அறிக்கைகளின் நெகிழ்வும் நொய்மையும்
அறியாதவனல்லன் அவன்

காலங்களில் சுழல்முறை நிகழ்கிறது
கனத்த அடையாங்களூடே
அடையாளங்களற்றவன் என அவன்
நம்பிக்கைகளில் பொய்க்கும்படி
அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம்
நாம்
சில நேரங்களின் குறு பொழுதுகளில்
நம்மோடு அவனும்

- ந.செந்தில்குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.