கீற்றில் தேட...

அறிந்தும் அறியாமல்
செய்யும் தவறுகள்
அய்யப்பசாமி மன்னிக்கலாம்.
அறிந்த தவறு செய்யும்
அண்டை மாநில
அக்கிரமக்காரர்களை
எப்படி மன்னிக்கமுடியும்?

உண்ணாவிரதத்தை
மாதக்கணக்கில்
உற்சாகத்துடன் நடத்த முடியுமா?
உண்மையைச் சொல்லாமல்
உற்சவ மூர்த்திகள்
ஊர்வலம் வருகிறார்கள்

திருடர்களே முந்திக்கொண்டு
திருட்டை ஒழிக்க
திருந்தி சட்டத்தை நாங்களே
அமைந்துவிட்டோம் என்று
தேசமறியச் சொல்லும்போது
திகைத்துப்போய் நிற்கிறோம்!

கோடிக் கணக்கில் பணத்தை
கொள்ளையடித்த கூட்டம்
கூண்டோடு பறந்துவிட்டது,
என்றாலும்
பழகிய மனிதர்களும்
பலனடைந்த ஜீவன்களும்
பாதையை மறந்திருப்பார்களா?

- கதைப்பித்தன்