தமிழ்ப் படைப்புலகில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகள் ஏராளமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் படைப்புகள் சரியான கோணத்தில் அணுகாத தன்மையே பெரும்பாலும் நிகழ்கின்றன.

தக்க விமர்சனமோ, சரியான அங்கீகாரமோ ஒரு படைப்பாளிக்கு கிடைப்பதில்லை. எழுத்துக்களம் அமைப்பு, இதற்கான களமாக ஒன்பதாண்டுகளாக இயங்கி வருகிறது.

நூல் வெளியீடு, இலக்கிய நூல்களின் விமர்சனம் என்று தனது இலக்கிய வகைகளை வகுத்துக் கொண்ட எழுத்துக்களம்-2009 / 2010- இரு ஆண்டுகளும் சேலத்தில் இயங்கி வரும் தாரைப் புள்ளிக்காரர் அறக்கட்டளையோடு இணைந்து இலக்கியப் பரிசுப் போட்டிகளை அறிவித்து பரிசுகளையும், விருதுகளையும் வென்ற இலக்கிய நூலின் ஆசிரியருக்கு வழங்கி வருகிறது.

அதோடு எழுத்துக்களம் விருது என்ற அறிவிப்போடு சுயமாக கடந்த 12.2.2011 அன்று எழுத்தாளரும், தூறல் ஆசிரியருமான சந்தியூர் கோவிந்தனுக்கு தொல்லியல் விருதினையும், 22.5.2011 அன்று கவிஞரும், புன்னகை இதழின் ஆசிரியருமான கவிஞர் க.அம்சப்ரியாவுக்கு எழுத்துக்களம் கவிதை விருதினையும் வழங்கியுள்ளது.

தொடர்ந்து தீவிர இலக்கியத் தளத்தில் இயங்கி வருபவர்களுக்கான அங்கீகாரத்தை எழுத்துக்களம் அமைப்பு பகிர்ந்து வருகிறது.

Pin It