கீற்றில் தேட...

கன்றுண்ணாது ததும்பும் மடியென
வழிந்தன குளம் குட்டைகள்

விவரமறிந்த நாள் தொட்டே கிடக்கும்
வறண்ட கிணற்றிலும் நீர்

பிணி நீங்கியவர்களாக
துளிர்ப்பில் மரங்கள்

திக்குகள் யாவும் பச்சயம் பூக்க
கொழுத்துத் திரியும் கால்நடைகள்

எல்லோருள்ளும் ஈரம் நசநசத்திருக்க
போர்வையிட பேகன் இல்லாது
நடுங்கும் மயிலென
தகிக்கச் செய்தாய் 'பாலை'யில்.

- ந.பெரியசாமி