26ம் மாடியிலிருந்து தீவைத்துக்
கொண்டு கீழே குதித்தவள்
இன்னும் கொன்று கொண்டிருக்கிறாள்
புன்னகையெங்கும் வழிகிறது
வென்றுவிட்டதின் இறுமாப்பு
மரணம் நிகழ்தலின் சாபங்கள் தெரியாமல்
வாழமுடியாதவனுக்கான வரமென
நினைத்துக் கொண்டவளை பார்த்தால் சொல்லுங்கள்
வாழ முடியாதவனுக்கு
வாழ்க்கை தவிர எதுவுமே வரமில்லை.
- லதாமகன்