அம்மாவின் விரல் பிடிக்காமல்
அதிகாலைப் பேருந்தின்
சற்றே உயரமான படிகளில்
சிறிய மெனக்கெடலுடன் ஏறி
பற்றுதலுக்கான கம்பி நோக்கி விரைவதற்குள்
முன்னகர்ந்த பேருந்தினுள்
தள்ளாடிச் சரியும் சிறுமியின்
இடது முழங்கைச் சிராய்ப்புகளில்
பிறக்கும் பெருங்குரலெடுத்த அழுகையில்
நிசப்தம் உடைந்து துயிலெழுகிறது இம்மாநகரம்
- சிவகுமார்