கடந்தவருடம் குடமுழுக்கிட்ட
பளபள பரமசிவனைச்
சுற்றிச் சும்மாக் கிடந்த
முன்னாள் காலிமனைகளில்
முளைத்தன
பன்னாட்டு பல அடுக்குகள்
பக்கத்து நாயக்கர் ஓட்டு வீடு
நாயுடு ஹாலாகவும்
எதிரே பிட்சா ஹட்டும்
இன்னும் கொஞ்சம் நகர்ந்தால்
வாங்ஸ் கிச்சனும்
உடன் இருபத்திநாலு மணி நேர
ஏடிஎம் செக்யூரிட்டியுடன்
யாரோ சொன்னார்கள்
ஏதோ மொழியில்
அந்தச் சூழலுக்கு
இந்தக் கடவுள் ஒட்டவில்லையென.
உபயோகமற்று உறைந்து கிடந்தது
கேட்பாரற்ற நெற்றிக்கண்தீ
- சித்தன்