கீற்றில் தேட...

எனது அன்பின் பெருக்கில்
உன்னைச் செல்லமாய்
தட்டவிழைந்தாலும்
பலத்த அடியாகிப் போய்விடும்
அபாயம் இருக்கிறது
லேசா அணைக்க நினைத்தாலும்
எலும்புகள்
நொறுங்கிவிடலாம்
செல்லமாய்க் கிள்ளிப் பார்க்க விரும்பினால்
மண்ணள்ளும் இராட்சத இயந்திரங்களின்
விரல்கள் நினைவிலெழுந்து மிரட்டுகிறது
உன்னாலேயே அறிந்து கொண்டேன்
முத்தம் என்பது ஏன் இத்தனை
உன்னதமானதாயிருக்கிறதென்று.

- சா.முத்துவேல்