ஆவணம்-2

பேராசிரியர் தனிநாயகம் அவர்களின் நூல்கள், இதழ்களில் எழுதிய கட்டுரைகள், மாநாடுகளில் நிகழ்த்திய ஆய்வுரைகள் மற்றும் அவர் நிகழ்த்திய ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆகியவைகளை கால ஒழுங்கில் தொகுத்துள்ளோம். அவரது முதுநிலை (Master)  மற்றும் முனைவர் பட்டத்திற்கு செய்த ஆய்வுகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. சில கட்டுரைகளும் தொகுத்து நூலாக்கம் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளில் அவர் செய்த பயணம் குறித்த நூல் ‘ஒன்றே உலகம். அவரது சொற்பொழிவுகளும் நூல் வடிவம் பெற்றுள்ளன.

பேராசிரியரது கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளவர்கள், கால ஒழுங்கைப் பின்பற்றவில்லை. அவை வெளிவந்த விவரங்கள் குறித்த தகவல்களையும் முறையாகக் கொடுக்கவில்லை. பேராசிரியர் குறித்த ஆய்வில் ஈடுபடுவோருக்கு இத்தன்மைகள் சிக்கல்களை உருவாக்கும். பேராசிரியரின் ஆக்கங்கள் பெரிதும் கட்டுரைகளே ஆகும். இக்கட்டுரைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் தேவையுண்டு.

பேராசிரியரின் ஆக்கங்களைக் கால ஒழுங்கில் அணுகும்போது அவரது படிநிலை மாற்றங்களைக் காண முடிகிறது. தொடக்கத்தில் கிறித்தவ சமயம் சார்ந்து பொதுவான கட்டுரைகளை எழுதியுள்ளார். பின்னர் சமயம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டபோது, பல்வேறு சமயம் சார்ந்த கருத்துநிலைகள் அடிப்படையில் ஆய்வு செய்திருப்பதைக் காணமுடிகிறது. காலப்போக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனாக சேர்ந்த காலம் முதல் தமிழியல் ஆய்வில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

சங்க இலக்கியம் குறித்த விரிவான புரிதல் உருப்பெற்ற காலத்தில் அதன் அடிப்படைகளை தமது ஆய்வாக தேர்வு செய்து கொண்டார். உலகம் முழுவதும் பயணம் செய்த அநுபவம் சார்ந்து, உலகின் பல நாடுகளிலும் உள்ள  தமிழர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். இவ்வாய்வுகள், உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டு, மாநாட்டுத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. ஈழத்தமிழரின் உரிமைகள் தொடர்பாகவும் அவ்வப்போது பல சிறுவெளியீடுகளை பேராசிரியர் எழுதி வெளியிட்டார். பேராசிரியர் மேற்குறித்த பாங்கில் எழுதிய ஆக்கங்களை இப்பகுதியில் தொகுத்துள்ளோம்.

இப்பதிவுகள் முழுமையானது என்று கூறமுடியாது. கால ஒழுங்கு மற்றும் பொருள் ஒழுங்கில் முழுமையான ஆய்வடங்கல் (Annotated Bibliography) ஒன்றைப் பேராசிரியர் ஆக்கங்களுக்கு உருவாக்குவது அவசியம்.

நூல்கள்

1) 1950, The cartheginian clergy, Tamil literature society, Tuticorin

பேராசிரியர் ரோம் நகரில் தமது குருத்துப் பயிற்சியை மேற் கொண்ட காலத்தில் எழுதிய ஆய்வேடு இந்நூல். இது 1947ஆம் ஆண்டில் முதல் பதிப்பும் 1950இல் இரண்டாம் பதிப்பும் வந்தது. தமிழிலக்கியக் கழகத்தின் வெளியீடாக இரண்டு பதிப்புகளும் கொண்டு வரப்பட்டன.

2) 1952, தமிழ்த்தூது, தமிழ் இலக்கியக் கழகம்

இந்நூலில் பேராசிரியரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1959ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்தபோது மேலும் சில கட்டுரைகள் இணைக்கப்பட்டன. 1962ஆம் ஆண்டில் சென்னை பாரி நிலையம் இந்நூலின் நான்காம் பதிப்பை வெளியிட்டுள்ளது.

3) 1961, நம் மொழியுரிமைகள், 3ஆம் பதிப்பு, நந்தன் பதிப்பகம், கண்டி

தனிச் சிங்களச் சட்டம், 1956இல் சிங்களப் பேரினவாத அரசால் கொண்டு வரப்பட்டபோது அதனை மறுத்து பேராசிரியர் எழுதிய குறு நூல் இதுவாகும்.

4) 1966, A reference guide to Tamil studies, University of Malaya, Kuala Lampur. (தொகுப்பு நூல்)

இத்தொகுப்பில் 1355 நூல்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 1960ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில் தமிழியல் ஆய்வு உலக அளவில் நடைபெற்றதை அறிய இந்நூல் உதவுகிறது. பல்வேறு நாடுகளிலும் உள்ள 18 அறிஞர்கள், பேராசிரியர்கள் தனிநாயகம் அடிகளுக்கு அனுப்பியக் குறிப்புகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

5) 1966, ஒன்றே உலகம், பாரி  நிலையம், சென்னை

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயண அனுபவத்தை இந்நூலில் வெளிப்படுத்தி யுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழர்கள் குறித்த விரிவான குறிப்புகளை பதிவு செய்துள்ளார். 1974ஆம் ஆண்டு இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. தற்போது மூன்றாம் பதிப்பாக 2012இல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்ப் பேராயம் வெளியிட்டுள்ளது.

6) 1967, திருவள்ளுவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தனிநாயகம் திருக்குறள் குறித்து நிகழ்த்திய சொற்பொழிவை அப்பல்கலைக் கழகம்  ‘திருவள்ளுவர்’ எனும் தலைப்பில் 1967ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

7) 1968, Tamil Studies Abroad, The International Association of Tamil Research (தொகுப்பு நூல்)

பல்வேறு நாடுகளில் தமிழியல் ஆய்வு குறித்த  விரிவான விவரங்களை இந்நூலில் காண முடியும். உலகின் பல நாடுகளில் நடைபெறும் தமிழியல் ஆய்வு பற்றிய விவரங்களை அந்தந்த நாட்டில் உள்ள அறிஞர்கள் தொகுத்து அனுப்பினர். அதனை பேராசிரியர் தனிநாயகம் அடிகள் இத்தொகுப்பு நூலாக உருவாக்கியுள்ளார்.

8) 1970, Tamil culture and civilization : Readings - The Classical Period, Asia Publishing House, London (தொகுப்பு நூல்)

மலாயா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்தபோது மாணவர்களுக்குத் தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும் என்ற பாடத்தை நடத்தி வந்தார். மாணவர்களுக்கு உதவும் வகையில் மேற்குறித்த பொருண்மை சார்ந்த பல்வேறு கட்டுரைகளைத் தொகுப்பு நூல் வடிவில் கொடுத்தார். இத்தொகுப்பில் மிகச்சிறந்த அறிஞர்களின் கட்டுரைகள் தெரிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

9) 1980, தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும், Research in Tamil studies : Refrospect and Prospect, Thanthai Chelva memorial Trust, Jaffna

தந்தை செல்வா அறக்கட்டளையின் மூலம் பேராசிரியர் தனிநாயகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகள் இக்குறு நூலில் இடம் பெற்றுள்ளன.

10) 1997, Landscape and Poetry a Study of Nature in Classical Tamil Poetry

பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை எனும் இந்நூல் எம்.லிட்., பட்டத்திற்கான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கப் பட்ட ஆய்வேடாகும். 1972இல் ‘Nature in ancient Tamil Poetry’ எனும் தலைப்பில் தமிழ் இலக்கிய கழகத்தால் வெளியிடப்பட்டது. பின்னர் 1963இல் சிங்கப்பூரில் இந்நூல்‘Nature poetry in Tamil :The classical period’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. 1966ஆம் ஆண்டு பம்பாய் ஆசிய வெளியீட்டகத்தின் சார்பில் இந்நூல் Landscape and poetry : A study of nature in classicasl tamil poetry  எனும்  தலைப்பில் வெளியிட்டனர். இந்நூலே உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

11) 2009, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி, மொழியாக்கம் : ந.மனோகரன், மாற்று, சென்னை.

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் Tamil Culture இதழில் பண்டைத் தமிழ் கல்வி பற்றி எழுதிய நான்கு ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

12) 2010, Educational Thought in Ancient Tamil Liteature, Bharathidasan University, Tiruchirappalli-24

1955-1957ஆம் ஆண்டுகளில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள் எனும் பொருளில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். அந்த ஆய்வேடு இப்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மாநாட்டுத் தொகுப்புகள்

  • Proceedings of the first International Conference Seminar of Tamil Studies, Kulala Lumpur
  • International Association of Tamil Research, Proceedings of the Third International Conference Seminar, Paris
  • The culture problems of Malyasia in the contact of South - East 1965. The Malayasian Society of Orientalists

பேராசிரியர் - நூல் தொகுப்புகள்

பேராசிரியர் தனிநாயகம் நூற்றாண்டையட்டி அவருடைய ஆக்கங்கள் பின்வரும் வகையில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

  • 2013, தனிநாயகம் அடிகளாரின் படைப்புகள், தனியாக அடிகளார் நூற்றாண்டு விழாக் குழு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108 (முதற் பதிப்பு) இத்தொகுப்பில் ஒன்றே உலகம், திருவள்ளுவர், சங்க காலத்தில் விரிவாகும் ஆளுமையின் இயல்பு, தமிழர் பண்பாடும் அதன் சிறப்பில்புகளும், தமிழ்த்தூது ஆகிய நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
  • 2013 Complete Works of Thaninayagam Adigalar vol-I, Thani Nayagam Adigalar Centenary Celebrations Committee (First Edition)
  • 2013, Complete Works of Thaninayagam Adigalar Vol-II, Ed:Thani nayagam Adigalar Centenary Celebrations Committee, (First Edition)

சொற்பொழிவுகள்

பேராசிரியர் தனிநாயகம் நிகழ்த்திய சொற்பொழிகள் தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1959-1960, Aspects of Tamil Humanism

1962  Indiajn Thought and Roman Stoicism, an Inaugural Lecture Delivered on 14th December, University of Malaya, Kuala Lumpur

1967  Tiruvalluvar, Sornammal Endowment Lectures, Annamalai University

1972  The Humanistic Scene

1972  The Humanistic Ideals

1972  Tamil Humanism - The Classical Period

1997  The Tirukkural and the Greek Ethical Thought

1980  Research in Tamil Studies, - Retrospect and Prospect

1980  தமிழர் பண்பாடும் அதன்  சிறப்பியல்புகளும்

இதழ்கள்

Bottled Sunshine

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் கிறித்தவக் குருமாராகப் பணி யாற்றியபோது பல்வேறு கிறித்தவ இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அவ்வகையான இதழ்களில் ஒன்றே, மேலே காணப்படும் இதழ். இவ்விதழில் தனது இளமைக்காலப் பெயரில் கட்டுரைகளை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இவ்விதழ் வெளிவந்தது. கட்டுரைகள் அனைத்தும் பொதுவான பொருண்மை களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

The messenger of the Sacred heart for Ceylon

கொழும்பிலிருந்து வெளிவந்த மேற்குறித்த இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் கீழ்வரும் வகையில் அமைந்துள்ளன. இவ்விதழும் கிறித்தவ சமயச் சார்பிதழே.

  • 1933, Oct., The Hound of Heaven
  • 1933, Nov., The Hound of Heaven
  • 1933, Dec., Sea Shells
  • 1934, Jan., A square Mile of Waterfalls
  • 1934, Mar., A Peep into Childhood Lane
  • 1934, Mar., Lead Kindly Light
  • 1934, Apr., Poor thief of Song
  • 1934, May, The run-stalers
  • 1934, July, A showler of rain
  • 1934, Aug., A borrowed Idea
  • 1934, Sep., Thomsonian cameos
  • 1934, Dec., The path to Rome
  • 1935, Apr., The path to Rome
  • 1935, May, The path to Rome
  • 1941, July, The cricketer’s poet

Tamil Culture

1952 முதல் 1966 வரை இவ்விதழ் வெளிவந்தது. முதல் நான்கு ஆண்டுகள் தூத்துக்குடி கல்விக் கழகத்தின் மூலமே இவ்விதழ் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலமாக இவ்விதழ் வருவதற்கு மானியம் வழங்கப்பட்டதை அறிகிறோம். 45 இதழ்கள் வெளிவந்துள்ளன. இதில் சுமார் 350 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிஞர்கள் தமிழியல் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

  • 1952  Feb., This Quarterly Review, 1:1
  • 1952  June, The Survival of Tamil Culture, 1:2
  • 1952  Sep., The Ethical Interpretation of Nature in Ancient Tamil Poetry, 1:3&4
  • 1953  Render upto Tamil the Things that are Tamil, 2:1
  • 1953  The Tamils said it all with Flowers, 2:2
  • 1952  Statesmen and Scholarship, 2:3
  • 1954  The Teaching of Tamil, 3:1
  • 1954  Tamil Manuscripts in European Libraries, 3:3&4
  • 1955  The Journal of the Academy, 4:1
  • 1955  Tamil Culture Influences in South East Asia, 4:3
  • 1955  Tamil Culture - Its past its Present and its Future with Special Reference to Ceylon, 4:4
  • 1956  Ancient Tamil Literature and Study of Ancient Indian Education, 5:1
  • 1956  The Educator of Early Tamil Society, 5:2
  • 1956  Languages Rights in Ceylon, 5:3
  • 1957  A Seminal Period of Indian Thought, 6:1
  • 1957  A seminar Period of Indian Thought, 6:3
  • 1957  Ancient Tamil Poet Educators, 6:4
  • 1958  The Philosophic Stage of Development in Sangam Literature, 7:1
  • 1958  The First Books Printed in Tamil, 7:3
  • 1959  The Tamil Development and Research Council. 8:1
  • 1959  The Vocabulary and Content of Tamil Primers and First Readers, 8:3
  • 1959  Earliest Jain and Buddhist Teaching in the Tamil, 8:4
  • 1961  Dr. R.P.Sethupillai, 9:3
  • 1961  A bibliographical guide to Tamil Studies, 9:4
  • 1963  Regional Nationalism in Twentieth Century Tamil Literature, 10:1
  • 1963  The Novelist of the City of Madras, 10:2
  • 1963  Indian Thought and Roman Stoicism, 10:3
  • 1963  Nature and the Natural in Kalyanasundaranar, 10:4
  • 1964  Antuo de Proenca’s Tamil - Poratuguese Dictionary 1679 an Introduction, 11:2
  • 1964  Preface to the Tamil - Portuguese Dictionary, 1679, 11:2
  • 1966  Apperception in Tamil literary Studies, 12:283

Journal of Tamil Studies

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் தமிழக அரசு உதவியுடன், சென்னையில், உயர் கல்வி ஆய்வு நிறுவனம் ஒன்றை தமிழியல் ஆய்வுக்காக உருவாக்கத் திட்டமிட்டார். இதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்ட இதழே மேற்குறித்த இதழ். 1969 இதழ் ஒன்று பகுதி இரண்டில் உலகம் தழுவிய தமிழியல் ஆய்வு குறித்த விரிவான ஆவணங்களைப் பதிவு செய்துள்ளார்.

  • 1969  Two Decades of Tamil Studies, 1:1
  • 1969  International Association of Tamil Research (a) Notes (b) Constitution, 1:1 part II
  • 1969  International Conference - Seminar of Tamil Studies (a) Copy of Invitation Sent to Delegates (b) Review of the Conference by Dr.H.F.Owen, 1:1 Part II
  • 1969  International Institute of Tamil Studies (a) Notes (b) Detailed Project (c) Second Report Re-phasing of the Programme and the Budget, 1:1 Part II
  • 1969  Journal of Tamil studies (a) Announcement (b) Style Sheet for the Guidance of Contributors, 1:1 Part II
  • 1969  Register of Scholars for Service in Institutions in India and Abroad, 1:1 Part II
  • 1969  News and Notes (a) Pottery will tell the story of man (b) Decipherment of Indus vally script (c) South Asia Centre Kansan Varsity, 1:1 Part II
  • 1969  Tamil Emigration to the Martinique, 1:2
  • 1972  Tolkappiyam - The Earliest Record, 1

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் வேறு சில இதழ்களிலும் ஒரு சில கட்டுரைகள் எழுதினார். அவ்விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

  • 6.11.1953 The Times of Ceylon, Inadequacy of Literature in the Swabasha
  • 8.2.1954 The Times of Ceylon, Swabasha, The Indian Experiment
  • 16.6.1962 Malayan Times, Religion and Culture
  • 1966, July Eastern Horizon, Ancient Tamil Poetry
  • 1953, Jan. - Mar., - Liturgical arts, Catholic Religious Art in South India
  • 1963, Apr - June, Paedagogica Historia, The Typology of Ancient Indian Education
  • 1959, July-Dec., The Ceylon Journal of Historical and Social Studies, The Scope of adult education
  • 1959, July-Sep., Journal of the National Education Society of Ceylon, The Vocabulary and Content of Tamil Primers and First Readers
  • 1960, Nov., Journal of the National Dducation Society of Ceylon, The Philosophy and Practice of  Teacher Education
  • 1961, Mar.-Sep., Journal of the National Education Society of Ceylon, Aspects of  Secondary Education in Western Europe
  • 1959, July, The Ceylon journal of historical and Social studies, The Scope of Adult Education
  • 1942-43 The Anthonian, The Poetry of Kayts
  • 1949  St. Patrick’s Annual, Don Eogenius Pacelli
  • 1953  Catholic Christmas annual, The Catholic Contributiojn to Tamil literature
  • 1960-61, Annuals of Oriental Research of the University of Madras, Aspects of Tamil Humanism. The Ideals of the Expanding self
  • 1975, Religious and Social Issues, Religion and Society
  • 1961, Dr.R.P.Sethuppillai Silvar Jubilee Commemoration Volume, The Thirukkural and Greek Ethical Thought
  • 1965, Nov., Siam Society Felicitation Volume of South East Asian Studies, Classical Love Poetry in Tamil

சத்தியவேத பாதுகாவலன்

  • 1949, சித்திரை 21, பனிரெண்டாம் பத்திநாதர்
  • 1951, வைகாசி 03, சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு
  • 1951, வைகாசி 17, பிறமொழிக் கலப்பால் ஒரு மொழி சிதையவே செய்யும்: தமிழில் உரையாடுகையில் தனித்தமிழ் மொழியைக் கையாள வேண்டும்
  • 1951, ஆவணி 9, தமிழ்த் தூது
  • 1951, கார்த்திகை 1, தமிழின் வளர்ச்சி
  • 1951, கார்த்திகை 22, அர்ச் அருஸ்தீனின் புகழ் உரை நூல்
  • 1954, மாசி 18, கீழ்த்திசை நாடுகளில் அச்சுக்கண்ட முதல் நூல்கள் தமிழ் நூல்களே.
  • 1952, தமிழ் ஓசை (தொகுதி 2), மலரும் மாலையும்
  • 1956, கல்கி தீபாவளி மலர், தமிழ்ச்செல்வங்கள்
  • 1958, கல்கி தீபாவளி மலர், முதல் அச்சேறிய தமிழ் நூல்கள்
  • 1958-59, இளங்கதிர் (தொகுதி), ஒற்றுமை அமெரிக்கா
  • 1960, ஆடி-மார்கழி, சமூக மஞ்சரி, முதிர்ந்தோர் கல்வியின் விரிவு
  • 1961, தை-ஆனி, கலைப்பூங்கா, திருக்குறளும் கிரேக்க ஒழுக்க இயலும்
  • 1963, சித்திரை, கல்வி, கல்வியின் நோக்கம்
  • 1963, ஜூன், தமிழ் நேசன், மலேசியாவின் தமிழ் எழுத்தாளரும் அவர் பணியும்
  • 1971, ஆனி, ஈழ நாடு, தமிழ் மொழியின் வேர் இயல்
  • 1980, அக்டோபர், வீரகேசரி, வீரமாமுனிவர் : தமிழாராய்ச்சிக்குப் பங்களிப்பு செய்த ஐரோப்பிய தலைமகன்
  • 1963, கலைக்களஞ்சியம், தொகுதி 9, வீரமாமுனிவர் (1680-1747)
  • 1966, கல்கியின் வரலாற்று நூல்கள், பதிப்பு : கா.பொ.இரத்தினம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை

மாநாடுகள்

பேராசிரியர் தனிநாயகம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மூலமாக (IATR) நடைபெற்ற மாநாட்டுக் கட்டுரைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் பின்வருமாறு அமை கின்றன. இதில் இரண்டு மாநாட்டுத் தொகுதிகளை இவரே பதிப்பித்தார்.

  • 1960  Educator Typology in Ancient Tamil Literature, International Congress of Orientalists xxvth, Moscow
  • 1965  Ideals and Values Common to South and South East Asian Cultures, Proceedings of the Malaysian Society of Orientalists
  • 1966  Chairman’s Introductory Remarks, Proceedings of the International Conference Seminary of Tamil Studies, Kula Lumpur, (முதல் தொகுதி 1968)
  • 1966  Appereption in Tamil Literary Studies, (இரண்டாம் தொகுதி - 1968)
  • 1967  The period of Ethical Literature in Tamil : Third Century to the Seventh Century A.D., Paracidanum - Indian, Iranian and Indo - European studies, The Houge Moutan
  • 1968  Tamil Migrations to Guadeloupe and Martinique 1853-1883, Conference Seminar of Tamil Studies, Madras (இரண்டாம் தொகுதி - 1971)
  • 1968  Tamil Trade, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு விழா மலர், சென்னை
  • 1970  The Study of Contemporary Tamil Groups, Conference Seminar of Tamil Studies, Paris Pondicherry
  • 1974  Inaugural Address, (நான்காவது மாநாடு - முதல் தொகுதி)
  • 1974  ஆரம்ப உரை, (நான்காவது மாநாடு - இரண்டாம் தொகுதி)
  • 1981  சங்க இலக்கியத்தில் விரிவாகும் ஆளுமையின் பண்பு, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு விழா மலர், மதுரை.

ஆய்வேடுகள்

  • The Cartheginian Clergy : During the Episcopate of Saint Cyprian. Colombo : Ceylon printers 1947, pp xviii&112p. Doctoral thesis at Ponifical urban Univerisity, Rome, 1939
  • “Nature in Ancient Tamil poetry : Concept and intepreation” Tuticorin : Tamil literature society, 1953 xxii, 185 pp. Thesis (M.Litt.,) Annamalai University, Madras 1949. Party Revised and Published under the Title : Nature Poetry in Tamil : The Classical Period 1963
  • Educational Thought in Ancient Tamil Literature. Thesis Submitted to the University of London for the Ph.D., Degree 1957, Published by Bharathithasan University in 2012.

இப்பதிவுகளைத் தொகுத்த வி.தேவேந்திரன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர்.

Pin It