பொது வாழ்வில் அடியெடுத்து வைத்தது முதல் தன் வாழ் நாள் முழுக்க தன் மரியாதை, பகுத்தறிவு கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு   முதலான சமூக சீர்திருத்த விழிப்புணர்வுச் சிந்தனைகளைப் பேசியும் எழுதியும் வந்த பெரியாரின் கருத்துகளை நூல்களாக வெளியிட தங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு, வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது என அதற்குச் சொந்தம் கொண்டாடி அவற்றைச் சிறைப்படுத்தி வைத்திருந்த திராவிடர் கழகம் வீரமணிக்கு சென்னை உயர்நீதி மன்ற இருவர் ஆயம் ஒரு திருப்பு முனைத் தீர்ப்பை  வழங்கியுள்ளது. நீதிபதிகள் கலிபுல்லா, மற்றும் கிருபாகரன் ஆகிய இருவர் கொண்ட ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பின்படி  பெரியாரின் சிந்தனைகளை இனி யார் வேண்டுமானாலும் நு£லாக வெளியிடலாம். தனித்த குறு நு£ல்களாகவோ  கனத்த தொகுப்புகளாவோ எப்படி வேண்டுமாமனாலும் கொண்டு வரலாம் தனிப்பட்ட யாரும் அதற்கு உரிமை கொண்டாடவோ சொந்தம் கொண்டாடவோ முடியாது. ஆக பொது நல நோக்கோடு வாழ்ந்த  பெரியாரின் சிந்தனைகளை தனக்கு மட்டுமே சொந்தம் எனத் தன்னல நோக்கோடு சிறைப்படுத்தி வைத்திருந்த ஆதிக்கவாதி களிடமிருந்து பெரியாருக்கு விடுதலை கிடைத்ததில் உண்மையான பெரியார் தொண்டர்களுக்கும், சமத்துவ சமூக நீதிச் சிந்தனையாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

இனி பெரியார் சிந்தனைகளை யாரும் வெளியிட எந்தத் தடையும் இல்லை. இந்த மகத்தான வெற்றி கரமான தீர்ப்பைப் பெறுவதில் பெரு முயற்சி எடுத்துக் கொண்டு அதற்காக உழைத்த பெரியார் திராவிடர் கழகம் தானே முதலில் இதற்கு முன்னோடியாய் விளங்கும் வகையில் இவற்றை இணையத்தில் பெற விரும்புவோர்க்கு இலவசமாகவே அதை வழங்கும் வகையில் அதற்கான  ஏற்பாடுகளைச்  செய்துள்ளது. தேவைப்படுவோர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   என்கிற முகவரிக்குத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான நு£ல்களை கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ளலாம்
Pin It