பம்பாய் அய்.அய்.டியில் ஷகில்வாக்கோடு என்ற இரண்டாம் ஆண்டு படிக்கும் தலித் மாணவர் ஜாதிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பேராசிரியர் ஒருவரின் ஜாதிவெறிச் செயல்படுகளால் இந்தத் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு சூரியநாராயணாடூலா என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அவர் விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். தொடர்ந்து அய்.அய்.டி, அய்.அய்.எம்-களில் தலித் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெரும்பான்மை மாணவர்கள் போராடி வருகிறார்கள். இதுகுறித்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள குழு ஒன்றையும் அய்.அய்.டி நிர்வாகம் அமைத்திருக்கிறது.

இந்தப் பிரச்சனையில் அய்.அய்.டி பார்ப்பன உயர்ஜாதி அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு என்றும், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவரின் தந்தை வலியுறுத்தியிருக்கிறார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தான் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தலித் மாணவர் தேர்வு எழுத செல்லும் போது தனது அலைபேசியை பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுத முயன்றார் என்று கூறப்படுவது பொய் குற்றச்சாட்டு என்றும், அதற்கான சிசிடிவி கேமரா காட்சிகளை காட்ட முடியுமா? என்றும் போராடும் மாணவர்கள் கேட்கிறார்கள்.

தலித் மாணவர்கள் தற்கொலைகளால் பம்பாய் அய்.அய்.டி கல்லூரி வளாகங்களிலும் விடுதிகளிலும் தொங்கு மின்விசிறிகள் அகற்றப்பட்டு சுவர் மின்விசிறிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.  தொங்கும் மின்விசிறி தூக்கில் தொங்குவதற்கு பயன்படுவதே இந்த மாற்றத்திற்கான காரணம்.

பார்ப்பனர்களின் ஜாதியப் பாகுபாடுகளால் அய்.அய்.டி, அய்.அய்.எம்-களில் 13,600 பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே இடைநிறுத்தம் செய்துவிட்டு வெளியேறுகிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தின் பணிக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.