சென்னிமலை கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் அவர்கள் 17 வயதில் தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்திற்கான பெரியாருடைய எதிர்நீச்சல் பணிக்கு வந்தவர். தற்போது 82 வயதிலும் பெரியாரியப்பற்றுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழராக வாழ்ந்து வருகிறார்.karattupalayam chellappan with periyar cadresவயது முதிர்வு காரணமாக பெரியார் பெருந்தொண்டர் சென்னியப்பன் அவர்களின் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், திருப்பூர் முத்து, அய்யப்பன் ஆகியோர் ஜூன் 11, 2026 அன்று மாலை தோழரின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

சிறுவயதில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் மதச் சடங்குகளுக்கு எதிராகவும் அன்றைய 1960,1970 காலகட்டங்களில் இருந்த மிகக் கொடுமையான ஜாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செய்த பணிகளையும் பெரியாரிய இயக்கங்களில் நடந்த போராட்டங்கள் பிரச்சாரங்கள் சிறைக்குச் சென்று வந்த அனுபவம் ஊரில் கவுண்டர்கள் தாழ்த்தப்பட்டவர்களை நடத்திய ஜாதிக் கொடுமைகள் மற்றும் கவுண்டர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்களை அந்தப் பகுதியில் வாழ்ந்த பார்ப்பனர்கள் "வாடா போடா" என்று அழைத்து அவமரியாதை செய்வது வழக்கம். அதை எதிர்த்த அன்றைய திராவிடர் கழக தோழர்களின் "கலகங்களையும்" ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் மீது ஊரில் உள்ள ஆதிக்க ஜாதியினர் செய்த கொடுமைகளை நேரில் பார்த்தவற்றையும் இன்று 2020, 2026 இல் சாதரணமாக நடக்கும் ஜாதி மறுப்புத் திருமணங்களையும் ஒப்பிட்டு மாற்றங்களைப் பற்றி பேசினார்.

பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை திருவாரூர் தங்கராசு, கோவை இராமகிருஷ்ணன், திருச்சி செல்வேந்திரன் போன்றவர்களை அழைத்து வந்து நடத்திய நிகழ்ச்சிகள், கிராமங்களில் சமூக விழிப்புணர்வூட்டும் நாடகங்களை நடத்தியது என தொடர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு "இறுதியாக நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டே வீட்டிற்குள் போய் தன் மரண சாசனத்தை எடுத்து வந்து காட்டி எப்படியாவது என் உடலை மட்டும் நான் எழுதி வைத்த படி எந்த மூடநம்பிக்கை மதச் சடங்குகள் செய்யாமல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைத்து விடுங்கள் "கோட்டை விட்டு விடாதீர்கள், கோட்டை விட்டு விடாதீர்கள்" என்று பலமுறை கூறி கழகத் தோழர்களை வழி அனுப்பி வைத்தார்.

 - நிர்மல்குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.