மனிதர் மூலம்
பயணித்த
என் வார்த்தைகள்
அவரவர் இயல்புக்கேற்ப
பரிமாணம் பெற்று
உன்னை ஊடறுத்த போது
அது
நிகழ்ந்து விட்டது.
தன் போக்கில்
விளையாடிக் கொண்டே
குருட்டுப் பெரியவர்களின்
விரல்கள் பற்றி
அழைத்து வருகிறாள்
சிறுமி
வழி காட்டும்
வார்த்தைகளால் மட்டுமே
அதட்டிக் கொண்டு
வருகிறார்கள்
பெரியவர்கள்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பின்புலம்
- விவரங்கள்
- புதுகை சஞ்சீவி
- பிரிவு: புதுவிசை - அக்டோபர் 2005