தற்காலிக இருப்பிடங்கள் கட்டுவது என்பதுதான் புணரமைப்பில் ரொம்பவும் பளிச்சென்று தெரியும் தவறாக ஒருவேளை இருக்கலாம். முதலில் அதுபோல் தவறாக எதுவும் இல்லை, பிறகு அவைகளே தவறானவையாயின.
சென்னையின் வடக்கில். கார்கில் நகரில் ஆர். குமார் என்ற மீனவர் தன் எட்டுக்குப்பத்து ஜன்னலில்லாத இருப்பிடத்தை ஜூன் 15 அன்று நெருப்பில் இழந்திருக்கிறார். அவர் இப்போதும் தன் கருகிப்போன இடத்திற்கு அருகிலேயே வசிக்க முடிவெடுத்திருக்கிறார். சுனாமிக்குப் பிறகு, நாங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அடித்து விரட்டப்படுகிறோம் என்று நம்முடைய செய்தியாளரிடம் தெரிவித்தார். இப்போது எங்களை இன்னொரு தற்காலிக இருப்பிடத்திற்கு நகரவைக்க அவர்கள் விரும்புகிறார்கள். அரசாங்கம் எங்களுக்கு ஆறுமாதத்தில் நிலையான வீடுகளைக் கட்டித் தருவதாக உத்திரவாதம் அளித்தது. ஆனால் நாங்கள் வருவது வரட்டுமென்று பாம்புகளுடனும் மற்ற விஷ ஜந்துக்களுடனும் போராடுகிறோம். எங்களுக்கு இங்கிருந்து நகர விருப்பமில்லை. ஏனெனில் நாங்கள் சுத்தமாக மறக்கப்பட விருப்பமில்லை.
கார்கில் நகரும் மோசமானவற்றுள் ஒன்று. ஆனால் பொதுவானது ஜன்னலில்லாத தொகுப்பு வீடுகள், ஷு வைக்கும் பெட்டி போன்ற குடிசைகள் என்பனவையே தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. அவைகள் சூடாகவும், நீர் கசியும் விதத்திலும். காற்று வேகமாக வீசும் வகையிலும் மற்றும் வெள்ளம் வரக்கூடிய வகையிலும் இருந்தன. ஒரு மாதத்திற்கும் முன்னால் ஒரு திடீர் தீ விபத்து ஏற்பட்டு 1600 மீனவக் குடும்பங்கள் பிரச்சினைக்கு உள்ளாகின. அங்கு சுத்தமாகவும், இயங்கக்கூடிய நலையிலும் ஒருக் கழிப்பிடம் கூட இல்லை. மொத்த தொகுப்புகளும் எளிதில் தீப்பிடிக்காதவை, மெல்லிய தகடுகளால் தார் பூசப்பட்டுக் கட்டப்பட்டவை. தீப்பிடிக்காதவை என்று சொல்லப்பட்டாலும் ஜுன் 22 அன்று தீயினால் இல்லாமல் போயின.
இது போல் நெருப்பினால் தொல்லைப்படுத்தப்பட்டபோது. அரசாங்கம் எதுவும் செய்யத் தோன்றாமல் இருந்தது. ஆனால் மீனவ மக்கள் தங்களுக்கான வீடுகளைத் தாங்களே தங்களின் புடவைகள் மற்றும் அட்டைகள் மூலம் உருவாக்கிக் கொண்டார்கள். அதுமட்டுமில்லாமல் முன்பு சுனாமி வந்த போது சென்னையின் மிகப்பெருமை வாய்ந்த மெரினாக் கடற்கரை வாசிகள் இரண்டு மாதங்கள், வான் நட்சத்திரங்களுக்குக் கீழே நடைபாதையில் தங்கியிருந்தது போல் தங்கியிருக்கத் தயாரானார்கள். அதன்பிறகு, என்.ஜி.ஓவிற்கோ, அதிகாரிகளுக்கு பல நாட்கள் அவர்களைப் பற்றிய கவலை வரவேயில்லை. பிறகே ஷுப்பெட்டி வீடுகளுக்கு வந்தார்கள். அங்கு மக்கள் வியர்வையுடனும், நடுக்கத்துடனும், பூச்சிக்கடிகளுடனும். பொறுக்கமுடியாத புழுங்கிய நாற்றமுள்ள சுற்றுப்புறத்திலும் வசித்தார்கள். சுற்றி எங்கும் ஒரு டாக்டர் கூட இல்லை.
ஆறு மாதத்திற்கும் மேல் சுனாமி பாதித்த மக்களுக்கான புனரமைப்பில் பளிச்சென்று தெரியும் தவறாக இருந்த இடம் தற்காலிகக் குடியிருப்புகள் கட்டுவது என்பது ஒருவேளை இருக்கலாம். முதலில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அதுபோல் எதுவும் இல்லை. ஆனால் பிறகு மாநிலத்திலும், அதன் எல்லைக்கு மேலேயும் கட்டுப்பட்ட வீடுகள் ஒத்தக் குறைவானக் கற்பனைக் கொண்டு கட்டப்பட்டு தவறாயின. வசிப்பதற்கு வசதியாக என்ன மாதிரி வீடுகள் வேண்டும் என்று மக்களிடம் எப்போதும் ஆலோசிக்கப்படவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குக்கடற்கரை சாலை முழுதும் இருந்த மீனவ மக்கள் அவர்களுக்குக் கட்டப்பட்ட இது போல் ஒத்த, ஏன் உண்மையாகவே மோசமான, முழுதும் கறுப்பு நிறத்தில், மெலிந்த வகையில் மற்றும் காற்றோட்டத்திற்கு ஒரு சிறிய துளைக்கூட இல்லாத தொகுப்பு வீடுகளுக்குச் சென்று வசிக்க மறுத்தனர். ஆனால் அவர்களின் மறுப்பு ஒன்றும் அரசாங்க காண்ட்ராக்டர்கள் மற்றும் ஐ.என்.ஜி.ஓக்கள் மேலும் மேலும் கட்டும் வீடுகளைத் தடுக்கவில்லை. அதிக அளவில் பணம் குறைந்த நேரத்தில் இதற்காகச் செலவிடப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களாக மக்கள் தற்காலிகத் தொகுப்பு வீடுகளில் வசிக்காதப் பிரச்சனை ஒரு முக்கியத் தலைப்பாக ஐ.என்.ஜி.ஓ., என்.ஜி.ஓ., மற்றும் உள்ளூர் அமைப்புகளின் விவாதத்தில் அங்கம் வகிப்பது சுவாரசியமானது. மையக்குழுக்கள், செயலாற்றும் திட்டங்கள், மற்றும் வரைபடங்கள் என்று பல இருந்தன. ஆனால் மக்கள் இதுபோல் வீடுகளில் வசித்து நசிந்து போவதிலிருந்து காத்து அடிப்படை வசதிகளைச் செய்துத்தர யாரும் இல்லை என்பதே சோகம். சுத்தமான மோதல்கள் மட்டும் இருந்தன. சென்னை ஆட்சியர் அவைகளை அவமானம் என்றார். ஒரு முன்னணி என்.ஜி.ஓ தலைவர், தொகுப்பு வீடுகள் மோசமாகவே இருந்தன. ஆனால் யாரும் முறையிடவில்லை, என்று சொன்னார்.
வேறு சில இடங்களில் மக்கள் தொகுப்பு வீடுகளில் அதிக சவுகரியங்களுடன் வசிக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சியர் என்.ஜி.ஓவிடம் இலவச காற்றாடிகளை வழங்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். அதனால் என்னவாகும், வெப்பக் காற்று உள்ளுக்குள்ளேச் சுற்றப்படும். சில என்.ஜி.ஒக்கள் காற்றுக்காகத் தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகளில் சில பகுதிகளை எடுத்தனர். கோடைக் காலத்தில் பெய்த மழையில் தாழ்ந்த வீடுகளின் உள்ளே வெள்ளமெடுத்தது. மேலும் வெள்ள மெடுக்காமல் தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆசியாவிலேயே பெரியக் காற்றாலைப் பூங்கா என்று சொல்லக் கூடிய திருநெல்வேலியில் வீடுகளின் கூரைத் தகடுகள் வலிமையானக் காற்றில் பறந்து போயின. ஒரு என்ஜிஒ கூரையின் ஒரு பகுதியையாவது மூட கறுத்த பிளாஸ்டிக் தகடுகளைக் கொடுத்தார். அதனால் என்னவானது? வீடுகளை இன்றும் கொஞ்சம் சூடாக்கும்.
பகற் பொழுதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியேத் தங்குகின்றனர். கோடையின் மதிய வெப்பத்திலிந்து தங்கள் சவலைப்பிள்ளைகளைக் காக்க அம்மாக்கள் தங்கள் அருகிலுள்ளவர்களிடம் அவர்களை ஒப்படைத்தனர். அதோடு மோசம் என்னவெனில், தகர தகடுகளால் கட்டப்பட்ட வீடுகள் உலை அடுப்புக்கு ஒத்தக் குணத்திலிருந்தன. பெருமையுடன் ஐ என்.ஜி.ஒவின் முத்திரையிட்ட ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள் கூட வெப்பத்தைக் காக்க கூடியதாக இருந்தன. தீப்பிடிக்காத வகையில் கூரை வேயப்பட்டக் குடிசைகள் (உதாரணம் : கடலுரில் "ஆக்ஸ்போம்" செய்தது). மெல்லியகூரை அமைப்புகள் கொண்டு காற்றோட்ட வசதியும் உயரமான மேடைகள் மீதும் கட்டப்பட்ட வீடுகள் (உதாரணம் : சீனிவாசபுரத்தில் மக்கள் செயல் இயக்கம் கட்டியது) போன்ற அமைப்பிலான வீடுகள் கொஞ்சம் உதவின.
பருவக்காற்றின் சுழற்சியில் அதன் பங்கிற்கு தொற்று நோய்களையும், நச்சு நோய்களையும் மனித உடலில் ஏற்படுத்தும் இன்னொரு ஆபத்தை எதிர்பார்த்து தற்போது மனித நல பற்றுடைய அமைப்புகள் காத்திருக்கின்றன. தற்காலிக வீடுகளில் உள்ள தவறுகளைக் கண்டு அறிந்து அதனைச் சரியாக்குவதன் மூலம், நிலையானக் குடியிருப்புகள் கட்டும் போது அவைகளைத் திருப்பிச் செய்யாமல் இருக்கலாம்.
அதனால் என்னத் தவறாகப் போனது? என்று பார்த்தால், தென்னை அல்லது பனை ஓலை வேய்ந்த கூரைவீடுகள் தீப்பிடிக்கும் என்பதால், மெல்லிய சிமெண்ட் கூரைக்கட்டிடங்கள் கட்டுவது ஆதரிக்கப்பட்டது. அதிகாரிகள் தெனனை மற்றும் பனை ஓலையில் வேயப்பட்ட குடிசைகளைக் கட்ட பயமுறுத்தினர். தமிழ்நாட்டில் ஒருப் பள்ளியில் நடந்த தீவிபத்து பெரிய அளவு பாதிப்பை மனிதநல அமைப்பு சார்ந்த ஆட்களிடம் தோற்றுவித்தது. இதனை விவாதத்திற்கு சற்று விரைவாகவே எடுத்துக் கொண்டனர். அவ்வாறு அவர்கள் வேண்டாமென்று ஒதுக்கியக் கூரைகள் செய்வது எப்படி என்ற தொழில் நுட்பமும், கூரை செய்யத் தேவையானத் தென்னை பனை மட்டைகளும் உள்ளூரிலேயேக் கிடைக்கின்றன. ஆனால் என்.ஜி.ஓக்கள் தார் தகடுகளைப் பெற வெளியே சென்றனர். கன்யாகுமரியில் என்.ஜி.ஓ. வேலையாட்கள் தார்தகடுகளை பெற்றுவர ஆறுமணி நேரம் ஆகிறது.
இந்த மொத்தக் கிளைக்கதையும் முடிவாக இந்த தேசத்தின் ஆபத்துகால பதில் நடவடிக்கைகளில் உள்ள சில பிரச்சினைகளை கொண்டு வருகின்றது. முதலில், அந்த பதில் நடவடிக்கைகள் வேகமாகவும், ஏராளமான ஆதரவுகளும் கிடைத்தன. அந்தத் தொகுப்பு வீடுகளில் வசித்த மக்களின் சவுகரியங்களை ஏற்படுத்தும் உறுதியைக் கொடுக்கும் எந்த விதத் திட்டமோ. அதற்கான சாத்தியக் கூறுகளோ இல்லை. இரண்டாவது முட்டள்தனமா எதிர்விளைவினை செய்தல் உதாரணம், தென்னை அல்லது பனை ஓலை வேய்ந்த வீடுகள் தீப்பிடித்துக் கொண்டதால் அதன்பிறகு அதுபோன்ற வீடுகளே வேண்டாம் என்பது. மூன்றாவது, அதிகாரிகள் என்.ஜி.ஓக்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றாக சேர்ந்து வந்து ஆராயந்து ஒத்துக்கொள்ளும் ஒருத் தீர்வை தொகுப்பு வீட்டுப் பிரச்சினைக்குத் தராமல் போனது.
உலக அளவுகள் (விதிமுறைப்படி) அவசரகாலத்தில் எடுக்க வேண்டிய பதில் நடவடிக்கைகள் உலகளவில் ஒத்துக் கொள்ளப்பட்டவை வீடுகள் காற்றோட்டமாக, ஒன்றுக் கொன்று இடம் விட்டு, மேலும் சிறிது தனியாக அதற்கு என்று இடம் விட்டு கட்டப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் வரையறை செய்கின்றது. உலக அளவுகள் மற்றும் மனித நல ஆணையத்திடம் உறுதி கூறி செய்தல் வேண்டும். ஆனால் ஐ. என்.ஜி.ஒக்கள் கூட தங்கள் அலுவலரிட்ம் இவைகளை எடுத்துச் சொல்லக் கஷ்டப்படுகின்றன, என்றாலும் இவைகள் எல்லாம் ரொம்பவும் பெரிய பொது அறிவு சார்ந்தது.
பிறகு ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை, மெல்லிய கூரை (சிமெண்ட்) கொண்ட நெருக்கமான வீடுகளே கட்ட வேண்டும் என்பது அரசாங்க விதிமுறை என்பது. ஆனால் மாநில அரசு அதுபோன்ற கட்டும் அமைப்பிற்கான விதிகள் எதையும் கொடுத்திருக்கவில்லை. அதற்கு உரிய அரசு ஆணையைக் கூர்ந்து நோக்கும் போது, உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் உள்ளூர் தொழில் நுட்பத்திலேயே தொகுப்பு வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. இப்போதும் சில மாவட்ட ஆட்சியர்கள் தாங்களின் தனிப்பட்ட முயற்சியில் கூரை வீடுகளைக் கட்டத் தடுத்திருக்கிறார்கள்.
என்றாலும் சில இடங்களில் ஒரு சில புது அனுகுமுறைகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். நாகப்பட்டினத்தில் கட்டிடம் கட்டும் தொழிலாளர் சங்கம் கட்டியது போல் தீப் பிடிக்காத வர்ணம் பூசப்பட்ட மூங்கிலின் மேல் கீற்றால் வேயும் முறை புது முறையினை உட்படுத்த எந்தக் குறுக்கும் இல்லை. என். வி.ஓக்களுடன் சேர்ந்து பணியாற்றும் இந்திய அறிவியல் கழகம் மற்றும் காந்திகிராமம் பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து இதற்கு ஒரு மாற்றுத் தீர்வினைக் கொண்டு வரவேண்டும்.
சுருக்கமாகப் பார்த்தால், விரைந்து வரும் எதிர்காலத்திற்கு மொத்த தற்காலிக தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்திலிருந்து பல பாடங்கள் தேவைப் படுகின்றன. இன்னொரு பக்கத்தில், இது ஒரு மோசமான ஆபத்துகால பதில் நடவடிக்கை பற்றிய விஷயம் மட்டும் அல்ல, மனிதனுக்கு தரவேண்டிய மரியாதையில் ஏற்பட்ட குறைவைப் பற்றியது. அதுவும் ஏழை மக்களுக்குத் தரவேண்டிய மரியாதைக் குறைவைப் பற்றியது.
நம்பிக்கை மற்றும் பாதுகாப்பான எதிர்காலம்
"இந்தப் பேராபத்தை ஒரு வாய்ப்பாகக் கொண்டு ஒரு நீண்ட கால பாதுகாப்பை இந்த இன மக்களின் பிழைப்பிற்கு ஏற்படுத்த வேண்டும் பேராசிரியர் ஜான் குரியன், சென்டர் பார் டெவலப்மெண்ட் ஸ்டடிஸ், திருவனந்தபுரம் எல். அஜித்தின் பேட்டியிலிருந்து.
ஆசியாவின் கடற்பகுதி இதுவரைப் பலப் பேராபத்துகளைத் தாங்கியிருக்கின்றது. அவைகளால் உயிர் மற்றும் பொருள் இழப்பபுகள் ஏற்பட்டிந்தாலும், கடந்த கால அந்த அனுபவங்கள் கடந்த டிசம்பர் 26 அன்று கடைசியாக வந்த உயிர் பறிக்கும் அலைகளால் ஏற்பட்ட நஷ்டத்தை எதிர்கொள்ள அவர்களைத் தயார் படுத்தவில்லை. ஒரு சில மணிநேரங்களிலேயே ஆசியாவின் கடல் வாழ் மக்களின் பலர் எல்லாவற்றையும் இழந்தனர். வாழ்க்கைக்கு, பிழைப்பிற்கு மற்றும் உணவிற்கு ஆதாரமாகக் கடலை நம்பியிருந்தே அவர்களுக்கு இந்த அனுபவம் அதிர்ச்சியானது.
இந்த நூதனமான பேராபத்தின் அதிர்ச்சி நம்மை விட்டு விலகாத இந்த நேரத்திரலேயே நம்முடைய வேலை என்னவெனில், சுனாமியால் காயம்பட்ட அவர்களுக்கு, குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்ட மீனாவ மக்களுக்கு ஒரு நம்பிக்கையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்க வேண்டும். இந்த பேராபத்தை ஒரு வாய்பாகக் கொண்டு மீனவ மக்களின் பிழைப்பிற்கு ஒரு நீண்ட காலப் பாதுகாப்பினை ஏற்படுத்தும் புணரமைப்புத் திட்டத்தினைக் கண்டு பிடித்து செயலாற்ற வேண்டும்.
மீட்புப் பணி மற்றும் உதவி வழங்குவது என்ற ஒட்டத்தில் பிழைப்பிற்கானத் திட்டங்கள் முதல் நிலையில் காணாமல் போயின. (மீனவ மக்கள் தங்களின் சகஜமான வாழ்க்கையைத் திரும்பவும் தொடங்க) பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் இது வரை எதுவும் செய்யவில்லை. எல்லா அரசு அலுவலர்களும் முன்பே வரையறுக்கப்பட்ட ஒரே ஒத்த வடிவத்தில் வேலை செய்கிறார்கள். புணரமைப்பு மற்றும் மீட்புப்பணிகளுக்கான நடவடிக்கைகளில் எந்த வித்தியாசமும் இந்த மூன்று மாநில அரசாங்களிடமும் இல்லை. ஒரே விதமான தற்காலிகக் குடியிருப்புகள், வினியோகம் மற்றும் மீட்புக் பணிகள் மேலும் நிலையான வீடுகள் கட்டுவது மற்றும் மக்களின் உடல்நலத்தைக் காப்பதில் அக்கறையின்மை என்றே எங்கும் தெரிகிறது.
மீனவ மக்கள் அவர்களின் பிழைப்பிற்குத் திரும்பவும் செல்ல விருப்பமாக உள்ளனர், அவர்கள் அனுபவித்த சோகத்தின் காயத்திலிருந்து மீண்டு வர இதுவும் கூட உதவியாக இருக்கும். கேரளா போன்ற மாநிலங்களில் வனத்திட்டங்கள் மூலம் பொருத்தமான மரங்களை வழங்க முடியுமெனில், கட்டுமரங்களைத் தாமதமில்லாமல் மாற்றியமைக்க முடியும். தனியார் நிறுவனங்கள் மூலம் வலைகளும், சிறிய அளவு மோடடார்களும் வழங்க முடியும். சற்று சிரமமானக் காரியம், சிதைந்து போன பெரிய இழுவை வலைகளை மாற்றுவது. அவைகளைப் புதிதாக மாற்றுவது என்பது சரியான முடிவாகாது. மீன்பிடி குறைவாகவே இருந்ததால் சுனாமிக்கு முன்பே இந்தப் பெரிய இழுவை வலைகளின் உபயோகம் குறைவாகவே இருந்தது.
மீனவர்கள் இழந்த தங்களின் பெரிய இழுவை வலைகளுக்கு மாற்று ஏற்பாடுக் கேட்டால் எளிமையாகக் கிடைக்கும் பிறர் கையாண்ட இரண்டாம் தர வலைகளைக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் அவங்களுக்கு சிறிய அளவு மீன்பிடித்தொழிலில் இறங்கவோ வேறொரு பிழைப்பிற்கானப் பயிற்சியையோ வழங்க வேண்டும்.
இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு உயிர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் எதிரானத் தாக்கத்தை உண்டாக்கும் இரால் பண்ணைகளைக் கடற்கரையிலிருந்து சற்று தூரத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும். அவைகளின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் மிகவும் யோசிக்கப்பட்டு தெளிவான விதத்தில் நடைபெறவேண்டும். போதுமான நஷ்டஈடு வாழ்வை இழந்த மீன் பண்ணை வேலையாட்களுக்கு வழங்கப்பட வேண்டும். பிழைப்பை இழந்த அவர்களுக்கு மறுவாழ்வை புணரமைப்பு நடவடிக்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கல். குறைந்த சக்தியில் மீன் பிடிக்கும் தொழில் நுட்பங்கள், கடற்கரையோரம் மற்றும் சந்தைக் கட்டமைப்பில் சுத்தமான மீன் வியாபாரம் எல்லாம் பிரபலமாக்கப்பட வேண்டும். அவைகள் உள்ளூர் சந்தை சக்திகளுடன் குவிக்கப்படவேண்டும். இந்த முதலீடுகள் மீனவப் பெண்களின் வருமானத்தை அதிகப்படுத்த பெரிய அளவில் உதவும்.
சமூகம் சார்ந்த கட்டமைப்பில் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் சாலைகள், சமுதாய மண்டபங்களைக் கட்டுவது, பள்ளிகள் மற்றும் மீன்பிடி சம்மந்தமான கட்டமைப்பில் எல்லாரிடமும் அதிக அளவு முதலீடு செய்யப்பட வேண்டும். அதற்குப் பெரிய அளவில் பண உதவியும் தேவைப்படுகிறது, சும்மாயிருக்கும் மீனவர்களுக்கு வேலையும் கிடைக்கிறது.
அதனால் இந்த முதலீடு அவர்கள் செய்யும் "வேலைக்கு உணவு" என்ற உணர்வை அவர்களின் மனதில் துண்டுமாறு செய்யும். மேலும் பல காரணங்களுக்காக கடலுக்குப் போக விருப்பமில்லாத சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு விழிப்பான மாற்று வேலைக்கான பயிற்சித் திட்டங்களுக்கு வழிவகுக்கும்.
வீடு கட்டுவது, தண்ணீர் குழாய்கள் நிறுவுவது, மரவேலைகள், வீட்டுக்குள் பணிவிடை, பூமியைத் தோண்டி தண்ணீர் கொண்டு வருவது, துப்புரவு போன்ற வேலைகளில் அவர்களை மேம்படுத்தப் பயிற்சித்திட்டங்கள் தேவைப்படுகிறது. இந்த விதமான பயிற்சிகள் ஒரு வரமாக சுனாமியால் அனாதையான அதிகமானோர்க்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் இருக்கும்.
மேலே சொன்னத்திட்டங்கள், வாழும் மீனவ மக்களுக்கான புணரமைப்பு திட்டத்திற்கும் முக்கியக் காரணிகளாக மத்திய மற்றும் நீண்ட காலத் தேவைகளுக்கான விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டிய உருப்படியானவை ஆகும். அது வெற்றி பெற்றதாகத் தெரிந்தால் தேசத்தில் உள்ள மீனவ மக்களின் எதிர்கலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
சுனாமி, செய்தித் துறையின் பங்கு - சத்தியா சிவராமன்
அங்கே சுனாமிப் பற்றியக் கதைகளுக்கு மிகவும் சிறிய குறுகிய இடமே, சுனாமி பாதித்தப் பகுதிகளில் வசித்த மக்களின் வாழ்க்கைப் பற்றியக் கதைகளும் மிகவும் குறைவாகவே, சுனாமிக்கு உதவியாக வந்தப் பணம் எஙகே சென்றது என்பது பற்றிய ஆர்வம் மிகவும் குறைவானதாகவே இருந்தன.
ஏறக்குறையப்பத்து வருடங்களாக முடிவேயில்லாமல் சாதாரண மக்களிடம் உணர்ச்சிக்குரியக் கதைகளைச் சொல்லி விருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் உலகச் செய்திப்பிரிவுக்கு இந்த ஆசியாவின் சுனாமி ஒரு நிச்சயமான மூழ்கடிக்கச் செய்யும் அனுபவம் தான்.
சுனாமி என்ற பேராபத்திற்குப் பின் முதல் சில நாட்களில் வெளிவந்த என்ன உண்மையில் நடந்தது? என்பது பற்றிய முதல் செய்தித்துளி மிகப்பெரிய வெள்ளத்தைக் கிளப்பியது. பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் போன்ற செய்தித் துறைகள் எல்லாம் அதிக அளவில், சுனாமி பாதித்த மனிதர்களின் கஷ்டங்களைப் பற்றி சரியான அளவில் மற்றும் அதன் தன்மை போன்றவற்றை சொல்ல முயன்று, முடியாமல் திக்கு முக்காடிப் போயினர். யாரால் தொடர்ந்து.அந்த புரிந்து கொள்ள முடியாத சோகத்தைப் பற்றி தொய்வில்லாமல் பேசவோ அல்லது எழுதவோ முடியும்? மேலும் யாரால் தொடர்ந்து அதை நோக்கிப் போய் தன் தொழில் கடமைகளை செய்ய முடியும்?
தந்திரமிக்க நிருபர்களிலிருந்து அனுபவமுள்ள சண்டை பற்றிய செய்திக் கொடுக்கும் செய்தியாளர்கள் வரை எல்லோரும் என்ன நடந்தது உண்மையில்? எப்படி நடந்தது? என்று தனித்தனியே ஆராய்ந்தும் தொகுத்து வழங்க சிரமப்பட்டனர். தீவிரவாதம், போர் மற்றும் நோய் போன்றவை புரிந்து கொள்ளக்கூடியவை. ஆனால் என்ன அரசியல் காரணம் பூமிக்கோ கடலுக்கோ இப்படி லீலை செய்து இவ்வளவு அதிக மக்களைக் கொல்ல இருக்க முடியும்? 2,25,000 பேர் வரை இறந்திருக்கிறார்கள். மில்லியனுக்கும் அதிகமானோர் அலைக்கழிக்கப்பட்டு வறுமையிலோ அல்லது வசிக்குமிடத்தை இழந்தோ இருக்கின்றனர். இரண்டு கண்டங்களில் உள்ள பன்னிரண்டு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 2004 டிசம்பர் 26ல் நடந்த அந்த நிகழ்வு மிகவும் வேகமானது, எதிர்பார்க்கப்படாதது மேலும் உண்மையிலேயே நினைத்துப் பார்க்க முடியாதது.
அதன்பிறகு கொஞ்சம் நாட்களில் செய்தித்துறை அதன் பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, சுனாமியின் விளைவுகளைப் பற்றி இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு செய்திகளை வெளியிட்டது. அந்த விதிவசக் காலையின் கோரம், தனித்தனியேப் பிரிந்துப் போனக் குடும்பங்கள், தனி மனித தைரியம் பற்றியக் கதைகள், இழந்த, காணாமல் போன பொருட்கள், மனிதர்கள் திரும்பக் கிடைத்த அற்புதங்கள், மேலும் உலகிலிருந்து வரும் ஆதரவுகள் பற்றிய செய்திகள் வந்தன.
செய்தித்துறையில் பன்னாட்டுக்குரிய அகப்படுத்தலின் நோக்கங்களில் பல பிரச்சினைகள் இருந்தன. தொலைக்காட்சித்துறை தங்களின் தொழில் மேன்மையில் சிறிது கவலையினாலோ அல்லது இழப்பின் ரசசியத்தை வெளியிடுவதாக எண்ணியதாலோ மேலும் மேலும் இறந்தவர்களின் படங்களைக் காட்டியபோது குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியது. பன்னாடு முழுக்க அதிக அளவில் சுனாமியில் இழந்த சுற்றுலாப் பயணிகள் மீதே மையமாக செய்திகள் இருந்தன. அதுமட்டுமலலாமல் பல கதைகள் உள்ளூர் தொண்டர்கள், மற்றைய ஆர்வலர்கள் பற்றி சொல்லாமல் விட்டு, பணக்கார நாடுகளின் உதவும் முயற்சிகள் பற்றி மட்டும் இருந்தன.
ஆனால் நேர்மையாகப் பார்த்தால், ஆசியாவில் நடந்த சுனாமிக்கான குறிப்பிடத்தக்க எதிர்விளைவுகள் உருவாக செய்தித்துறைத் தன் பங்கிற்கு உதவியைச் செய்தது. சாதாரணக் குடிமக்களிடமிருந்து தூர இடஙகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் வரை தங்களால் இயன்ற எதோ ஒன்றை அந்த துரதிஷ்டவசமாணவர்களுக்கு செய்ய வைத்த ஒலி மற்றும் ஒளிபரப்புகளுக்கும், எழுதப்பட்டப் பத்திரிக்கைக் கட்டுரைகளுக்கும் மற்றும் செய்திகளுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
ஆறு மாதத்திற்குப் பின்னால் இதுவரையில் நடந்தவற்றை ஒருவர் திரும்பிப் பார்த்தால், செய்தித்துறை சுனாமிக்குப் பின்னால் வந்த சூழ்நிலைகளை எப்படி கையாண்டிருக்கிறது? என்றால் மற்ற பேராபத்து சூழ்நிலைகளில் நடந்தவையே இப்போதும் நடந்ததுள்ளது.
கடந்த கால வரலாறு இல்லாமலேயே அல்லது தங்களின் ஒத்த எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் இல்லாமலேயே எவ்வாறு அலைகள் அவர்களை அடித்துச் சென்றதோ அதுபோல உதாரணத்திற்கு மிகக் குறைந்த இடமே சுனாமிப் பற்றியக் கதைகளுக்கு ஒதுக்கப்பட்டது. குடியுரிமைப் பிரச்சினைக்கான சண்டையில் சுனாமியால் இலங்கையில் சிலக் கதைகள் கிடைத்தன. தாய்லாந்து, இந்தியா அல்லது சண்டையில்லாத மற்ற இலங்கைப் பகுதியின் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மிகவும் குறைந்தக் கதைகளேக் கிடைத்தன.
வளர்ந்து வரும் நாட்டின் சூழலில் மீண்டும் இன்னும் கொஞ்சம் கதைகள் சுனாமி பாதித்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடமிருந்துக் கிடைத்தன. டிசம்பர் 26 அன்று வந்த சுனாமியால் சிதைந்து போன மீனவ மக்களின் வாழ்க்கைக்கான உதவிகள் போல் அதே அளவான உதவிகள் வேறு சில மக்களுக்கு தேவைப்பட்டன. உதாரணத்திற்கு தென் இந்தியக் கடற்கரையில் வசிக்கும் கடற்கழியில் மீன் பிடித்து வாழும் தலித்துகள் மற்றும் சில இன மக்களுக்கு பெரிய அளவில் உதவிகள் தேவைப்பட்டாலும் அவை மறுக்கப்பட்டன. ஏனெனில் அவர்கள் நிர்ணயித்த "சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற வரையரைகளுக்கு ஒத்துவராததால் இவ்வாறு நடந்தது.
ஆச்சரியப்படும் வகையில் செய்தித்துறையும் சுனாமி மீட்புப்பணி மற்றும் புணரமைப்பு என்ற பெயரில் வந்த "டன்" கணக்கானப் பணம் என்னவானது? என்பதுப் பற்றிய கதைகளுக்கு குறைந்த பட்ச விருப்பத்தினையோ அல்லது சுத்தமாக விருப்பம் காட்டாமலோ போனது. சுனாமி வந்தபோது ஆரம்ப நாட்களில் அரசாங்கம் மற்றும் தனியார் அமைப்புகள் பொருளாகவும் பணமாகவும் செய்வதாக சொன்ன உறுதிமொழிகள் மீது மட்டும் சிறிது தொடர் கவனிப்பு என்பது நடக்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பரந்த மனப்பான்மையை மனிதர்களிடையே இருந்து பெற்ற பணம் எவ்வாறு அரசாங்கத்தால் உபயோகப்படுத்தப்படுகிறது? அந்தப் பணம் சரியானவர்களுக்குப் போய்ச் சேர்கிறதா? எந்த எந்தத் தேவைகளுக்காக வழங்கப்பட்டதோ அந்த அந்தத் தேவைகளுக்குச் சரியாக வினியோகிக்கப்படுகிறதா?
இந்தியாவின் ஒரிசாவில் வீசியப் புயற்காற்று, கரிபியன் பகுதியில் வீசியப் புயற்காற்று அல்லது இரண்டு வருடங்களுக்கு முன் வந்த ஈரான் பூகம்பம் போல் இந்த சுனாமியும் மக்கள் ஞாபகத்திலிருந்து விரைந்து மறைந்து விடுமோ என்றொருக் கவலையும் இப்போது இருக்கிறது. இது இப்போது ரொம்பவும் முன் நடந்த ஒருப் பழமையான நிகழ்வாக, எங்கோ சில துரதிஷ்டமானவர்களுக்கு நடந்ததாக மாறி வருகிறது.
சுனாமி உண்மையாக நிகழ்ந்ததா? ஹாலிவுட்டில் நடைபெறும் ஜாலவித்தைகளின் ஒரு பகுதி இல்லை தானே? சுனாமி யார்? போன்றவை எல்லாம் தகுந்த கேள்விகளாக அந்த நிகழ்வு நடந்து ஆறுமாதத்திற்குப் பிறகு இப்போது செய்தித்துறைக்கு விடைதேட வேண்டிய அவசியத்தில் உள்ளன.
வெடிக்கத் தயாராக உள்ள பெருவாரி நோய்கள் - பாரதி ஜெய்சங்கர்
புணரமைப்பு பணிகளில் மக்களின் சுகாதராத்தை மேம்படுத்த எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. உடல் நலத்தைக் காப்பதில் முன்னேற்றம் மற்றும் முதல்நலை சுகாதாரப் பாதுகாப்புப் பயிற்சி போன்றவையும் புணரமைப்பு மற்றும் பிழைப்பைச் சீர்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகுக்கின்றன.
டிசம்பர் 26 அன்று இந்தியக் கடற்பகுதிகளில் சுனாமித் தாக்கி ஆபத்துக்களையும். சோகங்களையும் ஆறாத வடுக்களாக அவர்களின் மனதில் ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் சில ஆயிரம் பேரை நெருக்கமாகக் கட்டப்பட்ட தற்காலிகக் குடியிருப்புகளுக்கு விரட்டியது. பல அரசாங்கங்கள். செயல்வீரர்கள். மருத்துவர்கள் மற்றும் சில நிறுவனங்கள் வேகமாக வந்து பெருவாரி நோய்களின் பயமுறுத்தலை ஓரளவிற்கு ஒடுக்கினர். இந்தியாவில் ஆறுமாதத்திற்குப் பிறகு இந்தக் காட்சி மாறியது. தென்னிந்தியாவின் சென்னை. நாகப்பட்டினம் மற்றும் கேரளாவின் சில பகுதிகள் போன்றவற்றிலுள்ள தொகுப்ப வீடுகளின் சூழ்நிலைகளில் ஏதோ ஒன்று விரைவாக செய்து சாந்தப்படுத்தாது. போனால், பார்ப்பதற்கு எல்லா ஆரம்ப முயற்சிகளும் செயல்பாடு இல்லாமல் போனது போலாகும்.
அண்மையில் மக்கள் நீதிக்குழு நடுவர்கள், குடிமக்கள் மற்றும் செயல்வீரர்கள் ஒன்றாக வந்து சுனாமி பாதிப்புகளின் எதிர் நடவடிக்கைகளைப் பார்த்தனர். சுனாமி பாதித்த மக்களுக்கு அமைக்கப்பட்ட முகாம்களில் பெருவாரி நோய்கள் என்ற வெடி விரைவாக வெடிப்பதற்குத் தயாராக இருப்பதை உணர்ந்தனர்.
முகாம்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. கழிவுநீர் தொட்டிகள் முழுதும் நிரம்பிவிட்டன. இதுபோன்ற சூழ்நிலை ரொம்பவும் சுகாதாரமின்மை ஆகும். பொறுக்க முடியாத முடைநாற்றம் வீசும் மழைநீருடன் சேர்ந்த கழிவுநீர் வெள்ளம் பயமுறுத்தும் பெருவாரி நோய்கள் வெடிக்கப்போவதை அறிவிக்கின்றன. "இந்த நிலை சரியான நேரத்தில் மாற்றப்படவில்லை எனில் இதுவும் இன்னொரு பேராபத்தாக முடியும், என்று நீதிபதி டி. ஸ்ரீதேவி, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் தொகுப்பு வீடுகளில் ஒன்றைப் பார்த்தப்பின் சொன்னார்.
வீடுகள் தாழ்ந்தப் பகுதிகளில் தகரக்கொட்டைகளாக ஷுப்பெட்டி போல் கட்டப்பட்டு, கோடைக்காலங்களில் கடுமையான வெப்பத்துடனும் பருவக்காற்றின் தாக்குதலில் வசிக்க லாயக்கற்றும் போகின்றன. மழைநீர் அவர்களின் காய்ந்தக் கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவுநீருடன் கலந்து தாழ்ந்தபகுதி வீடுகளில் புகுந்து குழந்தைகளை முட்டி அளவு சேற்றில் நடக்குமாறு செய்கிறது.
முன்பே இங்கு முகாம்களில் வசிக்கும் சிலக் குழந்தைகள் மற்றும் பெண்கள் தோல் நோயால் அவதிப்படுகின்றனர். இதுபோல். "ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற சூழ்நிலை இன்னும் ஒரு வாரம் தொடர்ந்தால் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாக மாறும், என்று கோவாவிலிருந்து வந்திருக்கும் யுனிசெஃப் உறுப்பினரும், சுனாமிப் பாதித்த மக்களைப் பார்க்க வந்த நீதிக்குழுவில் உறுப்பினருமான அனிதா மாத்யூ சொல்கிறார்.
தேங்கியத் தண்ணீர் குட்டைகளே கொசுக்களின் உற்பத்தி இடமாகும். உக்கிரமான மலேரியா. தோல்கடினமாதல். கட்டிகள். வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் வைரஸ் ஜுரம் போன்றவை வருவது பொதுவானது ஆகும்.
சுனாமியால் ஆறாயிரம் மக்களுக்கு மேல் இறந்த நாகப்பட்டினத்தில் சூழ்நிலை இன்னும் மாறவேயில்லை என்று "இந்தியா டிஸ்ஸாஸ்டர் ஆர்கனைஸேஸனிடம்" ஒரு சமூகப் பணியாளர் சொல்கிறார். தண்ணீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகிகப்படுகிறது. சற்று தூரமாக இருக்கும் தொகுப்பு வீடுகளுக்கு அதுகூட கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு கட்டி. தோல் கடினமாவது, ஜுரம் போன்றவை வருவது சகஜமாகிவிட்டது. உள்ளூர் கிராம செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர்களும் நிறைய விஷயங்களைக் கவனித்துப் பாதுகாக்க ரொம்பவும் கஷ்டப்படுகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்தைப் பாதுகாக்க ஒழுங்கான வசதி என்பது எங்கும் இல்லை. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத். "இந்த சூழ்நிலை முடிவேயில்லாதது" என்று சொல்கிறார். குழந்தை மருத்துவர்களும், பெண் நோய் மருத்துவர்களும் மிக அதிக வேகத்தில் தேவைப்படுகிறார்கள். மக்கள் தீராத மன அழுத்தத்திலும், கவலையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போதும் அதிர்ச்சியிலிருந்து மீளா நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்குச் சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் ஆலோசகர்களின் எண்ணிக்கையில் கடுமையானப் பற்றாக் குறையுள்ளது. மருத்துவர்களில் அதிகமானோர் சுனாமி வந்து போன இரண்டு மாதங்களுக்கே வந்து போனார்கள்.
அரசாங்கம் அதனுடையக் கவனத்தை சுகாதரத்தில் செலுத்தாமல் கட்டிடங்களைத் திரும்பிக் கட்டுவதில் இறங்கியது. "இப்போது உடனடித் தேவை என்னவென்றால் பெண் நோய் மருத்துவர்களே. ஏனெனில் தங்கள் குழந்தைகளை சுனாமியில் இழந்த அதிக அளவுப் பெற்றேர்கள் மீண்டும் குழந்தைப் பெற மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புகின்றனர், என்று ரவீந்திரநாத் சொல்கிறார்.
"முதலில் சுனாமி பாதித்த பகுதிகளில் நுறு மருத்துவர்கள் இருந்தனர். இப்போது இருபது பேருக்கும் குறைவாகவே உள்ளனர். மே 29ல் நாங்கள் நடத்திய முகாமில் மக்களுக்கே விளையாட்டம்மை, சின்னம்மை மற்றும் புழு பூச்சினால் பாதிப்புகள் போன்றவை எல்லாம் பொதுவாக இருப்பதை அறிந்தோம்'', என்று அவர் மேலும் சொன்னார்.
"கார்டெய்டின்" ஒருங்கிணைப்பாளர் அலாய்ஸியஸ் ஜேம்ஸ் கருத்துப்படி", சுகாதாரம் என்பது முக்கியமாக யாருக்கும் படவில்லை.
"சுனாமி வந்து போனபின் அது ஒரு மென்மையான காலகட்டம். என்.ஜி.ஓக்கள் தங்கள் அலுவலகங்களை நிறுவுதல், திட்டக்குறிப்புகள் மற்றும் பிற யோசனைகள் போன்றவற்றினைப் பற்றி அதிகக் கவலையில் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தொகுப்பு வீடு என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக எல்லோருக்கும் இருக்கிறது. மக்களின் உணர்வுகள் மீதமுள்ளதே", என்று சொன்னார். "மருந்துகள் மற்றும் தண்ணீர் வினியோகம் போன்றவற்றில் ஆரம்பக்கட்ட முயற்சிகளை எடுத்தபின் அரசாங்க சுகாதர அலுவலர்கள் அதிகமாகவோ குறைவாகவோ எண்ணிக்கையால் இந்தக் காட்சியிலிருந்து மறைந்து போனார்கள். உதவும் அமைப்புகளே தொகுப்பு வீடுகள் போன்ற பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட்டன, என்று மேலும் சொன்னார்.
வேறொரு உதவும் அமைப்பின் அலுவலர் சொன்னார், "மக்கள் கண்ணுக்குத் தெரியும் உதவிகளை பற்றியேக் கவலைப்பட்டனர், சுகாதாரம் அதில் முக்கியப் பங்கு வகிக்கவில்லை.”
தொகுப்பு வீடுகள் மற்ற எந்த சீரமைப்பு விஷயங்களிற்கும் காரணமாயிருக்கவில்லை என்று ரவீந்திரநாத் சொன்னதை ஜேம்ஸ் ஆமோதிக்கிறார். "அவை இன்னும் இழப்பின் சோகத்தை அதிகரிப்பதாகவும் மனரீதியான பிரச்சினகளை அதிகரிப்பதாகவுமே உள்ளது. சில என்.ஜி.ஓக்கள் சென்னையில் ஆலோசனைகளை வழங்குகிறார்கள், ஆனால் அது போதுமான அளவில் இல்லை. பிழைப்பின் வழிகளுக்கான திட்டங்கள் மற்றும் இந்த ஆலோசனை தரும் வேலையும் முற்றுப் பெறாத வரையில் மொத்தப் புணரமைப்பும் நடக்காததாகவேக் கருதப்படும். குழுக்கள் அதன் திட்டங்கள் எல்லாம் அப்படியே இருக்கும்". என்று அவர் சொன்னார்.
என்.ஜி.ஓக்களின் தேச ஒருங்கிணைப்புக்குழு துப்பரவு மற்றும் மக்களின் சுகாதாரத்தை ஒரு முக்கிய விஷயமாக வரிசைப்படுத்தியுள்ளது. ஆனால் இன்றைய தேதிவரைக் கூட்டங்களில் எல்லாம் தொகுப்புவீடுகள் மற்றும் புணரமைப்பு பற்றி மட்டுமே பேசுகின்றனர். அவைகளுக்கே அதிக அளவில் பணம் உதவிக்குப் போகிறது.
அரசு அலுவலர்களிடம் பேசியபோது, ஒரு யுனிசெஃப் அவசரப்பிரிவு குழந்தைகள் பராமரிப்பு, தண்ணீர் மற்றும் துப்புரவு, மனரீதியான சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றத் துறைகளில் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்தக் குழுவிற்கு ஒரு முறையான அழைப்பு அரசிடமிருந்துத் தேவைப்படுகிறது. ஆனால் அது அரசிடமிருந்து போவது போல் தெரியவில்லை.
உதவும் செயலில் தனித்து விடப்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. புணரமைப்பில் எந்தவித முயற்சியும் அந்த மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை. இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு சுத்தத்தைப் பற்றியும், உடல் பாதுகாப்பு பற்றியும் உள்ளூர் வாசிகளிடம் பயிற்சி வகுப்புகள் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள். இதுவும் புணரமைப்பு மற்றும் பிழைப்பக்கான மறுசீரமைப்பு சம்மந்தமான செயல்களில் முக்கியமான பகுதியாகும்.
தனித்து விடப்படுதல் - ரேவதி
மாரியம்மாள் வசிக்கும் தீவில் அடிக்கடி இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புகள் நிகழும். அவளுடைய கிராமம், செஞ்சியம்மன் நகர். சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் வடக்கில் ஆந்திர எல்லைக்கருகில் உள்ளது. அவளுடைய கிராமத்திற்கு அருகிலேயே 18,440 ஹெக்டேர் பரப்பளவுள்ள புலிக்காடு ஏரி உள்ளது. அந்த ஏரியையும். வங்காள விரிகுடா கடலையும் பிரிக்கும் ஒடுக்கமான துண்டு நிலப்பகுதியில் மீனவமக்கள் வசிக்கின்றனர்.
டிசம்பர் 26ல் ஏற்பட்ட சுனாமி வெள்ளத்தால் துண்டு நிலப்பகுதி, ஏரி மற்றும் 21 தீவுகள் (அதன் ஓரங்கள்) உப்புத் தண்ணீரால் நிரப்பப்பட்டது. மாரியம்மாளும் தன்னுடையக் கட்டுமரம், வலைகள் எல்லாவற்றையும் இழந்தார்.
அவர் கிராமத்தில் இருளர் இனமக்களே அதிகம் வசிக்கின்றனர். அவர்களிடம் நாற்பது கட்டுமரங்கள், அதில் இருபத்தியெட்டை பெண்களே சொந்தமாக வைத்திருக்கின்றனர். இந்த சுனாமியால் ஏறக்குறைய அவைத் தொலைந்தோ அல்லது பழுதடைந்தோ விட்டன. கிராமத்தினர் உடைந்து போனக் கட்டுமரத்துண்டுகளைக் காட்டுகின்றனர். அதில்லாமல் சில கட்டுமரங்கள் முழுதாகவோ. உடைந்தோ சேற்றிலும். பள்ளங்களிலும் புதைந்தக் கதையை சொல்கின்றனர்.
மாரியம்மாள் தன் கணவனுடனோ. சில நேரங்கள் குழந்தைகளுடனோ முன்பெல்லாம் பிடித்தது போல இனி மீன் பிடிக்க முடியாது. சில நேரங்கள் தன் கணவனுக்கு உடல்நலை சரியில்லாதபோது இவர் மட்டுமே தனித்துப் போய் மீன் பிடித்தக் கதையை வருத்தத்தோடு சொன்னார்.
இங்குப் பெண்கள் காலங்காலமாக கடற்கழிக்கு சென்று இறால், நண்டு, பூனை மீன், சிப்பி, மட்டி போன்ற வகைகளைப் பிடித்து வந்திருக்கின்றனர். குழந்தைகளும் அவர்களுடன் இவ்வேலையில் சேர்ந்து கொண்டதுண்டு.
செஞ்சியம்மன் நகரில் சுனாமியால் இரண்டு ஆண்கள் இறந்திருக்கின்றனர். தவறான சில பதிவினால் இறந்த அவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வந்து சேரவில்லை.
ஏறக்குறைய இங்குள்ள அறுபத்து மூன்று குடும்பங்களும் சுனாமியால் இன்று மீன் பிடிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். இனிமேல் கடற்கழியில் மீன் பிடிக்கக் குறைவான வழிகளே இருக்கின்றன. இருளர் இன மக்களோ, அருகிலுள்ள கிராமங்களின் தலித் இன மக்களின் பலரோ கடலில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஏரிக்கு இடையில் உள்ள துண்டு நிலப்பரப்பில் வசிக்கும் மீனவர்களேத் தங்களுக்கு சொந்தமானது என்று கடல்பரப்பை, மற்றவர் மீன் பிடிக்காமல் பாதுகாத்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் தைரியமான இருளர் ஆண்களில் சிலர் கடலுக்கு மீன்பிடிக்க, மீனவர்களின் கட்டளையையும் மீறி சென்றனர். ஆனால் தொடர்ந்த எழுந்த கலவரத்தில் இருவர் இறந்ததே மிச்சம். மாரியம்மாள், "இதனால் எங்கள் மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இனிமேல் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தனர்”, என்று சொன்னார்.
கடலுக்கு அருகிலுள்ள மற்ற கிராமங்களுடன் ஒப்பிடும் போது பார்ப்பதற்கு செஞ்சியம்மன் நகர், சின்ன குடிசைகள் மோசமான பாதைகளுடன் வறுமையாகக் காட்சித் தருகிறது.
மாரியம்மாளின் சொந்த கிராம மக்களின் வாழ்க்கை ரொம்பவும் கடினமானதாக இருக்கிறது. கடல் சீற்றம் கொள்ளும் போது கழிமுகத்தில் வேகமான அலைகள் வந்து தாக்கும். அப்போது மீன் பிடிப்பது என்பது ரொம்பவும் கடினமானதாக இருக்கும். அதுவும் சில வருடங்களுக்கு முன்பு அருகில் ஒரு துறைமுகம் வந்தததிலிருந்து புவியியல் மாற்றம் ஏற்பட்டு இதுபோல் அடிக்கடி நடக்கிறது. "அலைகள் வேகமாகவும், திடீரென்றும் கழிமுகத்தினைத் தாக்கி எங்கள் தலையைத் தாக்குகிறது", என்கிறார் மாரியம்மாள்.
கிராமத்தினருக்கு உள்ளூர் தேவாலயத்திலிருந்து உதவிகள் வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு உள்ளூர் என்ஜிஓ அமைப்பும் அவர்களின் வாழக்கைத் தொழிலுக்கு வழிவகை செய்து கொண்டு இருக்கிறது. உள்ளூர் என்ஜிஓவால் நிர்வகிக்கப்படும் சேமிப்பு மற்றும் வரவு குழுமத்தில் செயலாளராக மாரியம்மாள் உள்ளார். கிராமத்தினரின் வாழ்க்கைத் தொழிலைச் சீராக்கத் துவக்கமான பணிகள் நடைபெறும் என்று மாரியம்மாள் நம்புகிறார்.
ராஜுவ் காந்தியின் அம்மா
சத்யா சிவராமன்
அன்று மீண்டும் ஒரு பவுர்ணமி இரவு என்பதால் வானிலிருந்து நிலவு ஒளி வெள்ளமாக முழுக்குத்துறையின் மேல் விழுகிறது. தென்னிந்தியாவில் கடலோர தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி கிராமம் முழுக்குத்துறை.
சுற்றிலும் கிடக்கும் உடைந்த கற்களின் வழியேக் குளிர்ந்த கடற்காற்று. கைகளைத் தலையின் பின்னால் கட்டியபடி அமர்ந்திருக்கும் ராஜீவ்காந்தியின் (வயது 18) மேல் வீசுகிறது.அவர்கள் குடும்பம் முன்பு வசித்த இடத்தினில் இப்போது ஒரு சிறியக் கோயில் தோன்றி அடையாளம் காட்டுகின்றது.
கோயிலில் ஒருக் கொடி சத்தமில்லாமல் பறந்து கொண்டிருக்க, அதன் கீழே ஒரு சிறிய செங்கற் கூடாரம் இருக்கிறது. உள்ளே ஒரு சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படம் காய்ந்த மாலையை சுமந்து இருக்கிறது. போனவருடம் கிறிஸ்மஸ்க்கு மறுநாள் வந்து தெற்கில் பல பகுதிகளையும் தெற்காசியாவையும் ஸ்தம்பிக்க வைத்த சுமத்திரா சுனாமி தன்னை இழுத்துச் சென்றபின் ராஜீவின் அம்மா லஷ்மி (வயது 40) விட்டுச்சென்றது. இவைகள் மட்டுமே.
ஆறு மாதங்களுக்கு முன்னர். இது போன்றதோர் பவுர்ணமி இரவில், ராஜீவ் தன் இரவு உணவை முடித்துவிட்டு வங்காளவிரிகுடாவின் கடற்கழியில் மீன் பிடிக்க சென்றார். அவருடையக் குடும்பத்திற்கும். மற்ற உள்ளூர் மீன்பிடி குடும்பங்களுக்கும் பல தலைமுறையாக பிழைப்புக்கு நிலையான ஆதாரம் இதுவே. அருகிலுள்ள சந்தையில் எந்த நாளும் கிலோ ரூ. 250/க்கும் குறையாமல் விற்கும் வெள்ளைப்புலி இறால்களைப் பிடித்துக் கொண்டு டிசம்பர் 26 ஆம் தேதி விடியற்காலை ராஜுவ் திரும்பி வந்தார்.
லஷ்மி அதற்கு முன்பே வீட்டிலிருந்து கிளம்பி எப்போதும் போல் உள்ளூர் மீனவர்களிடம் மீன் வாங்கி, அருகிலுள்ள கிராமங்கள். நகரங்களில் குறைந்த லாபத்திற்கு விற்க சென்றிருந்தார். அவ்வாறு வந்த வருவாயிலேயே மொத்தக் குடும்பமும் உயிர் வாழ்ந்தது.
"எப்படி அந்த விதிவச காலையில் தான் தன் அம்மாவைத் தேடிச் சென்றதையும், பின்பு அம்மாவைப் பார்த்து வீட்டுக்கு வந்து இறாலை விற்பனைக்கு எடுத்துப் போகச் சொன்னதையும்", இப்போது சங்கடத்துடன் நினைவு கூர்கிறார் ராஜுவ். "அப்போது மட்டும் அம்மா வீட்டுக்கு வராமல் இருந்திருந்தால் எப்படியும் சுனாமி வந்தபோது கடற்கரையிலிருந்து தூரமாகவே இருந்திருப்பாள். நானே அவளோட சாவுக்குக் காரணமாயிட்டேன்", என்று சொல்லும்போதே முகம் தேற்ற முடியாத சோகத்தில் கறுக்கிறது.
உண்மையில் நடந்தது என்னவெனில், முழுக்குத்துறையில் முதல் அலை அடித்த போது உயிரோடிருந்த லஷ்மி, தன் கணவன் மற்றும் குழந்தைகளை ஓடச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் வீட்டை நோக்கிச் சென்றிருக்கிறார். இரண்டாவதாக வீசிய முன்பைவிட் சற்றே பெரிய அலையில் அடித்துச் செல்லப்பட்டு அதிர்ஷ்டமின்றி உயிரிழந்திருக்கிறார்.
மேலும் நான்கு கிராமப் பெண்களுடன் தலைமுடி முட்புதரில் சிக்கிய நிலையில் இறந்திருந்த லஷ்மியை கடைசியில் அவர்கள் கண்டு மீட்டிருக்கிறார்கள். தன் வலக்கையில் ஒருப் பணப்பையை இறுக்கப் பிடித்த நிலையில் இறந்திருக்கிறாள் லஷ்மி. கடின உழைப்பில் சேர்த்த நகைகள் சில, அலுமினியப் பெட்டியிலிருந்த பணம் போன்றவற்றை மீட்டு வரச் சென்ற லஷ்மி கடைசியில் தன் உயிரையே அதனால் இழந்திருக்கிறார்.
பழைய இந்தியப் பிரதமரின் அழகும், புகழும்,அதிர்ஷ்டமும் தன் முதல் மகனுக்குக் கொஞ்சமேனும் வரவேண்டும் என்ற ஆசையில், மற்ற எந்த மீனவர் குடும்பத்திலும் இல்லாத புதுமையாய் தன் மகனுக்கு "ராஜுவ் காந்தி" என்று பெயரிட்டிருக்கிறார்.
திடமான, கடுமையான உழைப்பாளிப் பெண்ணான லஷ்மி எப்படியோப் பெரும் போராட்டத்தில் தன் எல்லாக் குழந்தைகளையும் தொடக்கக் கல்வி வரைப் படிக்கவைத்திருக்கிறார். அது ஒன்றும் அவ்வளவு எளிமையானதாக அவருக்கு இருக்கவில்லை. ஏனெனில், அவருடையக் கணவர் செம்பன் (வயது 45) நாள் முழுதும் குடிப்பவராக, மனைவியின் சொர்ப்ப வருமானத்தையும் செலவழிப்பவராக, எப்போதாவது வரும் தன் மீன்பிடி வருமானத்திலும் எந்த பங்கும் தராமல் இருந்திருக்கிறார்.
ரெஜினா (வயது 21), லஷ்மியின் மூத்தமகள் திருமணமாகி கடலூரிலிருந்து சற்று துõரத்தில் கணவன் வீட்டில் இருக்கிறார். ராஜுவ் தன் பள்ளிப்படிப்பை ஐந்தாவதோடு நிறுத்திவிட்டு தன் குடும்பக் கட்டுமரம், வலைகளுடன் மீன்பிடித் தொழிலில் இறங்கிவிட்டார். மகேஷ்வரி (வயது 15) இவரும் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு குடும்ப வேலைகளில் அம்மாவுக்குத் துணையாக இருந்திருக்கிறார். இவர் தன் திருமணத்திற்குக் காத்திருக்கிறார் இப்போது. செல்வம் (வயது 8) குடும்பத்தின் கடைக்குட்டி. சுறுசுறுப்பானவன். "ஒருநாள் படித்து மாநகரத்தில் பெரிய அதிகாரியாக வருவான்", என்று அம்மா லஷ்மி அவன் மேல் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்.
இப்போது ராஜுவை அம்மா லஷ்மி, தம்பி செல்வத்தின் கல்வி, தங்கை மகேஷ்வரியின் கல்யாணம். அப்பாவைக் குடியிலிருந்துக் காப்பது தன் சொந்த எதிர்காலம் போன்ற பெரியப் பொறுப்புகளுடன் திடீரென்று விட்டுச் சென்றிருக்கிறார்.
"அம்மாவுக்கு உதவிடவும், கொஞ்சம் பணத்தை சேர்க்கவும் நான் வெளிநாடு போவலாம்னு இருந்தேன், என்று சுனாமி வருவதற்கு ஒரு மாதம் முன்பு எடுத்த புதுப் பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் பிரதியைக் காட்டுகிறார் ராஜுவ். வந்த சுனாமியில் மற்ற குடும்ப உடமைகளுடன் சேர்தது அவரது ஒரிஜினல் பாஸ்போர்ட்டும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலிருந்து பல இளைஞர்கள் முன்பே சிங்கப்பூர். மலேசியா அல்லது துபாயில் குடியேறி விவசாய அல்லது கட்டிடக் கூலிகளாக வேலை செய்கின்றனர். அவர்கள் ஊருக்கு வரும் போதெல்லாம் வெளிநாடுகளில் நல்ல எதிர்காலம் இருப்பதாகப் பல பொய்க் கதைகளைக் கூறிச் சென்றிருக்கின்றனர்.
இப்போதுள்ள சோகமான குடும்பச்சூழலில் எங்கும் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை ராஜுவிற்கு அவருடைய சொந்த வார்த்தையில் சொல்வதென்றால், "குடும்ப நலனுக்காக என் எல்லா விருப்பங்களையும் மனதிற்கு உள்ளேயே புதைத்துக் கொள்ள முடிவெடுத்தாகிவிட்டது.
தமிழ்நாடு அரசு லஷ்மியின் மரணத்திற்கு நஷ்டமாக ரூபாய் ஒரு லட்சம் முன்பேக் கொடுத்துள்ளது. மத்திய அரசும் அதே அளவுத் தொகையை அளிப்பதாக உறுதிக் கொடுத்துள்ளது. அந்தத் தொகை இன்னும் வரவேண்டியுள்ளது. டெல்லியிலிருந்து ஒரு என்ஜிஓ வந்து மொத்தக் கிராமத்திற்கும் தற்காலிக வீடுகள் கட்டித்தந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் மாநில அரசும் அவர்களுக்கு விரைவில் நிலையான வீடுகள் கட்டித் தரப்போவதாக பேச்சு அடிபடுகிறது.
ஆனால் இதோடு பிரச்சினைகள் முடிந்து விடுவதாய் இல்லை. லஷ்மியின் வியாபரத்திற்காகவும். சுனாமி வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய புது மீன்பிடி படகு, வலைகளுக்காகவும் அதிக அளவுப் பணம் கடன் வாங்கப்பட்டுள்ளது. எல்லாக் கடன்களும் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. இதில் கொடுமை என்னவெனில் புதியதாய் வாங்கியப் படகையும், வலைகளையும் சுனாமி வாரிக்கொண்டு சென்று விட்டது. இப்போது அந்தக் கடன், மாதத்திற்கு இருபத்தி ஐந்து சதம் வட்டியோடு முன்னால் பயமுறுத்தியபடி நிற்கின்றது. கடனை விரைவாகத் திருப்பித் தராமல் போனால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்.
நஷ்ட ஈட்டுத் தொகையில் ஒரு பகுதியை சிலக் கடன்களைத் திருப்பித்தர எடுத்துக் கொண்டாலும் மகேஷ்வரியின் திருமணத்திற்கு வேறு வரதட்சணையாக பணம் தேவைப்படுகிறது. இரண்டு இலட்ச ரூபாய் பணம் வரதட்சணையாக அவர்களுக்குப் பிடித்த கடலூர் வரனுக்குத் தேவைப்படுகிறது.
இந்தக் கவலைகள் போதுமென்றில்லாமல், திடீரென்று செம்பன் வேடிக்கையாக லஷ்மி மரணத்திற்குப் பெற்ற நஷ்டஈட்டுத் தொகையில் கொஞ்சம் கூட தன் குடும்பத்திற்கு கொடுக்க விருப்பமில்லாமல் இருக்கிறார். செம்பன் தன் சொந்தக் குழந்தைகளை விட்டுவிட்டு மீண்டும் வேறு ஒருப் பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாக ராஜுவ் நம்புகிறார்.
"இந்த எல்லாக் கஷ்டங்களையும் சுமக்க வேண்டியது என்னுடைய அப்பாவே... ஆனால், அவர் தன்னால் எதுவும் செய்ய முடியாது, என்று சொல்கிறார்," என்று சொல்லும் போது ராஜுவ் குரலில் அதிர்ப்தி இல்லை, பொறுமையே இருக்கிறது. இரவுக் காற்றில் சற்று குளிமை கூடுகிறது. வீட்டிற்குப் போகும் முன் கடைசியாக ஒருமுறை அம்மாவின் முகத்தைப் பார்க்கிறார் ராஜுவ்.
தன் வீட்டை நெருங்கும் போது ராஜுவின் நடையில் தெளிவும், நம்பிக்கையும் சுறுசுறுப்பான வேகமும் இருக்கிறது.
கடலை நோக்கிய வாழ்க்கை
"மீனவ மக்களின் வாழக்கையில் மறு ஏற்பாடு மற்றும் புணரமைப்பு கடற்கரைப் பகுதிகள் இல்லாமல் வேறெங்குமான இடத்தில் என்பது முடியாதது ஜி.சங்கர், வல்லுநர், "ஹேபிடேட் டெக்னாலாஜி குரூப் லிமிடெட், திருவனந்தபரம்.
பேட்டி எல். அஜீத்,
அரசாங்கம் மற்றும் கடலுக்குத் தூரமாக வசிக்கும் மக்கள் ஓர் நாடு ஓர் இனம் என்ற விதத்தில் ஒன்றாக சேரவேண்டும். குறிப்பாக மீனவ மக்கள். அவர்களின் வாழ்க்கைக் கடலையே நம்பி உள்ளது என்தால் கடலோரம் வசிக்கிறார்கள். இப்போது முன்னேற்றம் மற்றும் மேம்பாடு என்ற வகையில் தூரமாகவே இருக்கின்றனர்.
ஆகையால் மீனவ மக்களுக்கான மாற்று ஏற்பாடு மற்றும் புணரமைப்பு வேறெங்கோ கடற்கரை பகுதியில்லாத இடத்தில் என்பது முடியாதது. இங்கு முதல் தேவை ஏக மனிதாபிமான அணுகுமுறை. சுனாமி போன்ற பேராபத்து சூழ்நிலைகளில், உடனடி செய்ய வேண்டிய மீட்புப் பணிகள் என்ற அளவில் தொகுப்பு வீடுகள் மிகக் குறைந்த பட்ச முக்கியத்துவம் உடையது. ஆனால் அதிக முக்கியத்துவமோ அவர்களின் பிழைப்பிற்கு வழிசெய்தல் என்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
தாறுமாறாக்கப்பட்ட மக்கள். தங்களின் அடிப்படை வாழக்கை எந்த உதவியும் இன்றி எதிர்காலம் இருண்டதாக உணரக்கூடாது. மற்ற உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளுடன் இன்னொரு பககத்தில் அவர்களின் பிழைப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
அவர்களுக்கு மீன்பிடி தொழில்தான் தெரியும் என்பதால் கடற்கரைப் பகுதியிலிருந்து தூரமாக அவர்களின் இருப்பிடத்தை மாற்றக்கூடாது. அவர்களுக்கு விழிப்புடன் இருப்பது எப்படி என்றும் மேலும் பேராபத்துக் காலங்கள் பற்றிய விபரங்கள், ஏற்பட்டால் உடன் செய்ய வேண்டிய மாற்று வழிகள் போனறவைத் தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும். மூன்று அல்லது ஐந்து கிலோமீட்டருக்கு ஒன்றாக அவர்களுக்கு எச்சரிக்கைக் கொடுக்க ஏதுவாக வானொலிகள் மற்றும் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட வேண்டும்.
எப்போதெல்லாம் இதுபோல் பேராபத்துகள் நிகழ்கின்றதோ அப்போதெல்லாம் ராணுவம் அழைக்கப்பட வேண்டும். அருகிலுள்ள பள்ளிகள், சமுதாய மண்டபங்கள் போன்றவற்றிற்கு இடம் மாறும் மக்களைப் போல் கூடாரத்திற்கு மாற்றப்பட வேண்டும். இராணுவ வாழ்க்கை கூடாரங்கள் போல் இருபது நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மீட்புப் பொருட்கள் இராணுவம் அல்லது துணை இராணுவம் வழியாக வினியோகிக்கப்பட வேண்டும். இதனால் வசிப்பவர்களிடையே ஒரு ஒழுங்கும், தைரியமும் ஏற்படும்.
இந்த இருபது நாட்கள் இந்தியா போன்ற நாட்டில் உள்ளூரிலேயேக் கிடைக்கும் பனை ஓலைகள் போன்ற நசிந்து போகும் பொருட்களைக் கொண்டு பாதி நிலையான வீடுகள் கட்டப்போதுமானதாக இருக்கும். தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி அரசுகள் வழங்கிய தகர தகடுகள் மற்றும் தார் பூசப்பட்ட தகடுகள் கொண்டுக் கட்டப்பட்ட வீடுகளை விட, தென்னை அல்லது பனை ஓடைகளால் வேயும் வீடுகள் குறைந்த விலையில், இயற்கைக்கும் ஆதரவானதாக இருக்கும். தகரம் மற்றும் தார் பூசப்பட்ட வீடுகளில் வாழ்வது என்பது இழிவானது, அறிவார்த்தமில்லாதது மேலும் இந்திய சீதோஷ்ண நிலைக்கு வசிக்க லாயக்கற்றது.
தற்காலிக மற்றும் நிலையான வீடுகள் கட்டும்போது உள்ளூர் வாசிகள் மற்றும் அந்த வீடுகளில் வசிக்கப்போவோரின் ஈடுபாடு என்பது ரொம்பவும் முக்கியம். இதனால் அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலும், ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அனுபவித்த நஷ்டங்களின் காயத்தை ஆற்றும் வகையிலும் இருக்கும். அதில்லாமல் அவர்கள் அப்படியே எந்த வேலையும் இன்றி, எதிலும் கலந்து கொள்ளாமல் சுற்றி என்.ஜி.ஓக்கள் செய்யம் புணரமைப்பு பணிகளை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தால். எந்த விதத்திலும் உபயோகமில்லாமல் இருக்கிறோமே என்று உணர்வார்கள்.
அரசாங்கம் சில சமுதாய மண்டபங்களை மேன்மையான வகையில் கடலிலிருந்து சற்று தூரத்தில் உருவாக்க வேண்டும். அதில் ஆண் பெண் இருவருக்கும் தனித்தனி தங்கும் வசதிகளுடன், ஒரு பொதுவான உணவளிக்கும் இடத்துடன் இருக்க வேண்டும். தற்காலிகக் குடியிருப்புகளிலிருந்து சில நாட்களில் மக்கள் இங்கு இடம் மாற்றப்பட வேண்டும். பின்னால் இந்த மண்டபங்கள் தினம் உடல்நிலையைக் கவனிக்கும் மையம், ஆண் பெண் திறமைகளை வளர்க்கும் பயிற்சி மையம், மனக்காயததை ஆற்றும் மையம், மருந்தகம் போன்றவைகள் கொண்டு செயல்படலாம். இந்த மண்டபங்கள் மீனவ மக்களின் பிழைப்பிற்கு ஒரு மாற்று வழியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். இவை எதிர் காலத்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கக வேண்டும்.
நிலையான வீடுகளைக் கட்டுவதற்கு முன்னால் ஒரு சில பொருத்தமானக் குறிப்புகளை மனதில் கொண்டு செய்ய வேண்டும். யாருக்காக கட்டுகிறீர்கள்? எங்கு கட்டுகிறீர்கள்? மேலும் எவ்விதமான வீடுகளைக் கட்டுகிறீர்கள்? போன்றவை.
வீடுகள் கட்டும் பணியின் போது உள்ளூர் மக்கள் கலந்து கொள்வது என்பது முக்கியமானது ஆகிறது. ஏனென்றால் அதன் மூலமே அவர்களின் வாழ்க்கைமுறை, பிழைப்பு, சவுகரியங்கள் போன்றவற்றிற்கு ஏற்ற வகையில் கட்ட முடியும்.
நிலையான வீடுகளைக் கட்டுவது என்பது வேகமாக இல்லாமல் அதிக யோசனையுடன், அறிவார்த்த திட்டங்களுடன் நடக்க வேண்டும். எந்தப் பக்கத்தில் அதன் வாசல் இருக்க வேண்டும்? என்னவிதமான பொருட்கள் கட்ட உபயோகப்பத்தப்பட வேண்டும்? போன்றவற்றினைப் பற்றிய உள்ளூர் வல்லுநர்களின் கருத்துகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். எஃகு மற்றும் இரும்பு போன்றவைக் கடற்பகுதியில் அரிக்கப்படும் என்பதால் அடித்தளம் மற்றும் அடியாதாரம் கட்டும்போது கருங்கற் தூண்கள் மற்றும் இயற்கையான தென்னைமரக் கம்பங்கள் சிறந்ததாக இருக்கும். அடித்தளத்திற்கு மேல் கட்டப்படும் பாதிப்பகுதி மரப்பலகைகள் கொண்டு கட்டப்பட்டால் பேராபத்துக்களையும், மரணங்களையும், இரவுகளையும் குறைக்கும்.
நாகப்பட்டிணம் போன்ற புயற்காற்று வீசும் பகுதிகளில் நிலையான வீடுகளின் மேற்பகுதி மற்றும் கூரைகள் ஃபைபர் போன்ற குறைந்த எடையுள்ளப் பொருட்கள் கொண்டு கட்டப்பட வேண்டும்.
அதிக சமையக்காரர்கள் சேர்த்தால் எவ்வாறு குழம்பைக் கெடுத்து விடுவார்களோ, அதுபோல் கூட்டம் கூட்டமாக என்.ஜி.ஓக்கள் கூடி பெருமையடித்துக் கொள்கின்றனர். அரசாங்கம் சாதரணமாக இதனை மன்னித்து விடுகின்றது. எப்போதும் போல்அரசியல் குறுக்கீடுகள், அதிகாரமையங்களின் தவறுகள், எல்லாம் அதன் அதன் பங்கிற்கு மீட்புப் பணிகள் சரியான நேரத்தில் நடைபெற விடாமல் தடுக்கின்றன.
நன்றி: www.tsunamiresponsewatch.org