சுரஞ்சன்தாஸ் | தமிழில்: ஆர்.பெரியசாமி

“சுதந்திரத்தை நோக்கி-1940” என்ற பெருநூலின் முதல் பகுதியானது, இந்திய தேசியவாதம், அரசியல் சாசனம் சம்பந்தமான நிகழ்ச்சிப்போக்குகள், சத்தியாக்கிரகம், வகுப்புவாத அச்சுறுத்தல் ஆகியவற்றின் மீது இரண்டாவது உலகப் போர் ஏற்படுத்திய தாக்கம் குறித்து வெவ்வேறு வகைப்பட்ட ஆவணங்கள் ஏராளமானவற்றை வழங்கியுள்ளது. இந்தப் பகுதியானது, பெருந்திரள் மக்களது எதிர்ப்புகளின் பரந்த பின்னணியை பதிவுசெய்வதற்கான ஆவணப்படுத்தல் நடைமுறையை மிக நுணுக்கமாக விளக்குகிறது. இதில் பெருந்திரள் மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் என்பவை தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் ஒடுக்கப் பட்ட வர்க்கங்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டவையாகும்; இவை தவிர, மன்னராட்சி நடந்த பகுதிகளில் நடைபெற்ற போரட்டங்களும் உள்ளடங்கும் மொத்தமாக எடுத்துக் கொண்டால், பேராசிரியர் கே.என். பணிக்கர் அவர்களால் தொகுக்கப்பட்ட இரண்டு பகுதிகள் 1940ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல்தரப்பு அடுக்குகள் குறித்த பல்நோக்கு ஆவணப்படுத்தலை வழங்குகின்றன.

முதல் 2 அத்தியாயங்களும் முறையே தொழிலாளர் அரசியல், விவசாயிகளின் அரசியல் ஆகியவை குறித்து கையாள்கின்றன. இந்த அரசியல்களில் இடதுசாரிகள், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியூசி) அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆகியவை தீர்மானகரமான பங்காற்றின. பணவீக்க அதிகரிப்பு, பொதுமக்களுக்கான சரக்குகளை ராணுவத் தேவைகளுக் காக திருப்பி விட்டமை, பெருஞ்சேதகரமான கறுப்புச் சந்தை ஆகியவை-தொழிலாளர்களின் உண்மையான வருமானங்களையெல்லாம் சுருக்கிவிட்டன. இந்நிலைமை யானது, கூடுதல் பஞ்சப்படிக்காக தொழிலாளி வர்க்கப்போராட்டங்களை கிளப்பி விட்டது.

கல்கத்தாவில் துப்புறவுத் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். பம்பாய் நகரம், மார்ச்-4 முதல் ஏப்ரல் 12- வரை தொழிலாளர்களின் பேரெழுச்சிகளைக் கண்டது; இதில் ஆரம்பத்தில் 60 பஞ்சாலைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்; பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் பஞ்சாலைகள் முன்பு மறியலிலும் ஈடுபட்டனர். குஜராத்தில் பருத்தியிலிருந்து பஞ்சுபிரிக்கும் பெண்கள் 100 சதவீத ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் தொழிற் சங்கத்தினர் வெளிப்படையான மற்றும் தலைமறைவு செயல்பாட்டு முறைகளைக் கையாண்டனர்.

பணிக்கர் குறிப்பிடுவது போல, தொழிலாளர்களின் போராட்ட வீச்சுக்கு இணையானதாக விவசாயிகளின் கொந்தளிப்பு இருக்கவில்லை. எனினும் 1940-ல் பிரதான மாக விளைபொருட்களின் விலை உயர்வுகாரணமாக வேளாண்தாரர்களுக்கு கணிசமான திருப்திநிலைமை ஏற்பட்டது; இந்தவிலை உயர்வால், பெருமளவு உழவர்களும் இடைத்தரகர்களும் பயனடைந்தனர். ஆனால், நிலத்தில் உழைக்கும் விவசாயிகள் பட்டினிக்கு உள்ளாகினர்; மேலும், கிராமப்பொருளாதார ஆய்வுகள் குறித்து கிராமப்புறமக்களுக்கு பயிற்சிப் பள்ளிகளை நடத்தியதுடன் பிரசுரங்களையும் வெளியிட்டது.

இடதுசாரிப் போக்குக் கொண்ட அகில இந்திய மாணவர் சம்மேளனம் பெருமளவில் மாணவர்கள் கலந்து கொண்ட ஆர்பாட்டங்களை நடத்தியது; இந்த இயக்கங்கள் பிரதானமாக அரசியல் ரீதியானதாகவும் தேசியத்தன்மை கொண்டதாகவும் இருந்தன. அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயர்ந்த போதிலும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் அவர்களின் பங்கேற்பு வரம்புக்குட்பட்டதாகவே இருந்தது. அவர்கள் தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் பங்கெடுத் தனர்; ஒடுக்கு முறை தினத்தையும் கடைப்பிடித்தனர்; மேலும் தேசியத்தலைவர்களையும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் கொடுமைப் படுத்தியதை எதிர்த்தும் அவர்கள் போராட்டங்களை நடத்தினர். இதனால் மாணவர்கள், போலீசாரின் எதிர்நடவடிக்கைகளையும் அவர்களது கல்வி நிறுவனங்களின் ஒழுங்கு நடவடிக்கை களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்நூலில் உள்ள ஆவணங்கள் மாணவச் செயல்வீர்கள் மீது இருந்த கம்யூனிஸ்ட் செல்வாக்கை முக்கியப் படுத்துகின்றன.

பெண்களின் அரசியல் குறித்து அறிவதற்கு ஆர்வம் அளிக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளின் கலவையை எப்படி முன்னுக்கு கொண்டு வந்தது என்பதை அகில இந்திய பெண்கள் மாநாடு என்ற அமைப்பின் பதிவுகளிலிருந்து இந்நூல், விவரிக்கிறது;

ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் பற்றிய அமைப்பானது போராட்ட அரசியலின் ஏனைய அமைப்புகளைப் போல் இருக்க வில்லை. அனேகமாக விளிம்புநிலையிலிருந்த மக்கள் பிரிவுகள், ஒரு வலுவான போராட்ட முறையில் அணிதிரட்டப் படாதவைகளாக இருந்தன. ஆனால் அவற்றின் தலைவர்கள், காங்கிரஸ் தலைமையுடன் அதிருப்தியுடன் இருந்தார்கள் என்பதை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. அவை, பிரதான தேசிய நீரோட்டத்திற்கு வெளியே ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் இணைப்புக்கான கட்டம் உருவாக்கப்பட்டு வந்தது. இத்தொகுதியின் கடைசி அத்தியாயத்தில் அதிகரித்து வரும் தேசியவாத குணாம்சத்தை முக்கியப்படுத்திக் காட்டுவதற்கான விவரங்களை ஏராளமாக பணிக்கர் வரிசைப்படுத்துகிறார்; இந்த குணாம்சம் என்னவெனில் மன்னராட்சிகள் நடந்த பகுதிகளில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கிளர்ச்சி தொடங்கியது என்பது தான். ஆனால் இந்தப் பகுதிகளின் மக்கள் இயக்கம், வருந்தத்தக்க வகையில் செயல் படாத ஒன்றாக இருந்தது. எனினும் இந்த இடைவெளியை நிரப்புவதற்கு இந்தத் தொகுதி ஒரு புதிய அம்சத்தைத் தருகிறது.

எனினும், இந்த ஆவணத்தொகுப்பு, பிரதான நீரோட்டமான தேசியவாதத்துடன் மக்கள் போராட்டத்தின் இருமுக உணர்ச்சி உறவுகளை வெளிப்படுத்துகிறது.

இந்தத் தொகுதியானது தனித்தன்மை வாய்ந்த அனுபவ ரீதியான அடித்தளத்தை அதாவது தொல்நூல்களின் விவரங்கள், அமைப்பு பற்றிய கட்டுரைகள், அந்தந்த உள்ளூர் மற்றும் தேசிய தினசரிப் பத்திரிகைகள் ஆகியவற்றைக் கொண்டதளத்தை - கொண்டுள்ளது. தொகுப்பாசிரியரின் செயலீடுபாடானது இந்திய சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்கள் மற்றும் மக்கள் பிரிவுகள் நாட்டின் சுதந்திரத்தை அடைவதில் மேற்கொண்ட நடவடிக்கைகள், அணுகுமுறைகள் மற்றும் கருத்துக்களை ஆவணப்படுத்துவதின் மூலம் இந்தத் தொகுப்பின் நோக்கம் மிகச்சிறப்பாக நிறைவேறியுள்ளது.

நன்றி : இந்து 9-11-10

Pin It