ஓர் அரசு, தமது மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கான செயல்திட்டங்களை இலட்சியமாக அறிவித்துக் கொண்டு, அந்த இலட்சியத்தை நோக்கிப் பணிகளை விரைவுபடுத்த ஓரு தொலை நோக்குத் திட்டம் வெளியிடுவது சரியே. அவ்வாறு வெளியிடப்படும், தொலைநோக்குத் திட்டம் அரசுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் வழிகாட்டுவதாக இருக்க வேண்டும்.

ஆனால், 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.க.தலைவி செல்வி செயலலிதா முதலமைச்சராக பதவியேற்றதற்குப் பிறகு, வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்டம் - 2023 என்பது அவ்வாறானதாக இருக்க வில்லை. மக்கள் நல்வாழ்வு என்ற பெயரில், தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கான ஒரு தொலை நோக்குத் திட்டமாகவே அது உள்ளது.

கடந்த, 21.02.2014 அன்று சென்னை கிண்டியில், ஐ.டி.சி. உயர்தர நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் - 2023-இன் இரண்டாம் பாகத்தை, தமிழக முதல்வர் செல்வி செயலலிதா வெளியிட்டார். இதற்கு முன்பு, கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று, இதே விடுதியில் தான், ஒரு விழா நடத்தி “தொலை நோக்குத் திட்டம் - 2023’’ -இன் முதல் பகுதியை அம்மையார் செயலலிதா வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசிடம் போதிய நிதியில்லை. எனவே, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்கவும், புதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தான் பன்னாட்டு பெருநிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் போடுகின்றது என இதற்கு ஒரு ஞாயமும் அரசுத்தரப்பாலும், முதலாளிய அறிவாளர்களாலும் முன்வைக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும், தொழில் வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும் என்பதும் தேவையான வைதான். ஆனால், இந்த தேவை மக்களுடைய தேவையை நிறைவு செய்வதாகவே இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் கட்சிகள் போடுகின்ற திட்டங்களோ, முதலாளிகளின் தேவையை மட்டும் நிறைவு செய்வதாக இருக்கும் வகையிலேயே இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, தமிழகத்தின் பள்ளிக்கல்வியை மேம்படுத்த வேண்டும் என அக்கறை கொள்ளும் ஓர் அரசு, அதற்கு முறையான நிதி ஒதுக்கி, அந்த நிதி சரியாக செலவிடப் படுகிறதா என கண்காணித்து, மக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆக்கப்பூர்வ மான வகையில் அதை செய்து முடிக்க முடியும். ஆனால், இதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு தனியார் கல்வி நிறு வனங்களை ஊக்கப்படுத்துவதும், அரசுக் கல்வி நிறுவனங்களை மூட நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதும் தான் தொடர்ச்சியான தமிழக அரசுகளின் சாதனை! கல்வி யில் மட்டுமல்ல, மருத்துவம், போக் குவரத்து என அனைத்துத் துறைகளிலும் தனியார் மயத்தைக் கொண்டுவந்துவிட இதுபோன்ற செயல் திட்டங்களே நடைமுறைப் படுத்தப் படுகின்றன.

இதன் ஒரு பகுதியாகத்தான் தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம்- 2023 வெளி யிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் குவிப்பதை முதன்மை நோக்கமாகவும், இதை முன் வைத்து தமிழகத்தின் உள் கட்டமைப்பு களை மேம்படுத்துவது இரண்டாம் நோக்கமாகவும் இருக்கும்படி இத்திட்டம் வடிவமைக் கப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கும் வேலை வாய்ப்புகளால் தமிழகம் பூத்துக் குலுங்கும் என செயலிலிதா கதையளக்கிறார்.

தொலைநோக்குத் திட்டம் - 2023, 2012லிருந்து 2023 வரையிலான 11 ஆண்டுகளில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த மட்டும் 15 இலட்சம் கோடி ரூபாய் தேவையென அறிவிக்கிறது. இதனைச் செய்வதற்கு, புதிதாக ‘தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்’ என்ற அமைப் பையும் ஏற்படுத்தி உத்தரவிட்டார் முதல்வர் செயலலிதா. அதாவது, குறைந்த பட்சம் ஓர் ஆண்டுக்கு 1 இலட்சம் கோடி ரூபாய் தேவை.

இந்த 1 இலட்சம் கோடி ரூபாயை, அரசே செலவு செய்யும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் தனியார் உதவியுடன் தான் இதைச் செய்யப் போவதாகவும், 04.04.2012 அன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் செயலலிதா தெளிவாக அறிவித்தார். “மாநில அரசின் நேரடி முதலீடுகள், அரசு-தனியார் கூட்டு முயற்சி மூலம் நிறை வேற்றப்படும் திட்டங்கள் ஆகி யவை தவிர, முழுக்க முழுக்க, தனியார் துறையின் முதலீடுகளும் இந்தத் தொலைநோக்குத் திட்டத் தில் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளன” என்றார் அவர்.

அவர் கூறியவாறே, 2012- 2013 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையின் போது, தொலை நோக்குத் திட்டத்தில் காணப்படும் உள்கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளுக்கு என வெறும் 1000 கோடி ரூபாயே ஒதுக் கப்பட்டது.

இதன் பொருள், அரசு ஒதுக்கி யது போக மீதியுள்ள அனைத்து முதலீடுகளையும்  தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்பதா கும். அரசு - தனியார் கூட்டு முயற்சி என்பதெல்லாம், உண்மையில் தனி யார்மயம் தானன்றி வேறல்ல!

ஆக, தமிழகத்தின் உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தமிழக அரசு, தன்னு டைய பொறுப்பிலிருந்து விலகி கட்டுமானப் பணிகள், சாலை மேம்பாடு உள்ளிட்ட பல பணி களை மறைமுகமாகவும் சூழ்ச்சிகர மாகவும் தனியாரிடம் ஒப்படைக் கவே இந்த தொலைநோக்குத் திட்டம் என்கிற இந்த தந்திரத் திட்டம் உதவி செய்கிறது.

15 இலட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய காத்திருக்கும் இந்த பெரும் பன்னாட்டு தனியார் நிறு வனங்கள், எத்தனை மடங்கு இலா பம் இதனால் கிடைக்கும் என் பதையெல்லாம் எண்ணிப் பார்க்கா மலா இதற்கு முன் வருகிறார்கள்?

தங்க நாற்கரச்சாலை என்ற பெயரில் இந்திய அரசு இந்தியா முழுவதும் நாற்கரச் சாலைகள் அமைத்தது. அதன் பணிகளை தனி யாரிடம் ஒப்படைத்தது. அந்த சாலைகளை பராமரிக்கும் பணி களுக்காக தனியார் நிறுவனங்கள் சுங்கச்சாவடிகள் அமைத்துக் கொள்ள இந்திய அரசு அனுமதி கொடுத்தது. இதன் விளைவு என்ன என்பதை நாம் பார்க்கிறோ மல்லவா? சாலையோர வழிப்பறி களை விட மிக மோசமான அள வில் இந்த சுங்கச் சாவடி வசூல் நடைபெற்றுக் கொண்டுள்ளது. நாடெங்கும் பல இடங்களில் ஒப்பந்த காலம் முடிந்தபிறகும், இந்த தனியார் நிறுவனங்கள் சுங் கச்சாவடி அமைத்து வரி வசூலில் ஈடுபடுகின்றன. அண்மையில், மகா ராட்டிரத்தில் ராஜ்தாக்கரேவின் மகாராட்டிர நவநிர்மாண் கட்சி, சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கிய நிகழ்வு, இது குறித்த வடநாட்டு ஊடகங்களில் விவா தங்களை எழுப்பியது.

இது போல, தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற மாநில நெடுஞ்சாலைகள், அரசு விடுதிகள், நகராட்சி - மாநகராட்சி சேவைகள் என பலவும், ‘உள் கட்ட மைப்பு’ மேம்பாடு என்ற பெயரில், தனியாருக்கு தாரை வார்க்கப்படக் கூடிய ஆபத்து, தமிழக அரசின் தொலை நோக்குத் திட்டத்தின் பின்னணில் புதைந்து கிடக்கிறது. ஏற்கெனவே, மாநகராட்சிகளில் குப்பை அள்ளுவது முதல் சாலை போடுவதுவரை பல திட்டங் களிலும் தனியார் நிறுவனங்கள் தான் ஈடுபட்டு வருகின்றன. இது நகராட்சி, ஊர் பஞ்சாயத்து வரை விரிவுபடுத்தவே, தொலைநோக்குத் திட்டம் - 2023, உதவி செய்யும். கிடைக்கும் கொஞ்ச நஞ்ச அரசு வேலைகளையும் மக்கள் இழக்க நேரிடும்.

தொலைநோக்குத் திட்டம்- 2023 வெளியானதிலிருந்து இது வரை, 18 நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க முன்வந்திருக்கின்றன என்று ஊட கங்கள் அறிவிக்கின்றன. இந்த நிறு வனங்கள் மொத்தமாக இதுவரை சற்றொப்ப 31,706 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதன் மூலம், 1.62 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளதாக முதல்வர் செயலலிதா இதனை ‘பெருமை’ யுடன் அறிவிக்கிறார்.

ஆனால், உண்மையில் அங்கு பணிபுரிவதாக அரசே அறிவித்த எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்தால், வெறும் 32,235 பேர் தான் இந்நிறுவனங்களில் பணியாற்ற முடியும் எனத் தெரிகிறது. ஆனால், மறைமுக வேலைவாய்ப்பு என்ற பெயரில் 1,30,000 பேருக்கு இந் நிறுவனங்களால் பயன் பெற முடியும் என தமிழக அரசு கூறுவது மோசடிக் கணக்கு!

மேலுள்ள பட்டியலை கணக்கி லெடுத்துக் கொண்டால், 1 கோடி ரூபாய் முதலீடு செய்து ஒரு ஆளுக்கு வேலை தரும்  இந்த பன் னாட்டு நிறுவனங்கள், இதிலிருந்து எத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான மனித உழைப்பையும், நீர் - நிலம் -காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களையும் கொள்ளையிடப் போகிறார்கள் என இவர்கள் மதிப்பிடத் தெரியாதவர்கள் அல்ல. மதிப் பிடத்தெரிந்தும் அதை மறைக்கி றார்கள்.

மேலும், இந்த பன்னாட்டு நிறு வனங்களின் கணிசமானப் பணி களில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்பே இல்லை எனலாம். திறந்தவெளிப் போட்டி என்ற பெயரில், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக உரிமைகளை காலில் மிதித்துவிட்டு, அயல் மாநிலத்தவர் களை அதிகமாகக் கொண்டே இப்பணிகள் நிரப்பப்படும். இந்த நிறுவனங்கள் அதிகளவில் கால் பதிக்கும் மாவட்டங்களான காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்டங்கள் தான், தமிழ் நாட்டிலேயே அதி களவு வெளி மாநிலத்தவர்கள் குடியேறியுள்ள இடம் என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசால், 32,000 கோடியை திரட்டி இவ்வளவு பேருக்கு வேலை அளிக்க முடி யாது, எனவே தான் முதலாளிகளின் தயவை நாட வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்படு கிறது என்றும் சிலர் விளக்கமளிக் கிறார் கள்.

யானையை வைத்துக் கொண்டு பிச்சையெடுக்கும் பாகன் போலத்தான் தமிழகத் தின் நிலையும் என நாம் ஒவ்வொரு முறையும் சுட்டிக் காட்டி வருகின்றோம். தமிழ் நாட்டிலி ருந்து இந்திய அரசு அடிக்கும் கொள்ளை மட்டும் சற்றொப்ப 1 ஆண்டுக்கு 1 இலட்சம் கோடியைத் தாண்டி விண்ணை எட்டுக்கின்றது. தமிழ் நாட்டின் மொத்த வரவு - செலவை விட 3 முடங்கு அதிகத் தொகை இது! இந்தியாவிற்கு அடிமையாக இருப்பதன் விளை வாக, இவை மொத்தத்தையும் இந்திய அரசிடம் இழந்துவிட்டு, தில்லியிடம் சில ஆயிரம் கோடிகளைக் கேட்டுப் பெறுதை தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் செய்கிறது.

இந்திய அரசின் தமிழ்நாட்டு வரி வருமானத்தில் பாதி பங்கை கேட்டுப் பெற்றால் கூட, தமிழக அரசே நேரடியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். அரசு நலத் திட்டங்களை சிறப்பாக வழங்க முடியும். ஆனால், அதை செய்ய வேண்டிய இடத்திலிருப்பவர்கள், இந்திய அரசுக்கு தமிழ்நாட்டை விற்கும் கங்காணிப் பணியையே முழுநேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த பன்னாட்டு நிறுவனங் களில் வேலை பெறுவதாகச் சொல் லும் இந்த 32 ஆயிரம் பேரில், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில்தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் வேலை போகும் என்ற பணி நீக்க அச்சத்துடன் தான் தன் பணியை செய் வார்கள். தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் குப்பையில் வீசப் பட்டு, குறைந்தபட்சம் 10 மணி நேர மாவது உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவர்கள். இதனைத் தட்டிக் கேட்க, இங்கு தொழிற்சங்க இயக்க மும் தொடங்கிட முடியாது. தி.மு.க. காலத்தில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த திருப்பெரும்புதூர் ஹூண் டாய் - நோக்கியா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனத் தொழிற் சாலைகளில், தொழிலாளர் இயக் கங்கள் எந்தளவுக்கு நிர்வாகத் தின் ஒடுக்குமுறைகளைச் சந்திக் கின்றன என்பதை தமிழ்நாடே அறியும்.

சிறுதொழில்களில் இளை ஞர்களை ஈடுபடுத்த ஊக்குவித்து, அவர்களை தன்னம்பிக்கையுடன் வாழ வைக்க வேண்டிய தமிழக அரசு, இளைஞர்களை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் திட்டமாகும்.

இப்போதைய தேர்தல் அறிக்கை யிலும் இதையே செயலலிதா முன் வைத்துள்ளார். செயலலிதா அர சின் தொலை நோக்குத் திட்டம் தமிழகத்தை பன்னாட்டு, வட நாட்டு பெருமுதலாளிகளிடம் தொலைக்கும் திட்டமாகும்.

Pin It