ம.செந்தமிழனின் ஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு சிறப்பான கட்டுரை. பாராட்டுகள். அது குறித்து மேலும் சில செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன். உலகில் இன்றும் வாழ்ந்து வரும் மரபினங்களான நீக்ரோ, மங்கோலியர், ஆத்திரிக்குகள் மற்றும் ஆரியருள் முதல் மூன்று மரபினத்தாரும் (race) பிற மரபினத்தாரை வேற்றவரைத் தமக்கு நிகராகவே கருதி சமமாகவே மதித்தனர்.

ஆயினும் ஆரியர் மட்டும் விலக்காக இவர்களிலிருந்து மாறுபட்டு தாம் குடியேறிய நிலப்பகுதிகளில் வாழ்ந்துவந்த மண்ணின் மக்களை அடிமைப்படுத்தியும், பூண்டோடு அழித்தும் வந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள. மாந்தன் காலடிபட்ட இடத்திலெல்லாம் புல் பூண்டுகள் வளரவொட்டாமல் தடயம் இன்றி அழிவது போல ஆரியர் தாம் குடியேறிய வட தென் அமெரிக்க நாடுகளின் நாகரிகங்களையும் நடுவாசியா, வட ஆப்பிரிக்கா, மற்றும் பிற நாடுகளிலும் வாழ்ந்த மக்களை தடயம் இன்றி அழித்துப் போட்டனர்.

இந்தியத் துணைக்கண்டம் மற்றும் சகாரா பாலைக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்காவில் வாழ்ந்த வாழும் மக்களை அவர்கள் அடிமைப்படுத்தி ஆண்டு வருவதும் வரலாற்று உண்மையே. ஆரியர் மட்டும் இவ்வாறான மனப் போக்கை கொள்வதற்கு அவர்களின் தாய்நிலமான ஐரோப்பாவில் நிலவும் கடுங்குளிரே காரணம். ஓர் ஆண்டின் பெரும்பகுதி பனிமூட்டமாகவே இருப்பதால் உணவுக்குப் பெரும் தட்டு நிலவும். ஐரோப்பிய வடஅமெரிக்கப் பறவைகள் இதன் காரணமாகவே தொலைவான இடங்களுக்குப் பெயர்கின்றன. Early Bird catches the prey என்ற பழமொழியும் இதன் காரணமாக எழுந்ததுதான்.

ஒரு பக்கம் குளிர்வாட்ட மறுபக்கம் பசி வாட்ட ஆரியர் வாழ்க்கை மிகக் கடினமானதாகவே இருந்தது. பனியின் காரணமாகவே ஆரியர்களால் எந்தத் துறையிலும் முன்னேற முடியவில்லை. ஆயினும் போர்க் கலையில் பிற மரபினத்தாரை விட வல்லமை பெற்றிருந்தனர். பிறமரபினத்தார் விலங்குகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்தினர். ஆரியர்களோ ஒருவரிடம் உள்ள பொருட்களைத் தட்டிப் பறிப்பதற்காகவே அவரை அழித்து அவர் பொருளைத் தமதாக்கிக் கொள்வதற்காகவே ஒரு ஆள் இன்னொரு ஆளை அழிக்கின்ற போர்த் திறனைப் பெற்றிருந்தனர்.

1. இதற்குச் சான்று பகர்வதுதான் Might is Right என்ற பழமொழி. அதாவது, ஒருவர் என்ன தான் முயற்சியால் அலைந்து திரிந்து ஒரு பொருளை அல்லது உணவுப் பொருளைப் பெற்றாலும் அது அவருக்கே சொந்தமாக வேண்டும் என்ற ஞாயம் இருந்தாலும் அவரை ஒருவர் ஆயுதம் கொண்டு தாக்கி வெல்வாரானால் அப்பொருள் வென்றவருக்கே சொந்தம். அது உணவானாலும் சரி , வாழ்க்கைத் துணையானாலும் சரி.

இதுவே ஆரியர் ஞாயமாக இருந்தது. உணவுத் தட்டின் காரணமாக survival of the fittest என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஞாயத்தை ஆரியர் ஏற்றனர். இதனால் பிறரை அழித்துச் சுரண்டி வாழ்வது என்ற மனப்போக்கு ஆரியருள் பரவலாக ஏற்கப்பட்டு வாழ்க்கை நெறியாகி விட்டது.

மற்ற பிற மரபினத்தார் வாழ்ந்த நிலப்பகுதியில் உணவு மண்டிக் கிடந்ததால் அவர்கள் பிறரை வரவேற்று உணவு கொடுத்து முகமன் செய்தனர். அவர்களுடைய ஞாயம், ஒருவர் முயன்று உழைத்து பெற்ற பொருள் அவருக்கே சொந்தமாகும் என்பதாகும், பிறர் வன்மையால் அதைக் கொள்வது ஞாயமற்றது அது கொள்ளையாகும்.

ஆரியர் உணவுத்தட்டின் காரணமாக ஐரோப்பாவை விட்டுப் பிற பகுதிகளில் குடியேறிய போது அவர்களுக்கு உழவுத் தொழில் மற்ற பிற தொழில்கள் ஏதும் தெரியாமையால் வல்லமைக்கே உரிமை (Might is Right) என்ற தம் ஞாயத்தை அங்கும் கடைப்பிடித்தனர்.

உண்மையில் அவர்கள் மற்ற மரபினத்தாரைப் போல உழவிலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டிருந்தால், அம்மக்களுடைய ஞாயத்தை ஏற்றிருந்தால் குமுகத்தில் அமைதி தவழ்ந்திருக்கும். நடந்ததென்னவோ எதிர்மாறு. போர்ப்பயிற்சி பெற்றிருந்த ஆரியர் போர்ப்பயிற்சி அற்ற பிற மரபினத்தார் மீது வன்மையால் போர்புரிந்து அவர் பொருளைக் கவர்ந்து அவர்களை அடிமைப்படுத்தி அவர் நாகரிகங்களை அழித்தனர்.

கலைகளை மொழிகளை அழித்தனர். இதுவே உலகம் முழுமையிலும் ஆரியரால் இன்றுவரை நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. ஆரியர் இந்தியத் துணைக் கண்டத்தில் அடியெடுத்து வைத்த போது மேற்சொன்ன நிகழ்வே அரங்கேறியது. தமிழர் ஆரியரிடமிருந்து அவருடைய போர்ப்பயிற்சியை கற்றபிறகு நல்ல தேர்ச்சி பெற்றதால் ஆரியரால் தமிழரைத் தென்னாட்டிலும் கிழக்குப் பகுதிகளிலும் வெல்ல முடியவில்லை.

ஆதலால் ஆரியர் தாக்கம் இப்பகுதியில் மிகக் குறைவு. இதை இன்றும் இம்மக்களின் தோல் நிறம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. எனினும் ஆரியர் தம் வஞ்சகத்தாலும், தமிழர் கோட்பாட்டை ஏற்று அதனோடு தம் வேள்விச் சமயக் கோட்பாட்டைக் கலந்து தமிழரிடம் பரப்பியதாலும் உடல் வலிமையால் வெல்ல முடியாத தமிழரைக் கருத்தால் வீழ்த்தினர்.

தமிழரும், இன்றுவரை ஆரியருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். இன்று புதிதாகத் தோன்றி பரவலாகி உள்ள ஊழியத் (service) தொழில்களில் ஆரியப் பார்ப்பனரே கோலோச்சுகின்றனர். இந்தத் தொழில்களில் முடிவு எடுக்கும் பொறுப்புகளில் இவர்களே பெருவாரியாக உள்ளனர். இன்னமும் தம் அதிகார ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். ஆதலால் வேலை நிகழ்த்துவோர் (performer) அறிக்கை தருவோர் (reporter) என்ற இருபிரிவுக் கேட்பாடு உள்ளது. இந்தக் கோட்பாட்டை நன்றாக உணர்ந்து நாம் அதில் தலை கீழ் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அறிக்கை தருவோர் பதவிகளில் தான் அதிகமாக ஆரியப் பார்ப்பனர் இருக்கின்றனர்.

எனவே, அறிக்கை தருவோர் பதவிகளை தேர்தலின் மூலமாக நிரப்பி அவற்றை தற்காலிகப் பதவிகளாக மாற்ற வேண்டும். வேலை நிகழ்த்தப் பதவிகளுக்கு அறிக்கைதருவோர் பதவிகளைக் காட்டிலும் அதிக சம்பளம் தருவதன் வாயிலாக அவர்களை அறிக்கை தருவோர் பதவிகளிலிருந்து அகற்றி வேலை நிகழ்த்துவோராக மாற்றினால் நம் போன்ற வேலை நிகழ்த்து வோரோடு பழகுவதாலும் அவ்வேலைகளின் முகாமையை நாம் அவர்களுக்கு உணர்த்துவதாலும் ஆரியப் பார்ப்பன மனப்போக்கை மாற்ற இயலும். பிறருக்குச் (குமுகத்திற்கு) சுமையாக உள்ள அவர்களைச் பிறருக்குத் துணையாக மாற்றினால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் அகலும். வெறும் கலப்பு மணங்களால் மட்டுமே ஆரியப் பார்ப்பனர்களைத் திருத்தி விட முடியாது. இதைத் தமிழ்த் தேசியத் தலைவர்களும் விரும்பிகளும் உணர்ந்து கொள்கைகளை வகுத்துச் செயல்பட வேண்டும் என்பதைச் சுட்டவே இதை எழுதிட நேர்ந்தது.