தமிழக அரசு. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதாக அறிவித்துள்ளது,

இந்திய அரசின் ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியன் என்ற அமைப்பின் கீழ் கடந்த 2012-13ஆம் ஆண்டுக்கான ஆய்வொன்று தமிழக பள்ளிகளில் நடத்தப்பட்டது.
 
தமிழகத்தில் 2 ஆயிரத்து 253 பள்ளிகளில் ஒரே ஓர் ஆசிரியர்தான் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார், இத்தகைய பள்ளிகள் அதிகம் கொண்ட மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது.

கிருஷ்ணகிரி -195. திருவண்ணாமலை - 159. சிவகங்கை-134. வேலூர்-127. விழுப்புரம்-113. தர்மபுரி-131 ஆகிய மாவட்டங்களில் அதிக பள்ளிகளில் ஓராசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார், இப்பள்ளிகளில் ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்புகள் வரை 765 மாணவர்கள் உட்பட மொத்தம் 83 ஆயிரத்து 641 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
 
16 ஆயிரத்து 421 பள்ளிகள் இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுகின்றன, ஈராசிரியர் பள்ளிகள் நடைமுறையில் ஓராசிரியர் பள்ளியாகத் தான் செயல்படும், சென்னை. விழுப்புரம். வேலூர். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் ஓராசிரியர்கள் கூட இல்லையென்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 21 ஆயிரத்து 931 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது, வேலூர். சேலம். காஞ்சிபுரம். திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகப்படியான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது, தமிழகத்தில் உள்ள 387 பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஓராசிரியர் உள்ளதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. வேலூர்-55. காஞ்சிபுரம்-49. கிருஷ்ணகிரி-36. கடலூர்-27. சென்னை-25. தர்மபுரி-25 ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஓராசிரியர் பாடம் நடத்துகிறார், இப்படிப்பட்ட பள்ளிகளில் 4,5 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

சான்மாரிகோ என்ற நாட்டில் ஓராசிரியருக்கு 7 மாணவர்கள் என்ற வீதமும். டென்மார்க் நாட்டில் 112 என்ற வீதமும். கனடாவில் 117 என்ற வீதமும். ஈரானில் 20 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற வீதமும் நடைமுறையில் உள்ளது.

காமராசர் காலத்தில் 20 மாணவர்களுக்கு ஓராசிரியர் நியமனம் செய்யப்பட்டார், அரசு ஆணை எண் 250. நாள் 29,02,1964, 1986ல் புதிய கல்விக் கொள்கை ராஜீவ் காந்தி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, கல்வியில் தனியார் மயமும். வணிக மயமும் ஊக்குவிக்கப் பட்டன, 1997ல் கலைஞர் ஆட்சியில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:40 என அறிவிக்கப் பட்டது, அரசு ஆணை எண்,520. நாள் 27,12,1997.

மாணவனின் இருப்பிடத்திலிருந்து தொடக்கப்பள்ளி 1 கி,மீ. நடுநிலைப் பள்ளி. 3 கி,மீ. உயர்நிலைப் பள்ளி 5 கி.மீ தொலைவு இருக்க வேண்டும் என்ற அரசின் முடிவு செயலில் இருக்கும் போதே பெற்றோர் தங்கள் குழந்தைகளை பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஏன் அனுப்புகிறார்கள்?

வெறும் ஆங்கில மோகம் என்பதை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது.
 
கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மாட்டுக் கொட்டகை போல் தோற்றமளிக்கின்றன, மரத்தடியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன, தூய்மையான குடிநீர் வசதியோ. சுகாதாரமான கழிப்பறை வசதியோ இல்லை, சுற்றுச் சுவர் இல்லை, திறந்த வெளியாய் பள்ளிகள் உள்ளன, மழை பெய்தால் ஒழுகும் கட்டிடங்கள், தேங்கி நிற்கும் முழங்கால் அளவு தண்ணீர் குளமாய் காட்சியளிக்கும்.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதைவிட அரசின் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதை நோக்கியே கல்வித்துறை அதிகாரிகளால் விரட்டப்படுகின்றனர், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் புத்தகங்கள். புத்தகப் பை. காலணி. மடிக்கணிணி. மிதிவண்டி போன்ற அரசின் நலத்திட்டங்களுக்கு புள்ளி விபரங்கள் திரட்டுவது. மையங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவது. விநியோகிப்பது. பதிவேடுகள் பராமரிப்பது. தணிக்கைக்காக அலைவதெல்லாம் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தனிப் பொறுப்பாய் உள்ளது.

கல்வி கற்பிக்கும் பணியை விட நலத்திட்ட பணிகளை செயல்படுத்துவது தான் ஆசிரி யரின் முதன்மைப் பணியாக பலருக்கு மாறிவிட்டது, சத்துணவு பொருட்களை பள்ளி களுக்கு அனுப்பி வைக்கிற அரசு நலத்திட்டப் பொருட்களை அவ்வாறு அனுப்புவதில்லை, பள்ளியின் தலைமையாசிரியரோ அல்லது பள்ளி ஆசிரியரோ கல்வித்துறை அலுவலகம் சென்று கொண்டு வருகின்றனர், இந்த அரசு ஆசிரியர்களை பொதி சுமக்கிற கழுதைகளாக மாற்றிவிட்டது என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ஆண்டு ஜீன் மாதம் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் தனி நபரின் பொருளாதார வரவை ஆய்வு நடத்த பள்ளி ஆசிரியர்களை இந்த அரசு வீடுவீடாக அனுப்புகிறது, மாதத்தில் பல நாட்கள் ஏதேனும் புள்ளி விபரம் கேட்டு கூட்டம் என்ற பெயரில் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர், ஆட்சியா ளர்களிடம் செல்வாக்கு பெறுவதற்காக பல கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களை கல்வி பணியைச் செய்யவிடாமல் நலத்திட்ட பணிகளிலேயே முடக்கி விடுகின்றனர்.

பல நாட்கள் பள்ளியில் ஆசிரியர் இல்லாததைப் பாரக்கிற பெற்றோர் தங்கள் குழந்தை களை எப்படி அரசு பள்ளிக்கு அனுப்புவார்கள்? பள்ளி ஆசிரியர் பிள்ளையே தனியார் பள்ளியில் படிக்கும்போது மற்றவர்கள் தங்கள் பிள்ளையை அரசு பள்ளிக்கு அனுப்புவார்களா?

பதினைந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் பெற்றோர் விரும்பினால் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஆங்கில வழி வகுப்புகள் கல்வித் துறை அதிகாரிகள் வாய் மொழி உத்தரவின் பேரில் தொடங்கச் சொல்லி நடைபெறுகிறது. தொடக்கப் பள்ளிகளில் மூன்று ஆசிரியர் இருந்தால் ஒருவர் ஆங்கில வழி வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை. ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் தான் ஆங்கில வழி வகுப்புக்களையும் நடத்த வேண்டும்.

உலகில் அனைவரும் அவரவர் தாய்மொழியைப் பயின்று முன்னேறி வரும் நிலையில் தமிழக அரசு இயற்கை நீதிக்கு எதிராக செயல்படுகிறது. ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக இருந்த நிலையில் 10ம் வகுப்புத் தேர்வில் ஆங்கிலத்தில் தவறி உயர்கல்வி பெறாதவர்கள் பலர் உள்ளனர். அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் என்றால் தமிழக மாணவர்கள் எதிர்காலம் என்னாவது? பிற்படுத்தப்பட்ட. தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களின் உயர் கல்வி கனவுகளை அழிக்கும் திட்டம் இது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு என்பது சமூக நீதிக்கும் எதிரானது.

மக்கள் நல அரசு என்பது மக்களுக்கு இலவசமாக கல்வியைத் தர வேண்டும், இலவசமாக மருத்துவத்தை தரவேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும்.
 
கல்வியைத் தர வேண்டிய அரசு சாராயக் கடைகளை நடத்துகிறது, சாராயக் கடையில் கிடைக்கிற லாபத்தில் 18 ஆயிரம் கோடியில் இருந்து 11 ஆயிரம் கோடி எடுத்து இலவசங்களுக்கு அரசு செலவு செய்கிறது.

கள்ளச் சாராயம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று மகிழ்ச்சி பொங்க பேசுகிறார் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அரசு சாராயம் விற்றால் அது நல்ல சாராயமாக மாறிவிடுமா? உடல் நலத்தைக் கெடுக்காதா? விபத்துக்களை உருவாக்காதா?

தாலிக்கு தங்கம் கொடுக்கிற அரசு எத்தனை தாலிகளை அறுத்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறதா? சாராயம் விற்றவர்கள் இன்றைக்கு கல்லூரிகளை நடத்துகிறார்கள், எல்லா கட்சிகளைச் சார்ந்தவர்களும் பள்ளிகளை. கல்லூரி களை நடத்துகிறார்கள், மக்கள் நலனுக்காக அல்ல,. கொள்ளையடிக்கதான்.

முதலாளிகள் எல்லாம் வேந்தர்கள், கல்வியாளர்கள் துணை வேந்தர்கள், சனநாயகத்தில் வேந்தர் என்ன? துணை வேந்தர் என்ன?

கல்வி மற்றும் அரசு பள்ளிகள் குறித்து பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் முத்துக்குமரன் முன் வைத்த அறிக்கையினை திமுக அரசும் கண்டுக்கொள்ளவில்லை, அதிமுக அரசுக்கும் அக்கறை கிடையாது.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என்று போராடுகிற நாம் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் போராடுகிறோம்.

பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறை நன்றாக உள்ளது, மாணவர் திறனும் மேம்பட்ட நிலையில் உள்ளது, தனியார் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளியில் பணிபுரிய விரும்புகிறார்கள், மாணவனோ தனியார் பள்ளிகளில் படிக்க விரும்புகிறான்.

சமு்க அக்கறை உள்ளவர்கள். கல்வியாளர்கள் தமிழகத்தின் கல்விச் சீர்கேட்டைப் போக்குவதற்கு போராட முன்வர வேண்டும்.

Pin It