காக்கை ஏமாந்த நேரத்தில் அதன் கூட்டில் குயில் முட்டையிடுமாம். காக்கையும் அந்த முட்டை தன் முட்டை என்று எண்ணி அடைகாத்து குஞ்சு பொறித்து வளர்க்குமாம். ஆனால், வளர்ந்த நிலையில்  குயில் குஞ்சானது தன் இனத்தோடு சேர்ந்து கொள்ளுமாம். தன் இனத்தை அடைகாத்து, உண வூட்டி வளர்க்கிறோம் என்று எண்ணி உழைப்பைக் கொட்டும் காக்கை கடைசியில் ஏமாந்து நிற்குமாம் அந்த நிலையில் நாம் இருக்கிறோம்.

ஆவடியில், இந்தியப் படைத்துறைக்கான திண் ஊர்திப் படைக்கலன்கள் தயாரிக்கும் திண் ஊர்தித் தொழிற்சாலை ((Heavy Vehicles Factory) இயங்கி வருகி றது. தமிழகத்தின் மண், காற்று, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை உறிஞ்சி உற்பத்தி கொடுக்கும் இந்தத் தொழிற்சாலை, வேலைவாய்ப்பில் மட்டும் மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்களைப் புறக்கணித்து விட்டு, அயலாரை பணியில் அமர்த்துகிறது. இது, குறித்து நாம் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர்ந்து எழுதி வருகிறோம். தமிழ்த் தேசியப் பேரியக்கம், அவ்வப் போது அப்பகுதி உணர்வாளர்களை ஒருங்கிணைத் துப் போராட்டம் நடத்தி வருகிறது.

ஆவடியில் அயல் இனத்தார் எந்த அளவிற்கு கொடிகட்டி பறக்கிறார்கள் என்பதற்கு, அங்கு நிறுவப் பட்டுள்ள வி. கே. கிருஷ்ணமேனன் சிலையே சான்று. நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த இவரே, ஆவடி தொழிற்சாலையை முதலில் கேரளத்தில் நிறுவ முயன்றார். பின்னர், கேரள மண்ணுக்கு சூழலியல் சீர்கேடுகள் ஏற்படும் எனக் கருதி, அத்தொழிற்சாலை தமிழகத்தில் நிறுவப்பட்டது.

ஆனால், வேலை வாய்ப்பில் மலையாளிகளுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்பட்டது. கேரளத்தின் ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து வந்து செல்லும் தொடர்வண்டிகள், ஆவடியில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கும் அளவிக்கு, மலை யாளிகள் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். மேலும், இப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் ரகீம் என்பவரும் மலையாளி ஆவார். இதற்கு நன்றிக் கடனா கவே, மலையாளி கிருஷ்ணமேனன் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.

இந்திய அரசின் ஆணைப்படி, தமிழகத்திற்கான இட ஒதுக்கீடான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19 விழுக்காடு, பழங்குடியின மக்களுக்கு 1 விழுக்காடு, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு என மொத்தமுள்ள 47 விழுக்காடு இடங்கள், தமிழர் களுக்கே வழங்க வேண்டும். ஆனால், இந்த இட ஒதுக் கீட்டைப் புறந்தள்ளிவிட்டு, அயலாரைப் பணியில் அமர்த்தி வருகிறது, தொழிற்சாலை நிர்வாகம்.

தமிழகத்தின் வேலைவாய்ப்பில் மண்ணை அள்ளிப்போட்ட இந் நிர்வாகம், இதன் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழிற்பள்ளியில் ((HVF – Traning school) தரும் கல்வியிலும், தொழிற்கல்வியில் ((ITI)), அயல் இனத் தாரை அதிகளவில் சேர்த்து வருகி றது. அதிலும், அடித்தட்டுத் தமிழ் மக்கள் அதிகமாகப் பயிலும் இப் பள்ளியில், அயலாரை 80 விழுக் காடு அளவிற்கு சேர்த்துள்ளது.

நடுவண் அரசின் கட்டுப் பாட்டில் இயங்கும் இதுபோன்ற தொழிற்பள்ளிகளில், 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் சேரலாம். சேர்ந்த பிறகு, முதல் இரண்டு ஆண்டுகள் தொழிற்கல்வியும் அடுத்த 1 ஆண் டுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி (Apprentice) யும் வழங்கப்படும்.

அவ்வாறு, கடந்த 2010ஆம் ஆண்டுவரை ஆவடி எச்.வி.எப். பள்ளியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப் பட்டது. 2010ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், மண்டல அளவோடு, இந்திய அளவிலும் வேலைக்கு ஆட்களை எடுக்க வேண்டும் என்று சொல்லப் பட் டது. ஆனால், இந்திய அளவில் மட்டும் விளம்பரம் கொடுக்கப் பட்டு மண்டல அளவில் (Regional)) என்பது மறக்கடிக்கப்பட்டது. அதே போல், வேலைவாய்ப்பு அலுவலகச் சட்டம் - 1956 (Employment Exchange Act - 1956) வழியாக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைக்கு ஆட்களை எடுக்கும் முறையும் செயலிழக்கச் செய்யப் பட்டது.

2014ஆம் ஆண்டு, தொழிற் பழகுநர் திருத்தச்சட்டம்,- பிரிவு - 5B-இன்படி, முதலாளிகள் மற்ற மாநிலத்தில் உள்ள மாணவர்களை தொழிற் பழகுநர் பயிற்சியில் ஈடுபடுத்தலாம் என்ற திருத்தம் செய்யப்பட்டது. அதாவது, தமிழகத்தில் உள்ள தொழிற் சாலைகளில் தொழிற்பழகுநர் பயிற்சியை அயல் மாநிலத்தவர்கள்  பெறலாம் என்று வழிவகை செய்யப் பட்டது.

தொழிற்பழகுநர் சட்டம் - 1961  - 3-A பிரிவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும், தொழிற்பழகுநர் திருத்தச்சட்டம்  - 2006 - 3B (2) பிரிவு, இதர பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்கின்றது. அதன்படி, தமிழகத்திற்கு 47 விழுக்காட்டு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, கடந்த 5 ஆண்டுகளில் ஆவடி பயிற்சிப் பள்ளியில், தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றவர்களின் விவரங்கள், இதனை மெய்ப்பிக் கின்றன.

avadi students

தொழிற்பயிற்சி ((ITI) முடித்து விட்டு, 1 ஆண்டு தொழிற் பழகுநர்  பயிற்சியில், தற்போது பயிலும் மாணவர்களில், 71.5 விழுக்காட்டி னர் அயல் மாநிலத்தவர் ஆவர். வெறும், 28.4 விழுக்காட்டினரே தமிழக மாணவர்கள்.

மேலும், 2014ஆம் ஆண்டு தொழிற்பழகுநர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம், புதிய தொழிலாளர்களை எடுக்க தாங்களே கொள்கை வகுத்துக் கொள்ளலாம் என்று கூறியது. அதனைப் பயன்படுத்தியே, ஆவடி நிர்வாகம், மிகை எண்ணிக்கை யிலான அயலாரை ஆவடி தொழிற் சாலையில் தொடர்ந்து பணிய மர்த்தி வருகின்றது. இச்சட்டத் தைப் பயன்படுத்தி, நூற்றுக்கு நூறு விழுக்காடு அயலாரை பணியில் அமர்த்தினாலும் வியப்பில்லை.

தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், 90 விழுக்காட்டு இடங்களை தமிழர்களுக்கே உறுதி செய்ய, தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும். உடனடியாக, கர்நாடகா வில் உள்ள சரோஜினி மகிசி ஆணையத்தைப் போல், தமிழகத் தில் தமிழர்களுக்குப் பணி வாய்ப் புகள் குறித்து ஆராய தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

மண்ணின் மக்களுக்கே வேலை உறுதி செய்ய வேண்டும்!

Pin It