உன் வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! விடாமல் ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்
பாரடா உனது மானிடப் பரப்பைப்!
பாரடட உன்னுடன் பிறந்த பட்டாளம்!
- பாரதிதாசன்
உணர்ச்சியும், அறிவும், ஒரு மனிதனிடத்தல் பயணப்படும் போது அறிவை விட உணர்ச்சி மேலோங்கினால் அந்த மனிதன் அறிவை இழந்து தான் நம்பிக்கொண்டிருப்பவற்றை கேள்விக்குட்படுத்துபவர்கள் மீது எரிந்து விழுவான் என்பதற்கு சமீபத்தில் மிகச் சிறந்த உதாரணம் பா. செயப்பிரகாசம் அவர்கள் தான்.
மன ஓசையில் தனது மார்க்சிய அரசியல் மேதமையை உறுதிப்படுத்திய பா.செ. இன்று புலிகள் மீது யாரெல்லாம் விமர்சனõ செய்கின்றார்களோ அவர்கள் மீது எரிந்து விழ ஆரம்பித்திருக்கிறார். அதாவது மன ஓசையில் காத்திரமான மார்க்சிய பாதையை தெளிவு செய்தவர் கடைசியாக மக்களை மனித கேடயமாக தங்களை பாதுகாக்க நினைத்த புலிகளுக்கு கேடயமாக தன்னை எப்பாடுபட்டாவது பாவித்துக்கொள்ள படாதபாடுபடுகிறார் என்பதை அவருடைய புலி விசுவாசத்திலிருந்து உணர்ந்து கொள்ள முடியும்.
சிங்களp பேரினவாத அரசு மட்டுமல்ல எந்த ஒரு அரசும் வன்முறைகள் மூலமே தன்னை நிலை நிறுத்தக் கொள்ளும் என்பது நிதர்சனம். இவ்வுண்மை தெரியாத அப்பாவி மார்க்சியரல்ல பா.செ. ஆனால் அந்த சிங்களô பேரினவாத அரசுக்கு எதிராக உருவான ஒரு இயக்கம் சொந்த மக்களை தங்களுக்கு விசுவாசமாக இருக்கவில்லை என்ற காரணத்திற்காக மின் கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது அல்லது கொன்று விட்டு ‘துரோகி’ என கழுத்தில் அட்டையை தொங்கவிடுவது, 24 மணிநேரத்தல் முஸ்லிம்களை ஊரைவிட்டு விரட்டுவது வறுமைக்காவும், பாலியல் தொழில் செய்யும் பெண்களை விபச்சாரி என பட்டம் கட்டி ஊர் மத்தியில் கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பது என வகை வகையான சித்திரவதைகளை செய்யும் புலிகளுக்கு வக்காலத்து வாங்க பா.செ மாதிரியான ஆட்களுக்கு வேண்டுமானால் சாத்தியம். ஆனால் மார்க்ஸ் ஏன் புலிகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டுமென திமிறி நிற்கிறார்.
இலங்கை அரசு சிங்கள பேரினவாதமென்றால் புலிகள் தமிழ் பேரினவாதமில்லையா - புலிகள் தமிழ்ô பேரினவாதம் என்பதற்கு பல சான்றுகள் நம் கண் முன்னே விரிந்து வியாபித்துì கிடக்கிறது. ஆனால் அதையெல்லாம் காண மறுத்து சிங்களம் மட்டுமே பேரினவாதம் - தமிúò தேசியர்கள் எந்த அராஜகவாதமுமில்லாத அப்பாவிகள் என திரும்பத் திரும்ப கூறுவதன் உள் நோக்கம் என்ன பா.செ.?
சிங்களô பேரினவாதம் செய்யும் இன ஒடுக்கல்கள், இனப்படுகொலைகள், இன அழித்தொழிப்புகளுக்கு நிகராக புலிகள் மீதும் சிங்கள அப்பாவிகளை கொன்றொழித்தது, தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களைì கொன்றொழித்தது, முஸ்லிம்களை பத்தொன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாம்களில் இருத்தி வைத்தது என குற்றம் இருக்கத்தானே செய்கிறது.
புலிகள் உண்மையிலேயே மக்களுக்கான (சமாதான காலத்தில்) ஜனநாயக அரசைத்தான் அல்லது ஒரு விடுதலை இயக்கத்தைத்தான் அவர்கள் நடத்தினார்களா?
அ.மார்க்ஸை விமர்சனம் செய்வது இருக்கட்டும் புலிகள் இதுவரை செய்து வந்த எந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறீர்கள் அல்லது சுயவிமர்சனமாகவாவது கருத்து கூறி இருக்கிறீர்களா நீங்கள்?
எல்லாம் போகட்டும்.
உங்களது ஈழ ஆதரவு சக பயணி வைகோ, குஜராத்தில் முஸ்லிம்களை ‘மோடி’ நர வேட்டையாடியபோது மத்தியில் ஆளும் பா.ஜ.க வினுடைய பங்காளி. மோடிக்கு எதிராக இடதுசாரிகளால் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புò தீர்மானத்திற்கு எதிராக அன்ற பா.ஜ.க.வினரை தவிர்த்து மோடிக்கு ஆதரவாக இரண்டு மணிநேரம் பாராளுமன்றத்தில் பேசிய நபர் இந்த வைகோ. அவர் பேசியதில் முக்கியமான விடயம் காங்கிரஸ்காரர்கள் சீக்கியர்கள் மீது நிகழ்த்திய படுகொலைகளை விட ஒன்றும் மோடி கூடுதலாக செய்து விடவில்லை என நரமாமிச வேட்டையாடிய மோடிக்கு வக்காலத்து வாங்கிய அரசியல்வாதி வைகோ. இன்றும் அவர் தமிழகத்தில் பல புலி முகவர்களில் ஒருவர். வைகோவுடைய இந்த செயலை எந்தக் கால கட்டத்திலாவது பா. செ கண்டித்ததுண்டா?
பாபர் மசூதி இடிக்கப்பட்டது சரி என்று கட்டுரை வெளியிட்டதும் இஸ்லாமியர்களை பயíகரவாதிகள் என வரையறை செய்ததுவும், பெரியரை பொம்பளைப் பொறுக்கி என்ற அளவிற்கு கீழ்த்தரமான கட்டுரையை வெளியிட்டு பார்ப்பன வெள்ளாள அதிகாரவர்க்கத்திற்கு விசுவாசமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வரும் காலச்சுவடு மீது பா.செ. எப்பொழுதாவது கண்டனத்தை வெளிப்படுத்தி இருப்பாரா? இல்லையே ஏன் வர்க்கப்பாசமா, மேல்சாதிப்பற்றா?
இன்று காலச்சுவடு இதழில் அடைக்கலமாகியதோடு மட்டுமல்லாமல் தங்கள் மன ஒசை பதிப்பகத்தில் இரண்டு நூல்களை வெளியிட்டு (காலச்சுவடு தயாரித்துக் கொடுத்தது) அந்நூல்களுக்கான (தீட்சண்யம், தொப்புள்கொடி) விற்பனை உரிமையையும் அந்நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள். நான் தமிழன், தமிழன் என கூவுகிறீர்களே பார்ப்பனì குலத்தில் பிறந்து பார்ப்பன சமூகத்திற்கும் பார்ப்பன மேலாதிக்கத்திற்கு என்ன இழிவுகளையும், காட்டிக்கொடுப்புகளையும் செய்யத் துணியும் கண்ணன் உங்களுக்கு மட்டும் தூய்மையானவராக தெரிந்தது எந்த அடிப்படையில்? சரி கடந்த மாதம் காலச்சுவடு இதழில் வன்னிமுகாமில் இருந்து வெளிவந்த கட்டுரை குறித்து எந்த மறுப்பும் இல்லாமல் மௌனம் காக்கின்றீர்களே உங்கள் மௌனத்தின் அர்த்தம் என்ன அல்லது அந்த மௌனத்தின் விலை உங்கள் கட்டுரை அதில் பிரசுரிப்பது தானா?
தமிழீழ ஆதரவு என்ற போர்வையில் பா.ஜ.கா.வோடு கூடிக் குலவும் நெடுமாறன் குறித்தும் தா.பாண்டியன் குறித்தும் உங்கள் கருத்து என்ன?
தமிழீழத்தை கோட்சே ஆதரித்தால் நாங்கள கோட்சேவை ஆதரிப்போம் என சீமான் கூறினாரே அவர் கூறியதில் உங்களுக்கு உடன்பாடு தானா? அல்லது அரை டவுசர் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு உலகத்தமிழர் என விருது வழங்கினாரே பழநெடுமாறன் அது உங்களுக்கு உடன்பாடு தானா?
சாராயம் காய்ச்சுபவன், வழிப்பறி செய்பவன், அயோக்கியத்தனம் செய்பவன், கூட்டிக் கொடுப்பவன், காட்டிக் கொடுப்பவன் என எந்த கழிசடைத்தனங்கள் இருந்தாலும், அவன் தமிழீழத்தை ஆதரிக்கும் தமிழனாக இருந்தால் மட்டும் போதும் என நினைப்பது தவறாகத் தெரியவில்லையா?
அறிவை விரிவு செல், அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு
மக்களை!
அணைந்துகொள்! உன்னைச்
சங்கமமாக்கு
மானுட சமுத்திரம் நானென்று
கூவு....
- சதீஷ்குமார் (