‘அரவிந்தர் ஆசிரமம்’ - புதுச்சேரியில் பல்லாண்டு காலமாக, செயல்பட்டு வரும் ஆன்மிக வழிபாட்டு நிறுவனமாகும்.

பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் தனி நாடாக இருந்த புதுச்சேரியில், ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடிய பலர் தஞ்சமடைந்தனர். பெரும்பாவலர் பாரதியார், அவ்வாறு புதுச்சேரிக்கு வந்தவர்தான்.

அவ்வகையில், புதுச்சேரிக்கு வந்த மற்றொருவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரவிந்தோ கோஷ். வங்கப் பிரிவினைக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள்  நடைபெற்றுக் கொண்டிருந்த 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று, அலிப்பூரில் ஒரு நீதிமன்றத்தில் வெடிகுண்டு வீசப் பட்டது. 2 வெள்ளையினப் பெண்கள் அதில் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வில் ஈடுபட்டதாக அரவிந்தரும், அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டனர். அவ்வழக்கில் மற்றவர்கள் தண்டிக்கப்பட, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்தர், விடுதலையானார். எனினும், ஆங்கிலேய அரசின் பார்வையிலிருந்து தப்பிக்க, 1910ஆம் ஆண்டு புதுச்சேரியில் அவர் தஞ்சமடைந்தார். ஆன்மிகத்தில் விருப்பம் கொண்ட அவர், புதுச்சேரியில் 1926ஆம் ஆண்டு ஒரு ஆசிரமம் அமைத்தார். அவரது நண்பரின் மனைவியான மீரா அல்பான்சா (மதர்) என்பவரும், அவருடன் சேர்ந்து கொண்டு ஆசிரமத்தை நிர்வகித்தார்.

arvindh asaram 600யோகா - தியானம் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்து, மன அமைதி பெறுவதற்காகவே இவ் ஆசிரமம் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், கோடிக்கணக்கான சொத்துகள் சேர்ந்த பிறகு, எல்லா மத நிறுவனங்களையும் போலவே, இவ் ஆசிரமமும் காலப்போக்கில் நிறுவனமயமானது. ஆசிரமத்திற்குள் அதிகாரப்போட்டி உருவானது.

அரவிந்தர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த மேட்டுக் குடியினர் பலரும், தங்களுடைய சொத்துகள் அனைத்தையும் ஆசிரமத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டு, ‘மன அமைதி’ வேண்டி, இங்கேயே வந்து தங்கினர். பிரஞ்சுக்காரர்கள் பலரும் அவ்வாறே வந்தனர்.

இவர்களுக்குத் தனிக் குடியிருப்புகள் ஏற்படுத்தப் பட்டு, அவர்களுடைய பிள்ளைகளும் இங்கேயே படித்து வளர ஆசிரமத்திற்குள் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆசிரமத்தின் உள்ளே பணிபுரியும் சகோதரிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.

எவர் இங்கு வந்து சேர்ந்தாலும் முதலில், அவருடைய சொத்துகளை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்கக் கூடாது, ஆசிரம நடவடிக்கைகள் குறித்து வெளியில் யாருக்கும் தெரிவிக்கக் கூடாது, ஆசிரமத் தின் விதிகளுக்குக் கட்டுப்படவில்லையெனில் அவர்கள் வெளியேற்றப்படு வதற்கு ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுக்குக் கையெழுத்திட்ட பிறகே, அவர் கள் சேர்க்கப்பட்டனர்.

இவ்வாறு தற்போது, ஆசிரமத் திற்கு 5000 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துகள் சேர்ந் துள்ளன. இந்தச் சொத்துகளை நிர்வகிப்பதில் ஆசிரம நிர்வாகி களுக்குள் அதிகாரப்  போட்டி நிலவி வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரால் நிர்வகிக் கப்பட்டாலும், அதில் ஒரியாக் காரர்கள் ஒரு குழுவாகவும், வங்காளிகள் ஒரு குழுவாகவும் செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.

அப்படி இந்த ஆசிரமத்தில் சேர்ந்த குடும்பத்தினர்தான், ஜார்க்கண்ட் மாநிலம் பொகா ரோவைச்  சேர்ந்த பிரசாத் குடும் பத்தினர். சொத்துகளை ஒப்ப டைத்து விட்டு, தனது 5 பெண் குழந்தைகளுடன் இங்கு அவர்கள் வாழத் தொடங்கினர். அந்த 5 பெண் குழந்தைகளும், ஆசிரமத் திற்குள் பணிவிடை செய்து கொண்டு அருட் சகோதரிகளாக வளர்ந்தனர்.

அந்த ஐவருள் ஒருவரான ஜெயசிறீ என்ற சகோதரிக்கு 2001ஆம் ஆண்டு சனவரியில், ஆசிரம நிர்வாகத்தினர் சிலர் பாலியல் தொந்தரவுகள் அளித் தனர். இது குறித்து அவர்கள் ஆசிரமத்திற்குள் முறையிட்ட போதும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

ஆசிரமத்திற்குள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரைக் கண்டறிந்து தண்டிக்காத ஆசிரம நிர்வாகம், தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராகக் காவல் துறையினரிடம் சென்று புகார் அளித்த பிரசாத் சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்தது. சகோதரிகள் ஒழுக்கமின்மை யாக நடந்து கொண்டனர் எனப் புகாரைத் திருப்பியது, ஆசிரம நிர்வாகம்.

இதனிடையே, தாங்கள் தொடர்ந்த வழக்கு, அது தொடர் பாக ஏற்பட்ட நெருக்கடிகள் எனப் பலவற்றையும் இணைய தளத்தில் வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கி பிரசாத் சகோதரிகள் பதிவு செய்தனர்.

ஏற்கெனவே, 2003ஆம் ஆண்டு ராதா கிருஷ்ணன் தாஸ் என்ப வரது மனைவி சோபா ராணி என்பவர், ஆசிரமத்தில் நடை பெற்ற பாலியல் வன்கொடு மைகளால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்குக் காரணமான வர்களைத் தண்டிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்த, கிருஷ்ணன் தாசின் வழக்கு, 2012ஆம் ஆண்டு ஆதாரங்கள் அற்றவை எனத் தள்ளுபடி செய்யப்பட்டது. இது போல, பலர் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், ஆசிரம நிர்வாகம் அதனை மறைக்கிறது என்றும் குற்றச்சாட்டு முன்வைக் கப்படுகிறது.

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு, 50க்கும் மேற்பட்ட அருட் சகோதரிகள் இவ்வாறு புகார் அளித்தனர். புகார் அளித்த பலர் ஆசிரமத்தை விட்டு வெளியேற் றப்பட்டனர். சிலர் பயந்து தானாகவே வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், அரவிந்தர் ஆசிரம முறைகேடுகளை கண் காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனக் கோரி, 26.07.2013 அன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2013 செப்டம்பரில், புதுச்சேரி துணை ஆட்சியர் தலைமையில் விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்ட போது, அதனை ஆசிரமத் தரப்பு கடுமையாக எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது. பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு அமைத்த விசாரணை ஆணையங்களை, சிறிதளவு கூட ஆசிரம நிர்வாகம் மதித்ததாகத் தெரியவில்லை. காரணம், அந்த ஆணையங்களை நடத்துபர்கள் ஓய்வு பெற்றவர் களாக, எவ்வித அதிகாரங்களும் அற்றவர்களாக இருந்தனர். ஆசிரமத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சில நபர்களை வைத்து மட்டுமே சில கண் துடைப்பு விசாரணைகள் நடை பெற்றன. ஆணையங்கள் அமைத்து விசாரித்தப் பிறகும், உருப்படியான எந்த நடவடிக் கையும் இல்லாமல் குற்றச் சாட்டுகள் கிடப்பில் போடப் பட்டன.

இந்நிலையில், 10 ஆண்டு களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்த பிரசாத் குடும்பத் தினரை, ஆசிரமத்தை விட்டு வெளியேறுமாறு 2012ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அவர் கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தும் அது எடுப டாமல், ஏப்ரல் 2014இல் உச்சநீதி மன்றம் ஆசிரம நிர்வாகம் அவர்களை வெளியேற்ற பச்சைக் கொடி காட்டியது.

உயர்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை ‘வளைத்துப்’ போட்டுவிடும் அள விற்கு ஆசிரம நிர்வாகத்திற்கு சக்தி இருக்கிறதென பிரசாத் குடும்ப சகோதரிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காட்டி, காவல் துறையினரின் பாதுகாப்போடு, பிரசாத் குடும்பத்தினர் வெளியேற் றப்பட்ட போது, ஹேமலதா மாடியில் ஏறி நின்று தற்கொ லைக்கு முயன்றார்.

இலாவகமாகப் பேசி அவர் களைத் தற்கொலை முயற்சியி லிருந்து காப்பாற்றிய காவல் துறையினர், அவர்களை கைது செய்து விசாரித்துவிட்டு, அவர் கள் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டுமென எச்சரித்து அனுப்பினர்.

மாடியில் ஏறி நின்று தற்கொ லைக்கு முயன்ற ஹேமலதாவை, செய்தியாளர் பேட்டியெடுப்பது போல் மாறு வேடத்தில் சென்று புத்திசாலித்தனமாகக் காப் பாற்றிய புதுச்சேரி காவல்துறை யினர், தனது சொத்துகளை யெல்லாம் கொடுத்து விட்டு, பல்லாண்டுகளாக இங்கேயே தங்கி வளர்ந்த, 3 பெண்களுடன் எங்கே செல்வார்கள், அவர்கள் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றவர்கள் ஆயிற்றே, இவர் களை வெளியேற்றினால் எங்கே செல்வார்கள் என்றெல்லாம் சிந்திக்கத் தெரியவில்லை.

குறைந்தபட்சம் அவர்களை காப்பகத்தில் அடைக்கவும் உத் தரவிடவில்லை. ஆனால், அவர் களை உடனடியாக வெளியேற வேண்டுமென, ஆசிரமத்தின் அதிகாரி போல் காவல்துறை மிரட்டியது.

இந்நிலையில், ஆசிரம வீட்டை விட்டு வெளியேறிய பிரசாத் குடும்பத்தினர், குடும்பத் துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, காலாப் பட்டு அருகில் கடலில் குதித் தனர். அதில், ஹேமலதாவின் தாயும் அவரது 2 சகோதரிகளும் இறந் தனர். கடற்கரையோரத்தில் கரை ஒதுங்கிய ஹேமலதாவை, 2 பேர் குடிபோதையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியது மேலும் கொடூரம்!

ஆசிரமத்தின் நடவடிக்கை யால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டதும், ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டதும் புதுச்சேரியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்புகள் ஆசிர மத்தை முற்றுகையிட்டன. ஆசிரமத்திற்குச் சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டன. திசம்பர் 20 அன்று, புதுச்சேரியில் முழு அடைப்பு நடைபெற்றது.

புதுச்சேரியில் வெளி மாநிலத் தவர் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டுள்ளது. பிரஞ்சுக்காரர் கள் அதிகம் வசிக்கும் கடற்கரை யோரப் பகுதிகளில், வங்காளிகள் மற்றும் வட மாநிலத்தவர் ஆதிக்கமும், நகரப் பகுதிகளில் மார்வாடி - குசராத்தி சேட்டுகள் மற்றும் மலையாளிகள் ஆதிக்கமும் நிலவுகின்றது. இவை போதாதென்று, தொழிலாளர்கள் என்ற பெயரில், வட மாநிலத்தவர்கள் பல்வேறு பகுதிகளில் குடியேறி வருகின்றனர். இதைக் கட்டுப் படுத்த புதுச்சேரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரவிந்தர் ஆசிரமம் மற்றும் புதுச்சேரியில் ஆதிக்கம் செலுத்தும் மார்வாடி - குசராத்திகளின் நிதி தாராளமாக விளையாடுவதால், இவர்களின் கைப்பாவை யாகவே, காங்கிரசு முதல் என்.ஆர்.காங்கிரசு வரையிலான கட்சிகள் செயல்படுகின்றன.

எனவே, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம சொத்துகளை நிர்வகிக்க தனியரு குழுவையும், அங்கு நடைபெற்ற முறைகேடுகளையும், பாலியல் குற்றங்களையும் கண் டறிய அதிகாரம் கொண்ட தனிக்குழு ஒன்றையும் புதுச்சேரி அரசு ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரி அரசின் ஆணைக்குக் கீழ்ப்படிய முடியாது எனச் சொல்லும் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Pin It