உலகில் பிறக்கும் அனைத்து
உயிர்களுக்கும் மறக்க முடியாத,
மறைக்க முடியாத,
தொட முடியாத,
உயரம் நீ!

மனிதன் சோகப்பட்டால்
வெளிப்படுவது கண்ணீர்!
ஆனால், உன் ‘கண்’ணீரால்
உலகமே மகிழ்ச்சியடையும்
அது ஒரு நன்னீர்!
விவசாயிகளின் வாழ்நீர்!

ஒரு மனிதனின் உழைப்பு
அவனை அடையச் செய்யும்
புகழின் உச்சிக்கு
என்ன உச்சியை அடைந்தாலும்
உன்னை எட்டவா முடியும்?

உன்னில் தோன்றும்
நட்சத்திரங்கள்
உலகையே ஆளும்!
ஒவ்வொரு குழந்தைக்கும்
உன் நிலவு கொடுக்கும்
உணவுதான் சோறு!
அதுதான் நிலாச்சோறு!

உயர்ந்த மலைகளும்
எட்ட முடியாச் சிகரங்களும்
அளவில்லா நதிகளும்
நீ இன்றி எதுவுமில்லை,
வானமே! உனக்கு ஏது எல்லை!

Pin It