வகுப்பறையில் ஆசிரியை கொலை 

tea_250சென்னையில் செயின்ட் மேரீஸ் பள்ளியில் ஒரு ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் கொலை செய்யப்பட்டது தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையை அவரது மாணவன் இர்பான் வகுப்பறையிலேயே கத்தியால் 18 முறை குத்திக் கொலை செய்துள்ளான். வீட்டில் இர்பானுக்குத் தனி அறை, வசதிகள், தினசரி நூறு ரூபாய் கைச் செலவுக்கு என்று வாழ்ந்த சிறுவன் கொலையாளியாகியிருக் கிறான். கொலைவெறிப் பாடலுக்கு தமிழ்ச் சமூகம் ஆரவாரமாய் லாலி பாடிக் கொண்டிருக்கிறது.

திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் கொலைக்காட்சி களைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. வணிக சினிமாக்களும், வணிகமயக் கல்வி யும் சமூகத்தைச் சீரழித்து வருகின்றன. தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் வணிகமயமானபின்பு போட்டிகள் அதிகமாகிவிட்டன. 100 விழுக்காடு ரிசல்ட்டுக்காகப் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களைச் சித்ரவதை செய் கின்றன. மாணவர்களைத் தயார் செய்வதற்கு ஆசிரியர்கள் பெரும்பாடு பட வேண்டியுள்ளது. தவறினால் அவர்களுக்கு ஊதியவெட்டு, ஊதிய உயர்வு வெட்டு, தண்டனைகள், வேலைநீக்கம் என்று நிர்வாகங்கள் பழிவாங்கு கின்றன. உலகமயத் தாக்கம் நெறிமுறைகளைத் தகர்க்கிறது.

இந்தக் கொலைச்சம்பவம் நடந்த அதே நாளில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலை செய்திருக்கிறான். பெற்றோர் தரும் சித்ரவதையால் அது நடந்துள்ளது. தங்கள் பிள்ளை நன்குபடித்து மேலே போக வேண்டும் என்று அவர்களும் குழந்தைகளைக் கசக்கிப்பிழிகிறார்கள். சினிமா - டி.வி., ஆசிரியர், மாணவர், பெற்றோர் அனைவரையும் கட்டுப் படுத்த வேண்டிய நிர்ப்பந்தமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். சிறுவன் இர்பான் கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவு அக்னீபத் என்ற இந்திப்படம் பார்த்ததாய் வாக்குமூலம் அளித்திருக்கிறான். ஆங்கில அமெரிக்கத் திரைப்படங்களையும் தொடர்ந்து பார்த்திருக்கிறான். அதே பாணியில் கொலைகாரனாகியிருக்கிறான்.

குழந்தைகளின் மூளையில் படிப்பை ஏற்றும் போது அவர்களுடைய மூளைகளின் செயல்பாடு களையும் படிக்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். கோவைக் கல்லூரி ஒன்றில் நான்கு மாணவர்கள் ஒரு சக மாணவியைக் கடத்திப் போய் மதுவருந்தச் செய்து கற்பழித்த செய்தி நம்மைக் கதிகலங்க வைக்கிறது. தமிழகத் தின் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடந்த புகார்கள் தொடர்கின்றன. மாணவர்களை மது வாங்கிவரச் செய்து, பள்ளியிலேயே போதை யோடு இருப்பது போன்ற செய்திகள் ஆசிரியச் சமுதாயத்தையே இழிவுபடுத்துகிறது.

ஆசிரியர், மாணவர், பெற்றோர் அனைவரிட மும் மனநிலை மாற்றம் வர வேண்டும். சித்ரவதை செய்யும் நிர்வாகங்கள் கண்டிக்கப்பட வேண்டும். இவற்றில் அரசின் கவனமும் தலையீடும் அதிகரிக்க வேண்டும். மாணவர்களை ஆசிரியர்கள் தாக்குவதும் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதும் நிறுத்தப்பட வேண்டும்.

பாஜகவின் நீலப்படம்

பிஜேபி ஆளும் கர்நாடக மாநிலம் நாற்ற மெடுத்த ஊழல்களுக்குப் பெயர் பெற்றதாகும். இப்போது கற்பழிப்பு, நீலப்படம் இரண்டிலும் புகழ்பெற்றுள்ளது. கர்நாடக சட்டமன்றம் நடக்கும் போதே மூன்று அமைச்சர்கள் செல்போனில் நீலப் படம் பார்ப்பதை ஒரு தொலைக்காட்சி படம் பிடித்து ஒளிபரப்பியதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

லட்சுமண் சவாதி, வி.சி. பாட்டீல், ஜே.கிருஷ்ணபலேமர் ஆகிய அந்த மூன்று அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். ஒ ரு பெண் பலரால் பலாத்காரம் செய்யப்படும் காட்சி யையும், வேறு சில உடலுறவுக் காட்சிகளையும் பார்த்ததாக அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காங்கிரசும், பிஜேபியும் சீரழித்து வருவதை இந்தச் சம்பவம் உறுதி செய்கிறது.

ஆச்சார்யா ராஜினாமா

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வைக்க வேண்டுமென்றால் பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா மீது நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுதலை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அந்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மல்லிகார் ஜுனய்யாவும், அரசு வக்கீல் ஆச்சார்யாயும் கண்டிப்பானவர்கள் என்று கூறப்படுகிறது. பிஜேபி அரசு மிரட்டியதால் அரசு வக்கீல் பதவியை ராஜினாமா செய்ததாக ஆச்சார்யா கூறியுள்ளார். ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் ஆச்சார்யா கடந்த எட்டாண்டுகளாக ஆஜராகிக் கொண்டிருக்கிறார். அட்வகேட் ஜெனரல் பதவியை மட்டும் ராஜி னாமா செய்துவிட்டு சிறப்பு நீதிமன்ற வக்கீல் பதவியை தக்க வைத்துக் கொண்டு பேட்டி யளித்துள்ளார்.

காதலர் தினமும் காதகர் செயலும்

காதல் என்பது பழைய சனாதனக் கட்டுகளை அறுப்பது; சாதி, மதக்கோட்பாடுகளைத் தகர்ப்ப தாகும். இதனால்தான் இந்து வகுப்புவாதிகள் காதலர் தினத்தைக் கடுமையாய் எதிர்த்து வரு கிறார்கள். பஜ்ரங்தள் அமைப்பினர் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் காதலர் தினக் கொண்டாட்டங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் இந்து முன்னணி போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாய்கள், கழுதைகள், பன்றிகளைக் காதலர் களாக்கிக் கல்யாணமும் நடத்தித் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

stude-370காதலர் தினத்தை எதிர்க்கும் இந்த அமைப்புகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் குட்டி களாகும். இவர்களது அராஜக நடத்தைகள் எல்லை மீறிப்போய்விட்டது. காதலர்களைப் பிடித்து இழுத்துவந்து பொது மக்கள் முன்பு நிறுத்தி கேவலமாய்ப் பேசி மிரட்டித் தாலிகட்ட வைக் கிறார்கள். இந்தப் பாசிச நடவடிக்கைகளில் காவல் துறையும் தலையிடாத போக்கு உள்ளது. இதனால் இளைஞர்களிடம் இந்தப் பாசிச அமைப்புகளுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. நவீன காலத்தில் நவீன வாழ்வில் இதுபோன்ற வன்முறைகளை சமூகம் அனுமதிக்கக்கூடாது.

சமூகத்தில் வேற்றுமைகள் தொலைய வேண் டும் என்பதற்காகவே மகாகவி பாரதி “காதல் செய்வீர் உலகத்தீரே” என்று அறைகூவல் விடுத்தார்.

புதிய தீர்ப்பு

மதுரை புறநகர் பகுதியில் ஒரு நகர்பகுதியில் ஒரு குடிகாரக் கணவனைக் கிரிக்கெட் மட்டையால் கொலை செய்த வழக்கில் மனைவியை வழக்கி லிருந்து காவல்துறை விடுவித்துள்ளது. குடி போதையில் தனது மகளையே கற்பழிக்க முயற்சித்த கணவனைத்தான் தற்காப்பு நிலையில் தலையில் அடித்துள்ளார். கொலையுண்ட கணவன் மீது காவல் துறையில் மனைவி ஏற்கெனவே புகார் செய்துள் ளார். குடிபோதையில் மனைவி, மகளைத் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனின் உச்ச கட்ட முயற்சியே மகளைக் கற்பழிக்க முயற்சித்த தாகும்.

காவல்துறை அதிகாரி அஸ்ராகார்க் இது பற்றிக் கூறுகையில், ஐபிசி 100வது பிரிவின்படி தற்காப் புக்குத் திருப்பித் தாக்குவது தவறல்ல என்று குறிப் பிட்டுள்ளதால் வழக்கிலிருந்து மனைவியை விடு விப்பதாய்க் குறிப்பிட்டுள்ளார். இது பாராட்டப் பட வேண்டிய செய்தியாகும். குடிகாரக் கணவர் களுக்கு இது ஒரு மரண எச்சரிக்கையுமாகும்.

Pin It