சிறுகதைத் தொகுப்பு

2010 மற்றும் 2011ஆம் ஆண்டு களில் செம்மலர் உள்ளிட்ட பல்வேறு வார, மாத இதழ்களில் வெளியான மேலாண்மையின் 16 சிறுகதைகளைத் தொகுத்து வானதி பதிப்பகம் வெளியிட் டுள்ளது.

தன் முன்னுரையில்  மேலாண்மை ஒரு நம்பிக்கையை உறுதிபடக் கூறியுள்ளார். எத்தனை தொலைக்காட்சிகள் வந்தாலும் மெகா தொடர்கள் ஒளிபரப்பப்பட்டாலும் சிறுகதைகள், தொடர்கதைகள் உள்ளிட்ட வாசிப்புகள் ஒழிந்து விடாது என்பது அவர் வாதம். அறிவுத்தளத்தில் நடைபெறும் தரமான வாசிப்புகள் தடைபட வில்லைதான். ஆனால் வெகு ஜன வாசிப்பு? விவாதத்திற் குரிய ஒன்றுதான்.

தொகுப்பிற்குள் போகலாம். ‘தேசிய மயில்’ தலைப்பு சிறு கதை புதியது. தங்களின் வாழ் விடமான கண்மாய் கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு சீமைக் கருவேலங்காட்டில் வாழ வேண் டிய அவலத்தை மயில்களின் வாயால் பதிவு செய்துள்ளார். அடர்ந்த காடுகளை அழித்ததால் யானைக் கூட்டம் ஊருக்குள் வந்து பயிர்களையும், மனிதர் களையும் நாசம் செய்வதையும் சேர்த்து இந்தக் கதை நினைவு படுத்துகிறது.

மற்ற கதைகளில் கிராமத்தில் நாம் காணும் பலவகை மனிதர் கள், மனுஷிகள். மேலாண் மைக்கு தோண்டத் தோண்ட வரும் சுரங்கமாக கிராமமும், விவசாயமும் வாய்த்திருக்கிறது.

குழந்தையின்மையை குத்திக் காட்டிப் பேசியதால் வெகுண்டெழுந்து இருளாயி தன் கணவனை சீர்படுத்தி ‘புதுராத்திரி’ கொண்டாடுவது-வளர் பருவத் தில் பக்குவப்படுத்த அம்மா இல்லாததால் தின்பண்டத்திற்கு இரையாகிப் போன பூச்சி, ஏவல் பணி செய்து மிதவை வாழ்வு வாழ்ந்து ஊரை விட்டு ஓடும் ரெங்கன், இளம்வயதில் ஏமாந்துவிட்டாலும் பால் வியா பாரம் செய்து கௌரவமாய் வாழும்போது வம்பு செய்ய வந்தவனை ஓங்கி உதைத்து நிமிர்ந்து நிற்கும் மீனாட்சி, கண வனை இழந்த தன்னை மங்கல காரியத்தில் ஒதுக்கும்போது நியாயமான கேள்வியை எழுப்பும் செம்புகம் - என சராசரி மனிதர்கள்.

நீண்ட கதையான உயிர்ப் பூ. மேலாண்மையின் உயிர்நிலம் நாவலின் சாயல் உள்ளது. பயணி களை மனிதாபிமானத்துடன் அணுகும் டிரைவர் சீனி பல கதை களில் வலம் வருகிறார்.

அச்சு அசலான கிராமத்து மனிதர்களை இந்தக் கதைகளில் காணலாம் - அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களுடன்.

வெளியீடு: வானதி பதிப் பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 600 017.
விலை ரூ.90-

Pin It