வணிகக் கூறுகளை விஞ்ஞானப் படுத்தி சர்வதேச அளவில் சந்தைகளை விரிப்பது என்னவோ சாதனைகளாகப் போற்றப்படுகிறது. ஆனால் அத்தனைக்கும் பின்னே வணிக உத்தி என்ற பெயரில் சமுகத்தின் இளம் வண்ணத்துப் பூச்சிகளின் மீது திராவகம் பீய்ச்சும் நாசகார வேலை நடப்பதை எத்தனை பேர் கவனிக்கிறார்கள்..?

பலிகடா ஆக்கப்பட்ட நம் இளைஞர்கள் மீது, பழைய பாரம்பரியங்களில்  நம்பிக்கையற்றவர்கள், நாகரீகம் எனும் பெயரில் வெளிநாட்டுக் கலாச்சார - அத்து மீறல்களைக் கொண்டாடுகிறவர்கள் என்றெல்லாம் குற்றம் வேறு சுமத்தப்படுகிறது. இளைஞர்களா குற்றவாளிகள்..?

அறிவியல் வளர்ச்சியில், நமது சம்பிரதாயங்களும் பழமையான பாரம் பரியங்களும் கேள்விக்கு உள்ளாக்கப் படுகின்றன. பல்வேறு கலாச்சாரங் களைக் கொண்ட வெவ்வேறு நாடுகளின் பழக்க வழக்கங்கள்,  தொலைத் தொடர்பு வசதிகளால் உலகின் மற்ற நாடுகளிலும் பரவும்போது, ஒரு தேசத் தின் அனுமதிக்கப்பட்ட நாகரீகங்கள் இன்னொரு தேசத்தில் சீரழிவாக இருக்கிறது.

உலகை இன்று இயக்குவது - அரசுகளையே கட்டுப் படுத்தக் கூடிய உலக மயக் கொள்கைகள். அதாவது வியாபாரக் கொள்கைகளே உலகை ஆள்கிறது எனலாம். அந்த அளவு ஆதிக்கம் பெற்றுள்ள வியாபாரத் துறை தங்கள் பிரதான சந்தையாக நம்புவது, உலகின் வாங்கும் துடிப்புள்ள  பெரும்பான்மை மக்கள் தொகுதியைத்தான். அப்படியானால் அந்த மிகப்பெரிய மக்கள் தொகுதி எது..?

பொதுவாக எல்லா நாடுகளிலும் குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் இளம் வயதினரின் எண்ணிக்கை யே அதிகமாக இருக்கும். நமது இந்தியாவில் கூட மொத்த மக்கள் தொகை யில் 15 வயது முதல் 25 வயது வரையுள்ள இளைஞர்கள் மட்டும் 40 சதத்திற்கும் அதிகம்  இருக்கிறார்கள். இதையே கொஞ்சம்  மாற்றிச் சொல்லுவோ மானால், இளைஞர்களின் உலகில் குழந்தைகள் முதியவர் உட்பட மற்றவர்கள் வாழ்கிறார்கள் எனலாம். இது ஒரு சாதாரண புள்ளி விபரமாகத் தெரியலாம். ஆனால் வில்லங்கமே இங்குதான் ஆரம்பிக்கிறது...

ஏனெனில், உலகை வெறும் சந்தையாகப் பார்க் கும் வியாபார முறைதான், எதை எப்படி விற்றால் இளைஞர்களிடம் எளிதாகவும் அமோகமாகவும் போணியாக்கலாம் என்பதை முடிவு செய்கிறது. வியாபார வளர்ச்சியையே உலக வளர்ச்சியாகப் பறைசாற்றும் அந்த வியாபாரக் காரணிகளால் தான் பலப்பல சமூகக் கேடுகள் அரங்கேறுகின்றன.

பொதுவாக இளைய பருவம் என்பது பாலு ணர்வு மிக்கது என்பதால், அதைத் தூண்டினால் இளைஞர்கள் கவரப்படுவார்கள் என்று கணக்குப் போடுகிறது வணிக முறை. இளைஞர்-  இளைஞிகளை வெறும் பாலியல் சபலிஸ்ட்டு களாக மட்டுமே பார்க்கும் வியாபார சாதனங்கள் தங்களின் எல்லா வியாபாரப் பொருட்களின் பின்னேயும் பாலியல் அத்துமீறலை அழகியல் வடிவத்தில் ஒளித்து வைத்தே விளம்பரம் செய் கின்றன.

இதையே, சினிமா தொடங்கி துணிவகைகள், அழகுசாதன - வாசனைப் பொருட்கள், கார் பைக் போன்ற வாகனங்கள், மது வகைகள் என்று எந்த ஒரு வியாபாரத்திற்கும் பொதுவான தத்துவமாக்கி விட்டார்கள். எந்த ஒரு பொருளின் விளம்பரத் திலும் அப்பொருளை உபயோகிக்கும் ஆண் பெண்ணாலும் -  பெண் ஆணாலும் பாலியல் ரீதி யாக ஈர்க்கப்படுவார்கள் என்பதே மையமாக இருக் கும். அப்போதுதான் இளைஞர்களைத் தமது பொருட்கள் ஈர்க்கும் என்பதே வியாபாரத் தத்துவம்.

இது ஏதோ குறிப்பிட்ட வியாபாரிகள் மட்டும் ஊட்கார்ந்து பேசி வைத்துக் கொண்டதனால் நடை பெறுவதல்ல.  உலகை வெறும் வியாபார மேடையாக மாற்றியதில்  நம் ஒட்டு மொத்த மனிதக் கூட்டத்திற்கும் பங்குண்டு.

ஒரு பக்கம் பள்ளிகளில், கல்லூரிகளில் இளை ஞர்களை நாட்டின் யோக்கியமுள்ள எதிர்காலக் குடிமகன்களாக்க வேண்டி போதனைகள் நடக்க, மறுபக்கம் கல்வி நிலையங்களை விட ராட்சத பலம் வாய்ந்த வியாபாரச் சாதனங்கள் இளைஞர் களை காம இச்சை மிகுந்த - பேராசை கொண்ட நுகர்வோர்களாக மாற்றிக் கொக்கரிக்கின்றன.

விளைவு? இளைஞர்களின் சந்தையைப் பிடிக்க பொருளாதார வியாபாரச் சாதனங்கள் இளைஞர் களுக்காக அள்ளிவிடும் அதே பாலியல் பிரச்சாரங் களை இளைஞர்களோடு சம காலத்தில் வாழும் இளம் பிஞ்சுகளும், பார்த்தும் கேட்டும் பெரிதும் சலனப்படுகிறார்கள். குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிபப் பருவத்தில் நுழையக் காத்திருக்கும்  அந்த மாணவக் குருத்துக் கள்தான், தங்களுக் கான ஆளுமைத் திறனை அடைவதற்கு முன்னரே இவ்வியாபார உலகத்தால் காலிடரப்பட்டு குறுக்கு வழியில் திசை மாறுகிறார்கள்.

பருவ வயது வந்து விட்ட இளைய கூட்டமே  தடம் மாறும் போது, அப்பாவி மாணவக் கூட்டம் பாவம் என்ன செய்யும்? போதாக் குறைக்கு புத்தாண்டு, தீபாவளி போன்ற கலாச்சார விழாக் கள் இன்று முழுக்க முழுக்கக் கேளிக்கை நிறுவனங் களின்  கட்டுப்பாட்டுக்குள் சிக்கி வர்த்தக அம்சங் களாக மாறிவிட்டன. டேட்டிங், லவர்ஸ்டே  என் றெல்லாம் பெயரிட்டுக் கொண்டு, வெளிநாடுகளில் அனுமதிக்கப் பட்ட, நம் கலாச்சாரத்தையே கட்டுடைக்கிற விசயங்களெல்லாம் இன்று கொடி கட்டிப் பறக்கின்றன.

இந்தப் பனிரெண்டு வயது முதல் பதினெட்டு வயதுக்குள்ளான ஒரு சிற்றிளம் சமூகம் - அதாவது, இயல்பாகவே தடுமாறும் பிஞ்சுகளின் கூட்டம் இருப்பதையே மறந்து விட்டு, பேயாட்டம் போடு கிறது வியாபார உலகம். இளைஞர்களை மட்டும் மையப் படுத்தி சர்வதேச அளவில், வெறும் இளமைக் கூத்துக் களையே திரும்பத் திரும்ப - விளம்பரங்கள் வாயிலாகவும் சினிமா, பத்திரிகை போன்ற கலை வடிவங்கள் மூலமாகவும் - ஊதிப் பெரிதாக்கிக் காட்டுகின்றன.

பாலியல் வக்கிரம், போதை , சூதாட்டம் போன்ற கேடுகெட்ட - ஒதுக்க வேண்டிய விசயங் களே, இளைஞர்களால் விரும்பப்படும் அம்சங் களாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு கல்லாக் கட்டும் வியாபாரமாகி விட்டன. எங்கேயோ நடக்கும் இம் மாதிரி குடி கெடுக்கும் கும்மாள வகையறாக் கள் டிவிக்கள் வாயிலாக கட்டுக்கோப்பான குடும்பத் தினுள்ளும் அறிமுகம் பெறுகின்றன.

இவற்றை ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து கண்ணுறும் இளம் பிஞ்சுகள், ‘ஆணுக்கான அடை யாளம் பெண்ணை ஈர்ப்பது’ - ‘பெண்ணுக்கான அடையாளம் ஆணைக் கவர்வது’ எனும் ஒரு ஆபத் தான அடிநாதத்தோடு - பொதுப் புத்தியோடு வளரத் தொடங்கி  விட்டார்கள். அவற்றைப் பார்ப் பதைத் தடைசெய்யும் பெற்றோர்கள் குழந்தை களின் எதிரிகளாகிறார்கள். தங்களின் இன்ப மய மான- உல்லாசமான பருவத்திற்கு இடையூறு செய் பவர்களாகப் பெற்றோரை நினைக்கிறார்கள்.
இன்பம், உல்லாசம் போன்ற வார்த்தைகளைக் கூட, இன்று அவற்றுக்கான பொது அர்த்தத்தில் பயன் படுத்த முடியாத அளவு பொருள் மாறி விட்டன. இன்பம் என்றால் கலவி இன்பம். உல் லாசம் என்றால் போதை எனுமளவுக்கு வந்து நிற் கிறது  நிலைமை. எனவே மாணவர்கள், பெற் றோரின் கண்காணிப்பிலிருந்து விடுதலை பெறும் பள்ளி நேரங்களைப் பயன் படுத்தி, இணைய தளங் களைத் தேடிப் போய்க் கலாச்சார விசங்களை, விச மென்று தெரியாமலேயே தம்முள் இறக்கிக் கொள் கிறார்கள்.

அதாவது, எப்படி போர்ப் பயிற்சியில் சேருகிற வர்கள் - முதலில் உடற் பயிற்சி, பிறகு சண்டைப் பயிற்சி கடைசியாகப் போர்ப் பயிற்சி என்று உரு வாக்கப் படுகிறார்களோ அதற்கு இணையாக இவ் வியாபார உலகமும் தங்களின் வியாபார அனு கூலத்திற்காக - இளைஞர்களைக் காம-போதை-வன்முறை அடிமைகளாக தயாரிக்கிறது எனலாம்.

ஆரம்பத்தில், விளம்பரங்கள் மற்றும் சினிமா வியாபாரங்கள் வாயிலாக மாணவர்கள் - பாலியல் மற்றும் போதை இச்சை உள்ளவர்களாகத் தயாரா கிறார்கள். அதைத் தொடர்ந்து இணைய தளங்கள் மற்றும் செல்போன் போன்ற தொலைத் தொடர்பு வியாபாரங்கள் அவர் களுக்கு அடுத்த கட்டத் தூண்டுதல்களை ஏற்படுத்தி குற்றங்களில் ஈடுபடுபவர்களாக வளர்த்தெடுக்கின்றன. இறுதியாக இளைஞர்களைக் கட்டவிழ்க்கப்பட்ட கலாச்சார அத்து மீறல்களில் ஈடுபட வைக்கின் றன கலாச்சார விடுதிகள் - கேளிக்கைக் கொண்டாட்ட வியாபா ரங்கள்.

அதாவது வியாபார உலகத்தால் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது இன்றைய இளைய சமுதாயம். எந்த இளைஞனும் இளைஞியும் தப்பி விடக் கூடாது எனும் கவனத்தோடு வலை விரித்துக் காத்திருக்கின்றன வியாபாரக் காரணிகள். இதனால், இளமையில் நமது பண்பாட்டு எல்லை களைக் கடந்து, விவஸ்தையில்லாத சுதந்திரங்களை அனுபவிக்கிறவர்களாக மாறி விட்டார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்.

இதில் சிக்கல் என்னவெனில், அவர்கள் வளர்ந்து திருமணம் என்று வரும்போது மீண்டும் நமது பாரம்பரிய வளையத்துக்குள் அடைக்கப் படும் போது, திணறிப் போகின்றனர். ஏனெனில், ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாட்டுக்கு அடிப்படை. நமது சமூக அரசியல் கட்டமைப்பே அந்த அடிப்படையின் மீது கட்டப் பட்டதுதான். அதை உடைப்போமானால் நமது நாட்டின் ஒட்டு மொத்த வாழ்வியல் கோட்பாடுகளையும் சிதைக்க வேண்டி வரும். எனவே இப்போதும் சரி, எப் போதும் சரி நம் நாட்டு பண்பாட்டு அடிப் படையை மீறி எதையும் அனுமதிக்க மாட்டார்கள் - இது இப்படி இருந்தால்தான் இந்தியா. எனவே, இளமைக்காலத்தை முழுக்க முழுக்கப் பண்பாட்டு எல்லை தாண்டி அனுபவித்தவர்களை - அந்த வேலி தாண்டிய வெள்ளாடுகளை மீண்டும் பண்பாட்டு வளையத்துள் அடைக்கும்போது, அடங்காதவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப் படுகிறார்கள்.

அதாவது எந்த சமூகத்தால், பருவ வயதில் தடம் புரளத் தூண்டப் பட்டார்களோ அதே சமூகத்தால் அவர்கள் இறுதியில் குற்றவாளிகளாக வெறுக்கப் படுகிறார்கள். குழந்தைப் பருவம் கடந்து இளமைப் பருவம் தொடும் போது பெரும் பாலான குழந்தைகள் வெறும் காமப் பிரiஜை களாக ரசாயன மாற்றம் பெற்று - பாலியல் மற்றும் சமூகக் குற்றங்களில் ஈடுபட்டு  அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும் நாட்டிற்கும் பெரும் பாரமாகி விடுகிறார்கள்.

வியாபார உலகத்தால் தன்னையறியாமல் குற்ற வாளிகளான அந்த மனிதப் பிஞ்சுகள் அதே வியா பார உலகத்தால் தகுதி இழக்கப் பட்டு, வேலை வாய்ப்புகள் மறுக்கப் பட்டு சமூகத்தில் பின்தங்கி - விரக்தி நிலைக்கு வரும்போது, சமூகத் திற்கு எதிரான சக்திகளாக மாறுகிறார்கள். பின்னர் அவர் கள் உருவாக்கும் நண்பர்கள் குடும்பங்கள் என்று  ‘அண்டர் கிரவுண்ட் வோல்ட்’ எனப்படும் ஒரு நாசகாரச் சமுதாயமும் உருவாகிறது.

ஒரு புறம் இப்படியென்றால், இன்றைய குடும்பங்களில் முன்பு போல உறவுகளைக் கொண்டாடும் குணம் அறவே அழிந்து விட்டது. உறவுமுறைகளைச் சிறப்பிக்க கையாளப் பட்டு வந்த திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் இன்று ஆடம்பரங்களை மட்டும் பறை சாற்றிக் கொள்கிற வியாபார அம்சமாகி - விழாவில் விருந்துக்கு இலை போடுவது முதல் வரவேற்பில் கைகூப்பி நிற்பது வரை கூலி ஆட்களை அமர்த்தி - உறவுகளை வெட்டிக் கொண்டே வருகிறார்கள்.

இதனால் இன்றைய குழந்தைகள் உறவுகளின் அருமை தெரியாமல், தங்களை ஒரு மரியாதை யான குடும்பத்தின் அங்கத்தினர் என்று எண்ணி நடக்கும் கவனத்தைப் பெற வாய்பின்றி, எதிலும் தான்தோன்றித்தனமாக முடிவெடுக்கும் ஆபத்தான நிலைக்கு வந்து விட்டார்கள். கூட்டமாக வாழ்ந் தாலும் சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும் அடுத்த மனிதனை இடையூறாக நினைக்குமளவு தனித் தனிச் சில்லுகளாகத் திரிகிறார்கள் . பொதுச் சிந்தனை குறைந்து கொண்டே வருகிறது. இதற் கெல்லாம் என்ன காரணம்...?

உறவின் அருமைகள் புரிய விடாமல் துண்டு பட்ட மனிதக் கூட்டங்களை உருவாக்குவது எது..? உறவுகளைக் கொண்டாட முடியாமல் மனிதர் களைத் தடுப்பது எது..? முன்பு மனிதர்களிடம் எல்லாவற்றுக்கும் நேரம் இருந்ததே..? குழந்தை களைப் பராமரிக்க, முதியவர்களைப் பேண, நண்பர் களை உபசரிக்க, உறவுகளோடு கூடியிருக்க என்று அவனிடமிருந்த எல்லா நேரங்களையும் பிடுங்கிக் கொண்டது எது..?

வேறெதுவும் அல்ல, அதே...அதே, வியாபாரச் சாதனம்தான் பிடுங்கிக் கொண்டது நம் அனை வரின் நேரத்தையும். அந்த வியாபார உலகின் நிரந்தர ஊழியர்களாகிவிட்டோம் நாம் அனை வரும். வியாபார சக்திகள் அறிமுகம் செய்கிற பொருட்களை வாங்கி அவர்கள் காட்டுகிற ஜம்ப மான முறையில் வாழ்வதற்காக - வருமானம் வேண்டி, வியாபார உலகின் ஊழியர்களாகி விட் டோம். அடித்தட்டு நடுத்தட்டு என்ற பாகுபாடெல் லாம் கடந்து வியாபாரத் தத்துவத்திற்கு நாம் அனை வருமே அடிமைகளாகி விட்டோம்.

வருமானத்திற்கு அலைவதைத் தவிர வேறு எதற்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை நம்மால். எல்லா நேரமும் வேலை நேரமாகி விட்டது. மனித அடையாளங்களை இழந்து வெறும் வியாபாரக் கருவிகளாவிட்டோம். இன்று பணத்திற்கு இருக் கும் ‘மார்க்கெட்’ மனிதத்திற்கு இல்லை.

நல்ல மனிதப் பிஞ்சுகளைக் குற்றவாளிகளாக வார்த்தெடுத்த அதே வர்த்தகச் சந்தை, சமூக விரோதிகள் பெருகி விட்டார்கள், வியாபாரத் திற்கு ஆபத்து என்றும் கூச்சலிடுகிறது. நாம் சமூக விரோதிகள் உருவாக அனுமதித்தது, சரியாகக் கற்றுத்தராத ஆசிரியர் என்றும், குழந்தைகளை ஒழுங்காக வளர்க்காத பெற்றோர் என்றும் நமக்குள்ளே ஒருவர் மாற்றி ஒருவர் கரி பூசிக் கொள்கிறோம்.

ஆனால்  வியாபார உலகம், இதோ இப் போதும்கூட நிறுத்த வில்லை, மனிதர்களையும் அவர்களின் நேரத்தையும் விழுங்கி - அவர்களின் இளம் பிஞ்சுகளையும் சீரழிப்பதை.

Pin It