கூடவே ரூபாய் தாள்களின்
கரைசலைக் குடித்தாலும்
கால்வயிறு கொள்ளாது...
விளைச்சலைத் தரும் நிலம்
வெப்பமாகிக் கொண்டிருக்க
நினைவில் கொள்வோம்
எங்கள் தெருவில் மழை கொட்டியது
உங்கள் தெருவில் பெய்ததாவென
வினவும் காலம்
வெகு நெருக்கத்திலிருப்பதை.
குருட்டாம் போக்கு
கட்டிய சதுரங்கத்தில்
நகரும் ராகு கேதுகளின்
கணக்கீடுகளுக்குப் பிறக்கும்
பலன்களினாலும் விளைவதில்லை.
தட்சணையிட்டு
சாஷ்டாங்கமாகக் கிடக்க
அருள் பாவிக்கவும் பெற்றிடேன்.
தடவும் மை கொண்டு
சொல்லும் குறியிலும்
கொண்டிலேன்.
வேறெதும் வேண்டிடேன்
நம்பிக்கையை என்னுள் விதைக்க
சுழற்றி வீசும் நாணயத்தில்
வீழ்வது ‘பூ’ வானால் போதும்.

விரவும் கங்குகள்...

தட்டு நிறைய்ய நாணயங்கள்

தொட்டுக் கொள்ள கிண்ணத்துள்

கலவையாகச் சில்லறைகள்

கூடவே ரூபாய் தாள்களின்

கரைசலைக் குடித்தாலும்

கால்வயிறு கொள்ளாது...

விளைச்சலைத் தரும்

நிலம்வெப்பமாகிக் கொண்டிருக்க

நினைவில் கொள்வோம்

எங்கள் தெருவில் மழை கொட்டியது

உங்கள் தெருவில் பெய்ததாவென

வினவும் காலம்

வெகு நெருக்கத்திலிருப்பதை.

 

குருட்டாம் போக்கு


கட்டிய சதுரங்கத்தில்

நகரும் ராகு கேதுகளின்

கணக்கீடுகளுக்குப் பிறக்கும்

பலன்களினாலும் விளைவதில்லை.

 

தட்சணையிட்டு

சாஷ்டாங்கமாகக் கிடக்க

அருள் பாவிக்கவும் பெற்றிடேன்.

தடவும் மை கொண்டு

சொல்லும் குறியிலும்

கொண்டிலேன்.

 

வேறெதும் வேண்டிடேன்

நம்பிக்கையை என்னுள் விதைக்க

சுழற்றி வீசும் நாணயத்தில்

வீழ்வது ‘பூ’ வானால் போதும்.

 

Pin It