இதேப் பிரச்னைகளைபறிப்பதிலும் தொடரும், அதனால் பதில்ஆள் மூலமாக கூலிப்பிரச்னையைத் தவிற்கும் விவசாயிகளுக்கும் சிக்கலும் பணச்செலவும் கூடுதலாகும். அறுவடையில் இப்பிரச்னை விஷ்வ-ரூபம் எடுக்கும். கொத்து அதிகமாக கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருக்கும். மேலும் அறுவடையைத் தள்ளிப்போடவும் முடியாது. மீறித் தள்ளிப் போனால் மொத்தமும் வீணாகி விடும். இந்த துயரத்தை பருவ மழை அதிகப்படுத்தும் வாய்ப்பும் உண்டு. மழையோடு அறுவடை நடந்த காலங்களில் மட்டும்  இச்சீரழிவையும் அதிக கொத்தையும் உள்ளூர் தினசரி பத்திரிகைகள் சொன்னதுண்டு.

2. தாமிரபரணி பாசனப்பரப்பில் நடக்கும் கார்ப்பயிர் அறுவடையில் ஆற்றின் வடபகுதியிலும் தென்பகுதியிலும் வசிக்கும் புஞ்சைக்காட்டு சிறு விவசாயிகளும் கூலி விவசாயிகளும் முக்கிய பங்குவகிப்பார்கள். இதில் கிடைக்கும் கொத்தில் தங்களூரின் அறுவடை வரும்வரை சாப்பாட்டு கதை நடக்கும். ஆனால் இவ்வறுவடை புரட்டாசி மாதம் மூன்றாம் சனியைத் தாண்டக்கூடாது. நடுகை பிந்தினால் அறுவடையும் பிந்தும். அப்-போது புஞ்சை விவசாயமும் - பிசானம் - ஆரம்ப-மாவதால் புஞ்சைக்காரர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிவிடுவதால் அவர்கள் கொத்தை - 3மாத சாப்-பாட்டை - இழப்பதால் இதை ஈடுசெய்யும் வகையில் சம்பள உயர்வுகள் அல்லது புதுக்-கடன்கள் வாங்குவது என புஞ்சைக்காட்டில் பிரச்னை ஏற்பட்டது. இது 2 அல்லது 3 வருடங்கள் நீடித்தால் அக்குடும்பங்கள் கடன் தொல்லையால் ஊரை-விட்டு வெளியேறி நகரங்களுக்குச் சென்று-விடும். இதனால் புஞ்சைக்காட்டு விவ-சாயிகளுக்கு வேலையாள் பற்றாக்குறையும் கூலி உயர்வு பிரச்னையும் எழுந்தது. இதன் உச்சக் கட்-டமாக தீர்வாசத்தில் எழுந்த அதிக கொத்து ஆள் பற்றாக்குறை முதலியன புஞ்சைக் காடுகளிலும் நிகழ்ந்தது, நிகழ்கிறது. தீருவாசத்தில் நடந்தது போலவே கவேரியிலும் நடந்துள்ளது. பேராசிரியர். தே. லூர்து அவர்கள் தங்கள் பகுதி மக்கள் இப்படி அறுப்பறுக்கச் செல்லும் போது சோழ சீமைக்-குச் செல்வதாகத்தான் சொல்லுவார்களாம். இதன் பொருள் தஞ்சை ஜில்லா என்று ஒன்று தோன்றுவதற்கு முன்பே அவர்கள் வருடா வருடம் இவ்வாறு சென்றிருக்கிறார்கள். ஆனால் இது பசுமைப் புரட்சிக்குப் பின்னால் இல்லை.

3. விவசாய வேலைகளுக்கு ஆள் பற்றாக்-குறைக்கு பயணச்செலவு கொடுத்து பக்கத்து ஊர் ஆட்களை அழைத்து வேலைகள் நடந்த இடங்களும் உண்டு. எ.கா. சுரண்டை, நாசரேத் பகுதிகளுக்கு இது-போல் நாற்று நடுகைக்கும் களைப்பறிக்கவும் இது-போல் வருடா வருடம் நடக்கிறது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளை செய்ய முடியாமல் - 1970 - க்குப்பின் கைவிடப்பட்ட நகரம் சார்ந்த பலப்பாசனக் கிணறுகள் பாங்கிணறுகளாக ஆயிரக்கணக்கில் இருப்பது பசுமைப் புரட்சிக்குப்பின்பே என்பதால் இப்பசுமைப் புரட்சியே ஒரு மோசடி என்பது விளங்கும். 2008 இல் இதுபோல் நாற்று நட வந்த நாசரேத் பகுதி பெண் ஒருவரிடம் - 75 வயது - உங்களுக்கு நினைவு தெரிய நீங்கள் குறைவாக வாங்கிய கூலியும் அதிகமாக வாங்கிய கூலியும் எவ்வளவு எனக்கேட்டதற்கு குறைந்த கூலி முக்கால் ரூபாய் அதிக கூலி இந்த வருடம் ரூபாய் 100+10. 10 போக்குவரத்துக்காக. இதே காலகட்டத்தில் பிற பகுதிகளில் ரூ60 ரூ70. இரண்டு பேர் நெல்லுக்கும் ஒரே விலைதான் கிடைக்கும்.

4. சகல பாசனக்கால்களும் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்ப்பவர்களுக்கு பசுமைப் புரட்சி பேசும் அரசா இந்த லட்சணத்தில் கால்களைப் பரா-மரிக்-கிறது என்று கேட்கத்தோன்றும் நிலையில் ஆக்கிரமிப்-புகளா லும் குப்பைக் கூளங்களாலும் சீர்குலைந்துள்ளதைப் பார்க்க முடியும். எ.கா. திருநெல்வேலி நயினார் குளத்து பாசனக்கால் சீர்-கேட்டைச் சொல்லலாம். பசுமைப் புரட்சிக்கு முன்பு குன்னத்தூர் அருகிலுள்ள இக்கால்வாயின் மதகை மாலையில் திறப்பார்கள் - ஊர்காரர்கள் சாமி கும்பிட்டு மதகிலும் தேங்காய் உடைத்து திறக்க மாலை யாகி விடுமாம். மறுநாள் காலையில் அதாவது 12 மணி நேரத்தில் மொத்த நயினார் குளமும் நிறைந்து விடுமாம். இன்றைய நிலை இரவு பகலாக 10 நாட்கள் தண்ணீர் வந்தாலும் பாதி குளம்தான் நிறையும். தண்ணீர் இல்லாமை அல்ல காரணம் கால்வாய் முழுவதும் குப்பையும் வீடுகள் இடிக்கபடும்போது சேரும் கல்லையும் மண்-ணையும் கால்வாயிலேயே போட்டு கால்வாயை நிறப்பி விட்டார்கள்.

5. பாசனக்கால்களில் ஜுன் 10 தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த கணக்கில் நாற்று பாவி விசாயிகள் தண்ணீருக்கு காத்திருந்தபோது 75 -85 களில் தண்ணீர் திறப்பது தள்ளிப் போய்- விடும். இப்படித் தொடர்ந்து நடந்ததால் பாவிய நாற்றுகள் பயன்படாத அளவிற்கு போனபோது மாற்றுவிதைகள் - மரபு விதைகள்  இல்லாதபோது பையுடன் வேளாண் துறையின் விதை விற்பனை நிலையத்திற்குச் சென்றனர். என்று அவர்கள் பையுடன் வீட்டைவிட்டு விதை வாங்கச் சென்றார்களோ அன்று பிடித்தது சனி, இன்னும் விலகவில்லை. சரியான காலத்தில் நீர் வந்தால் இவர்களின் விவசாயச் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். அறுவடைச் சீரழிவும் இருக்காது. நெல்கதிர்கள் மழையில் நனைந்து விலை குறைவதும் நடக்காது.

6. பாபநாசம் அணைகட்டு கட்டப்பட்டபோது மின்சாரம் தயாரிக்கும் போது விவசாயத்திற்குறிய குறைந்த அளவு நீரை இருப்பு வைப்பதாகவும், அதை ஜுன் 10 திறந்து விடுவதாகவும் உறுதி அளித்தது அன்றைய ஆங்கில அரசு. இவ்வுறதி 70 கள் வரையும் கடைபிடிக்கப்பட்டது. இத்தாறு-மாறான நீர்த்திறப்பை சகிக்க முடியாமல் நதியுண்ணி, கோடை மேல்அழகியான் கால்வாய் பாசன விவசாயிகள் தொடர்ந்த வழக்கு பல வருடங்களுக்குப் பின்னால் அரசு இனிமேல் 10 தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று தீர்பளித்தப் பின்னாலும் இச்சண்டித்தனம் தொடர்கிறது.

7. ஐரோப்பிய கடன்கள் உலகவங்கிக்கடன்கள் மூல-மாக இக்கால்வாய்கள் மராமத்துப் பார்க்கப்-பட்டாலும்    தண்ணீர் செல்வதில் உள்ள சிக்கல் அப்படியே இருக்கும். இது தீருவாசத்து விவ சாயிகள் தலையெழுத்து.

8. புஞ்சைக்காட்டு விவசாயிகள் ஆள்பற்றாக்குறை காரணமாக 10\15 கி.லோ.மீட்டர் தூரத்தில் இருந்து கூலி              விவசாயிகளை அழைக்கும் போது கூலி கட்டுபடி ஆகாவிட்டாலும் - 2008 நிலவரம் 120\150 -வேறு வழி இல்லை என்பதால் கொடுத்துதான் ஆக வேண்டும் விளைவு ஒரு கட்டத்தில் கடன் கார ணமாக விவசாயம்      செய்வதை நிறுத்துவார் அல்லது நிலத்தை விற்பார்.

9. போக்குவரத்து வசதி உள்ள கிராமத்து விவசாயக் கூலிகள் நகர்புறத்து கட்டட வேலை-களுக்கு போவதும்     கூலி உயர்வுக்கும் ஆள் பற்றாக்குறைக்கும் காரணம்.

1967-68ல் கட்டைச்சம்பா நெல்லுக்கு குவிண்-டாலுக்கு நிச்சயிக்கப்பட்ட விலை ரூ 38.50 காசு 2007ல் நிச்சயிக்கப்பட்ட விலை குவிண்-டாலுக்குரூ. 675 + 100 + 50 மத்திய, மாநில ஊக்கத் தொகை. பஞ்சப்-பபிரச்சாரம் அடுத்தப்படியாக உருவாக்---கப்பட்டது. அரிசியைப் போலவே கோதுமை-யையும் இனி நாம் நமது உணவு வகையில் ஒன்றாக்கப் போவதை பக்தவச்சலம் சட்ட-சபையில் அறிவித்தார். மறுப்பு தெரிவித்தல் என்ற பெயரில் இவ்விவாதம் ஒரு கட்டத்தில் காங்கிரஸ்-காரர்கள் இனி எலிக்கறியையும் சாப்-பிடச் சொன்னாலும் சொல்வார் கள் என்று திசை-மாறிச் சென்றது. இதையட்டி ரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகள் அறு-வடை செய்த நெல்லை அரசு நிர்ணயித்த விலையில் - லெவி - வாங்குவதற்காக நெல்லை தாலுகாவிட்டு தாலுகா கொண்டு செல்ல தடை விதித்தது. தமிழ் நாட்டு அரிசி கேரளத்திற்கு செல்வதும் தடைசெய்யப்பட்டது. இத்தடைக்கு முன் தஞ்சை அரிசி ரயில் வண்டிகள் மூலமாக கேரளத்திற்கு சென்று கொண்டிருந்தது.

agricult_370தமிழ் நாட்டிற்குள் அரிசி விலை - ரேஷன் அறிவிப்-பிற்கு முன் - ஒன்றுபோல இருந்தது. இத்தடைக்-குப்பின் தமிழ் நாட்டிலேயே தஞ்சைப்-பகுதியில் தான் மிகக் குறைந்த விலையில் அரிசி விற்பனை-யானது. நெல்லை மாவட்டத்தில் அம்பா-சமுத்திரம் அரிசி விலைக்கும் சங்கரன் கோவில் அரிசி விலைக்கும் பெரிய வித்தியாசம் நிலவியது. விளைவு விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து இரவில் சைக்கிள் மூலமாக 100 முதல் 150 கி. கி. அரிசியை சங்கரன்கோவில் பகுதிகளுக்கு தனிநபர்கள் இரவு வேளையில் சைக்கிளில் அரிசி கடத்தும் நிலை உருவானது. கடத்து பவருக்கு ரூ100 முதல் ரூ150 பணம் கிடைத்து. அன்று ஒரு நாள் சம்பளம் ரூ 3. இந்த மாற்றம் 2,3 மாத காலத்திற்குள் ஏற்பட்டு விட்டது.

கழுதைகள் மூலமாகவும் ஆட்கள் மூலமாகவும் தமிழ் நாடு கேரள எல்லைப் பகுதிகளில் அரிசிக்-கடத்தல் பற்றிய செய்தி இல்லாத - தினத்தந்தி -நாளே* கிடையாது. இவ்வளவு தடைகள் இருந்தாலும் கேரளத்திற்குத் தேவையான அரிசியைத் தமிழ் நாடுதான் அளித்து - கடத்தல் மூலமாக. இந்தக் காரணத்தால் எந்த விவசாயிக்கும் எந்த விலையுயர்வாலும் எந்தப்பலனும் கிடைக்கவில்லை. விலை உயர்வு லாபம் கடத்தலில் ஈடுபடும் அந்த கும்ப லுக்கு மட்டுமே - இன்றுவரை -கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

பருத்தியில்தான் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டது. இன்று அந்த இடத்தை வெண்டைக்காய் பிடித்துள்ளது. பருத்தி அதிக அளவில் பயிரான கரிசல்காட்டில் இன்று பாதிக்கும் அதிகமான நிலங்கள் தரிசாகிப் போனது. அதிகமான பருத்தி விளைந்த நெல்லுக்கு - கட்டிச்சம்பா 1967 - 68 இல் - கொடுத்த விலை ரூ.38.50. இது கட்டுப்படியாகாத விலை என்பதால் தந்திரமான விவசாயிகள் குவிண்டாலுக்கு ரூ2. லஞ்சமாகக் கொடுத்து லெவியில் இருந்து தப்பித்துக் கொண்டனர். இவர்களுக்கும் சேர்த்து அப்பாவி விவசாயிகள் லெவி ஆளந்தனர். முதலில் ஊரைக்காலி செய்தவர்களும் அவர்களே. இன்றும் நெல்லைப் பகுதிகளில் லெவி விலைக்கும் வெளி விலைக்கும் வித்தியாசம் உண்டு. வெளி விலைக்கும் லெவி விலைக்குமான வித்தியாசம் பற்றி எந்த அரசியல் கட்சியும் இன்றுவரையும் பேசுவது இல்லை. அதற்குப் பதிலாக லெவி விலையை உயர்த்தப் பேசுவார்கள்.

*60களில் செயற்கை உணவு நெருக்கடியால் அரசு விசாயிகளிடம் இருந்து கட்டாய நெல் கொள்முதல் செய்தது. தேவைக்கு அதிகமாகவே இந்த லெவி கொள்முதல் இருந்தது. மேற்கு வங்கத்தில் இதுபோல் அதிகப்படியான கொள்முதல் செய்வதில்லை என்ற பேச்சு அடிபட்ட அளவிற்கு இதற்கான மாற்றுவழி குறித்து எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை. லெவி பிரட்சினையால் விவசாயிகள் தங்கள் நெல்லை கடத்தல்காரர் மாதிரிதான் தங்கள் நெல்லை களத்தில் இருந்து வீட்டிற்குக் கொண்டு சென்றனர். ஒரு எ.கா. புளியங்குடியை        அடுத்த புன்னையாபுரத்துகாரர்கள் நிலம் புளியங்குடிக்கு கீழ் புறத்தில் இருந்தது. வழக்கமாகப் புளியங்குடி தென்காசி சாலை வழியாக கொண்டுசெல்வார்கள். அந்த சாலையில்தான் லெவிச்சாவிடி இருந்ததால் அவர்கள் நெல்லைக்கடத்தவில்லை அறுவடையான சொந்த நெல்லைத்தான் கொண்டு செல்கிறோம் என விவசாயிகள் சொன்னதை லெவிச்சாவிடித் தாசில்தார் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் தாலுகா விட்டு தாலுகா நெல் கொண்டுபோகக் கூடாது. புன்னையாபுரம் தென்காசி தாலுகா. புளியங்குடி சாலை சங்கரன்கோவில் தாலுகா.    

ஓய்வு பெற்ற தாசில்ததார் யோசனைப்படி வயல் வரப்புகளை வெட்டி புளியங்குடியின் கிழக்குப் பக்கமாகவே               ண்டிகளை ஓட்டி ஊர்போய் சேர்ந்-தனர். வருடாவருடம் இந்த இழவுதான் நடந்தது. இப்படியாகத்தான் நாட்டில் உணவு நெருக்கடி இருப்பதாக அரசும் எல்லா அரசியல் கட்சிகளும் மக்களை நம்ப வைத்தது.               

கேரள மாநிலத்திற்கு பக்தவச்சலம் காலத்தில் 1962 - 63 அரிசி கொண்டு போக தடை விதிக்கப் பட்டது.   அன்றிலிருந்து இன்றுவரை கேரளத்திற்கு தஞ்சை அரிசிதான் போகிறது - கடத்த லாக. இதனால் கேரளத்தில்       விலை அதிகம். ஆனால் எந்தக் கலத்திலும் இந்த விலையேற்றங் கள் காரணமாக தஞ்சை விவசாயிக்கு எந்த       லாபமும் இல்லை. உற்பத்தியாளனும் நுகர் வோரும் நாசமாக போனபோது கடத்தல்காரர்கள் செல்வத்தில் மிதந்தனர். இன்று வரையும் இதுதான் நிலைமை.

தஞ்சையில் 1963 இல் 1 கி.லோ அரிசி ஒரு ரூபாய். குறைவு என்பதால் அடுத்த மாவட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாது. அது சட்டப்படிக் குற்றம். சகல அரசியல் வாதிகளின் முன்பாகத்தான் நுகர்வோராகியத் தமிழர்களும், உற்பத்தியாளர்களாகியத் தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நாசமானார்கள். ஆங்கிலேயர்கள் கூட இப்படி நடந்து கொள்ளவில்லை. இதற்கு அரசு சொன்ன காரணம் உணவு நெருக்கடியால் மக்கள் அவதிப்படக்கூடாது. ஆரம்பக் காலத்தில் இத்தடுப்ப்ச் சாவடிகளில் பணிபுரிதல் என்பது தண்டனை பணி மாற்றமாகப் பார்க்கப்பட்டது. காலப்போக்கில் அதிக அளவில் பணம் கொடுத்து இப்படிப்பட்ட இடங்களுக்கு பணிமாற்றம் பெற்றுவந்தார்கள்.

தெற்கு கோனார்கோட்டைபுதூர் - கயத்தார் பக்கம். - ரைட்டன் - ஒத்தைக்கையன் செல்லையாத்தேவர் மகன். கடையில் - 65 - 66.- சுமார் 7 ரூபாய் விலையில் விற்கப்பட்டது. விக்கரமசிங்கபுரத்தில் இருந்து சட்ட விரோதமாக ஆம் சட்ட விரோதமாகத்தான் இவரால் சுமார் 150 கி.லோ. அரிசி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சைக்கிளில் இரவு நேரத்தில் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டது. தாலுகாக்களுக்கிடையே அரிசி கொண்டு செல்லக்கூடாது என்று சட்டம். அம்பை தாலுகாவிலுள்ள நெல் விவசாயிகள் விலை கிடைக்காமல் விழி பிதுங்கி நின்றபோது சங்கரன் கோவில் பகுதியில் பற்றாக்குறை காரணமாக விலை ஏற்றம் நடந்தது.

காக்கும் பெருமாள் பிள்ளை, பாவூர்சத்திரம் பள்ளியில் நூலகராக - ஹிந்தி ஆசிரியர் பணிக்குப்பதிலாக - சுமார் 20 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 60 களின் இறுதிப்பகுதிகளில் அரிசி விலை கி.கி.ரூ.8 ஆக இருந்ததால் காலையில் மக்காச்சோளம் உப்புமா, மதியம் சோறு, இரவு மரவள்ளிக் கிழங்கு என்ற நிலைக்கு அவர் ஆளானார். பாவூர் சத்திரத்தில் ரூ. 8க்கு அரிசி விற்ற காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் விலை ரூ. 2யைத்தாண்டவில்லை.

திருநெல்வேலியில் 21\2 முதல் 3 ரூபாய் விலை அரிசியாக இருந்தது. திருநெல்வேலி நிலைதான் அனேகமாக தமிழ் நாடு முழுவதும் எல்லா நகரங்களிலும் நிலவியது. 1970 - 71 இது சற்று உச்சக்கட்டத்தை எட்டியதால் இந்த மொத்த

குற்றச்சாட்டும் கருணாநிதிக்கு பாதகமாகவும் எம். ஜி. யாருக்கு சாதகமாகவும் பல வருடங்கள் நீடித்தது.

உள்ளூர் கங்காணிகளின் அருமை தெரிந்ததால் இன்றுவரையும் இவர்கள் உள்ளூர் கங்காணிகளை களப்பணியாளர்கள் என்ற பெயரில் வைத்துள்ளனர். மேல்நாட்டு விதை நிறுவனங்கள் இவர்கள் உதவியுடன்தான் திறம்படச் செயல்படுகிறது. விவசாய சுற்றுலா என்ற பெயரில் தங்கள் பண்ணைகளுக்கு இந்நிறுவனங்கள் கூறும் காலத்தில் விவசாயிகளை அழைத்துச் செல்வார்கள். விவசாயிகள் வரவேண்டிய காலத்தை இநிறுவனங்களே முடிவு செய்வதன் நோக்கம், விவசாயிகள் பார்வையிட வரும்போது அப்பண்ணையில் அவர்கள் பயிரிட்டுள்ள பயிர்கள் காய்த்து குலுங்கிக்கொண்டிருக்கும். அதைப்பார்த்துதான் நம் சம்சாரிகள் தங்கள் மூளையை அங்கே அடகு வைத்துவிட்டு வந்து விடுகிறார்கள்.

images_370அப்படியிருக்கும் அச்செடிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் காய்கள் அல்லது கதிர்கள். அவர்கள் அங்கு என்ன பார்த்தார்களோ அதையே அப்படியே பளபளப்பான தாள்களில் அச்சிட்டும் கொடுக்கிறார்கள். இதைப் பார்த்து விட்டு இப்படங்களுடன் வெளியே வரும் ஒவ்வொரு விவசாயியும் இவ்விதைகளின் பிரச்சாரகராக-சம்பளமில்லாத-மாறிவிடுவார்கள் அப்படி யிருக்கும் அங்கு அவர்கள் பார்த்த கதிர்களும் காய்களும். பிறகென்ன சொன்ன விலைக்கு அந்த  விதைகளை வாங்கி விவசாயம் செய்து இன்று இந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும் இச்சுற்றுலாக்கள் இப்போதும் தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது இதனால்தான் கர்னாடக மாநிலத்தில் நஞ்சுண்டசாமி தலைமையில் உழவர்கள் வெளிநாட்டு விதை நிறுவனங் களை தீயிட்டுக் கொளுத்தினார்கள். இச்சுற்றுலாக்களுக்கு செல்லும் விவசாயிகளுக்குக் கூட இத்தீவைப்புச் சம்பவம்  நினைவில்லை. அந்தளவிற்கு   இச்செய்தியை இருட்டடிப்பும் செய்ய முடிகிறது. இப்படிப்பட்ட சுற்றுலாக்களுக்கு ஆகும் செலவில் ஒருபகுதியை அரசே ஏற்றுக் கொள்வதால் இச்சுற்றுலாக்கள்  அரசின் விவசாய இலாக்காவினரால் திட்டமிடப்பட்டும் அவர்களின் மேற்பார்வையிலுமாகத்தான் நடை பெறுகிறது.

1969இல் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்ட பின்னர், குறுகிய கால, நீண்ட காலக்கடன்கள் தாராளமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டில் கிணற்றுப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது.

1960 -61இல் கிணற்றுப்பாசனத்தால் பயிரடப்பட்ட பரப்பளவு 8.7 மில்லியன் ஹெக்டர்கள் ( சுமார் 215 லட்சம் ஏக்கர்கள்.) 1996 - 97இல் கிணற்றுப்பாசனப் பரப்பு 30.8 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்தது. ( 761 லட்சம் ஏக்கர்கள்) கடந்த 40 ஆண்டுகளில் கிணற்றுப்பாசனம் ஏறத்தாள நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. அதே சமயம் ஏரிப்பாசனம் வெகுவாக்க் குறைந்து விட்டது.  - பக்கம் 43

பாலாறு ; மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 13,209 சதுர கி.மீ இதில் பாலாறு அணைக்கட்டுப்பகுதி மட்டும் 10,293 சதுர கி.மீ. இதில் 2950 சதுர கி.மீ. வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டக் குளங்கள்  சுமார் 1355. மொத்த நிலம் 5,92,018 ஹெக்டேர். காடுகள் 1,61,229 ஹெக்டேரும், தரிசுநிலமாக 26,339 ஹெக்டேர்களும் உள்ளன

தொழிற்சாலைகளுக்கான நீர் தேவை 226 எம்.சி.எம்.

`இதேக்காலச்சுவடு இதழில் சில வருடங்களுக்கு முன் 60 களுக்கு முன்புள்ள விவசாயம் குறித்து தகவல்கள் சொன்ன புதுப்பட்டி, வத்திராயிருப்புக்காரர்களுக்கு பா.லிங்கம் அளித்த பதில் - கேள்வி பதில் வடிவில்.

Pin It