இன்று மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிச் சிறுவர்கள் புகைபிடிப்பதைப் பழகிவருகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். உலகளவில் சுமார் 120கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். தினமும் 11,000 பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். இவர்களில் 2200 பேர் (ஐந்தில் ஒருவர்) இந்தியர்.

புகைபழக்கத்தால் வரும் பாதிப்புகள் ஒன்றல்ல! இரண்டல்ல! புகையிலையில் சுமார் 4000க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சையனைடு, நிக்கோடின், தார் போன்றவை பயங்கரக் கெடுதி நிறைந்தவை. ஹைட்ரஜன் சயனைடு ரத்தநாளங்களை தடிமனாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு தார் நுரையீரல் உட்பகுதி வரை ஊடுருவி புற்று நோயை உருவாக்குகிறது. மேலும் மார்ச்சளி, ஒவ்வாமை இருமல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய்கள், குடல்புண்கள், ஜீரண நோய்கள், நரம்பியல் நோய்கள் என எண்ணற்ற உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. புகைப்பவர்கள் வெளிவிடும் புகையால் மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், இதர மனிதர்கள் போன்றவர்களையும் இந்நோய்கள் தாக்குகின்றன.

புகைப்பழக்கம் வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிடமுடியாது. இது மீளமுடியாத போதைப் பழக்கம். இதனை நிகோடின் போதைஅடிமைநோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

புகைப்பழக்கத்தை நிறுத்த... முதலில் புகைப்பதால் வரும் உடல்நலப் பாதிப்புகளையும் வீண் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள். மீதி வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உறுதியான முடிவு எடுங்கள்.

புகையடிமைத்தனத்திலிருந்து மீளவும் புகையிலைப் பொருட்களால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பலவிதப் பாதிப்புகளுக்கும் ஹோமியோபதி, மலர்மருத்துவம், திசுமருத்துவம், அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சைகள் மூலம் நல்ல நிவாரணமும், நலமும் பெறமுடியும். அருகிலுள்ள ஹோமியோபதி & மாற்றுமருத்துவ நிபுணர்களை தாமதமின்றி அணுகுங்கள்.

Pin It