தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் தோழர் தியாகு தலைமையில் சென்ற சனவரி 25ஆம் நாள் தொடங்கி மார்ச்சு 12ஆம் நாள் நிறைவடைந்தது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டமெங்கும் நடந்து பயணம் 1045 கிலோ மீட்டர்களை நிறைவு செய்தது. அதன் தொடர்ச்சியாகக் குறுநடைப் பயணங்கள் மற்ற மாவட்டங்களிலும் முன்னெடுக்க அமைப்புக் குழு முடிவு செய்தது. முதற்கட்டமாக ஈரோடு மாhவட்டத்தில் சென்ற 28-04-2010 இல் பவானியில் தொடங்கி 10-05-2010 இல் ஈரோடு நகரத்தில் நிறைவடைந்தது.

குறுநடைப் பயணப் பதிவுகள்

28-04-2010

காலை 10 மணியளவில் பவானி அந்தியூர் சந்திப்பில் பயணம் தொடங்கியது. அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் வேலிறையன் அனைவரையும் வரவேற்றார். பெரியார் திராவிடர் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம.இளங்கோவன், தமிழ்நாடு வணிகர் சங்கக் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்டச் செயலாளர் சண்முகவேல், நாம் தமிழர் இயக்கத் தோழர் வழக்குரைஞர் செயராஜ், இந்திய சனநாயக வாலிபர் பெருமன்றத் தோழர் பாலமுருகன் ஆகியோர் பயணத்தை வாழ்த்தி உரையாற்றினர். இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு விளக்கவுரையாற்றினார். பயணத்தில் பங்கெடுக்கும் தோழர்களுக்கு வழக்குரைஞர் சிதம்பரன்.கி ஆடை போர்த்திச் சிறப்பித்து உரையாற்றினார்.

ஜம்பை தொடங்கி பெரிய மோலை பாளையம், தளவாய்ப் பேடடை, ஒருச்சேரிபுதூர், ஆப்பக்கூடல், புதுப்பாளையம், ஒசைப்பட்டி, செல்லப்பக்கவுண்டன் வலசு, பிரம்மதேசம், வெள்ளம்பாளையம், தவிட்டுப்பாளையம் வழியாக அந்தியூர் வந்தடைந்தோம்.

மதியமும் இரவும் தோழர் ஜம்பை ஜின்னா உணவு ஏற்பாடு செய்து தந்தார்.

29-04-2010

காலை 9 மணியளவில் அந்தியூரில் இருந்து சின்னத்தம்பிபாளையம், அத்தாணி, வரப்பள்ளம், கள்ளிப்பட்டி, துரையம்பாளையம், பங்களாப்புதூர், வழியாக ஏலூர் வந்தடைந்தோம். நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் கிருஷ்ணகுமார், இரா.செழியன், விசயசங்கர் மூன்று வேலை உணவு ஏற்பாடு செய்து தந்தனர். தோழர் விசயசங்கர் ஏற்பாட்டில் ஏலூரில் தங்கினோம்.

30-04-2010

ஏலூரிலிருந்து நால்ரோடு, பெரியகொடிவேரி, ஒட்டர்பாளையம், மா.குமாரபாளையம், வழியாக சத்தியமங்கலம் சென்றடைந்தோம். கெஞ்சனூர் தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளியில் தோழர் வெள்ளிங்கிரி தங்க வைத்தார். நாம் தமிழர் இயக்கத் தோழர் ஆறுமுகம் இரவு உணவு தந்தார். கடும் வெயிலில் நடந்து வந்த தோழர்கள் பெரிய கொடிவேரி ஆற்றில் குளித்தோம். அங்கேயே மர நிழலில் அமர்ந்து மதிய உணவு உண்டு, நடக்கத் தொடங்கினோம்.

மா.குமாரமங்கலத்தில் 1965 மொழிப் போரில் தமிழுக்குத் தன் இன்னுயிரைத் தந்த ஈகி முத்துவின் நினைவுத் தூண் அமைந்துள்ளது. பு.இ.மு., தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் இணைந்து இத்தூணை அமைத்திருந்தனர். அங்கு “இந்தித் திணிப்பையும் ஆங்கில ஆதிக்கத்தையும் முறியடித்து தமிழே தமிழ்நாட்டை ஆளச் செய்வோம். தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழ்த் தேசியச் சமூகநீதிக் குடியரசு படைக்க எம்மை முழுமையாக அர்ப்பணிப்போம்”. என உறுதிமொழி ஏற்றுக் கொன்டோம். தோழர் மு.மோகன்ராசு பயணக்குழு சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சத்தியமங்கலம் நுழையும் போது நாம் தமிழர் இயக்கம், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், மதிமுக உள்ளிட்ட தமிழன்பர்கள் வரவேற்றனர்.

01-05-2010

காலை 8 மணியளவில் பயணம் தொடங்கினோம். கெஞ்சனூரில் தொடங்கி சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், மூலக்கிணறு, கொத்துக்காடு, இண்டியம்பாளையம், அரசூர், மா.கோம்பை, சிங்கிரிபாளையம், காசிபாளையம், கோவைப்பிரிவு, மூலவாய்க்கால், கரட்டடிப்பாளையம் வழியாக கோபிச்செட்டிப்பாளையம் வந்தடைந்தோம். தாய்த் தமிழ்ப் பள்ளியில் தங்கினோம்.

தமிழர் பண்பாட்டுக் கழகத் தோழர் க .பெ.கிருஷ்ணசாமி காலை உணவு தந்தார். மதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் மா.கந்தசாமி மதிய, இரவு உணவு ஏற்பாடு செய்து தந்தார்.

02-05-2010

மாலை 6 மணியளவில் குறுநடைப் பயண விளக்கக் கூட்டம் மே நாள் சிறப்புக் கூட்டமாக கோபி பெரியார் திடலில் நடந்தது. அக்கூட்டப் பரப்புரையை அன்று காலை முதல கோபியெங்கும் செய்தோம். . மே நாள் கூட்டத்திற்கு மதிமுக தோழர் மா.கந்தசாமி தலை மை வகித்தார். பயணக் குழுத் தோழர் செ.இரவிக குமார் அளைவரையும் வரவேற்றார். தோழர்கள் பெதிக இராம. இளங்கோவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த வழக்கறிஞர் ப.பா .மோகன், தமிழ் நாடு வணிகர் சங்கக் கூட்டமைப்பு சண்முகவேல், நாம் தமிழர் இயக்கத் தோழர் இரா.செழியன், தமிழகத் தொழிலாளர் முன்னணி அமைப்பாளர் தோழர் விசயகுமார், ஆகியோர் உரையாற்றினர். இறுதியாகத் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். தோழர் குமரவேல் அணைவருக்கும் நன்றி தெரிவித்தார்.அன்று இரவு கோபி சந்தை (மார்க்கெட்) சங்கத் தலைவர் துரை உணவு தந்தார் 

03-05-2010

காலை 10 மணியளவில் கோபியிலிருந்து புறப்பட்டோம். போலவ காளிப்பாளையம், தாசாம்பாளையம், ஒத்தக்குதிரை, களிச்சாம்பாளையம், பாளம்பாளையம், சூரியம்பாளையம், மாரப்பாளையம், பாவாண்டகவுண்டனுர், கவுந்தப்பாடி, கண்ணாடிப் புதூர், வேலம்பாளையம், குஞ்சிமலை, கொளத்துப்பாளையம் வழியாக வெள்ளாங்கோவில் வந்து தங்கினோம்.

கவுந்தப்பாடியில் நாம் தமிழர் இயக்கத் தோழர் வழக்குரைஞர் செயராஜ் தன் வீட்டில் மதிய உணவு தந்தார்.

04-05-2010

வெள்ளாங்கோவிலில் இருந்து வேப்பம பாளையம், ஆவரங காடு, திங்களுர், கள்ளாங் குளம், புளியம்பட்டி, மாசாம்மாவுர், நல்லாம்பட்டி, பொத்தாம் பாளையம், பொன்னான்டவலசு, காஞ்சிக்கோவில், வழியாக சித்தோடு வந்து இரவு தங்கினோம்.

நாம் தமிழர் இயக்கத் தோழர் அரசு மதிய உணவு ஏற்பாடு செய்து தந்தார். மதிமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மகேசுகுமார் இரவு உணவு தந்தார்.

05-05-2010

கருப்புக்கரடு, நரிப்பள்ளம், மாமரத்துப்பாளையம், கனிராவுத்தர்குளம், சூளை, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பழையபாளையம், செங்கோடம்பாளையம், திண்டல், வேப்பம்பாளையம், மேட்டுக்கடை, வண்ணங்காட்டுவலசு, சத்திரம்புதூர், கூரப்பாளையம், தோட்டாளி, பழனிக்காட்டுப்புதூர், வழியாக பெருந்துறை வந்து தங்கினோம்.

மதிமுக தோழர் மகேஷ் குமார் காலை உணவு ஏற்பாடு செய்து தந்தார். அகரம் அச்சகத் தோழர் சதீஸ் மதிய உணவு தந்தார். மதிமுக தோழர் கந்தசாமி இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தார்.

06-05-2010

பெருந்துறையிலிருந்து புறப்பட்டு எல்லைமேடு, ஈங்கூர், கொத்தம்பாளையம், கூரப்பாளையம், பிடாரியூர், முகாசி பிடாரியூர், சென்னிமலை, அம்மாப்பாளையம், மங்களபுரம், தளவுமலை, மீனாட்சிபுரம் வழியாக அரச்சலூர் வந்து தங்கினோம்.

வணிகர் சங்கப் பேரவைத் தோழர்கள் இராசகோபால், துரை மதியமும் இரவும் உணவு தந்தனர். பு.இ,மு தோழர் பொன்னையன் சென்னிமலையில் தேநீர் வழங்கினார்.

07-05-2010

கணக்கப்பிள்ளைத் தோட்டம், இலட்சுமிபுரம், வடுவப்பட்டி, விளக்கேத்தி, சிவகிரி, சந்தைமேடு, அம்மன்கோவில், தாமரைபாளையம், வழியாக கொடுமுடி வந்து தங்கினோம். வள்ளல்பாரி மதிய உணவு வழங்கி தேநீர் ஏற்பாடு செய்து தந்தார். இரவு தங்கு வதற்குத் தோழர் செல்ல முத்து ஏற்பாடு செய்தார்.

08-05-2010

கொடுமுடியிலிருந்து புறப்பட்டு ஏமக்கண்டனுர், சின்னாக்கண்டனுர், எல்லையூர், வெங் கம்பூர், காசிப்பாளையம், ஊஞ்சலூர், வள்ளியம் பாளையம், காரணம் பாளையம், கருங்கரடு, கொலாநல்லி, கொம்பு பாளையம், மலையம்பாளையம், கருமாண்டம்பாளையம், சோலங்காபாளையம், கணபதிபாளையம், வழியாக மொடக்குறிச்சி வந்தடைந்தோம்.

திமுக ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் கணேஷ் காலை உணவு தந்தார். மதிமுக பேரூராட்சி செயலாளர் பழனிச்சாமி எஸ்.கே.பி மண்டபத்தில் தங்க வைத்தார்.

09-05-2010

சூளுர், களத்துக்காடு, கந்தாய்குட்டை, தொட்டிப்பாளையம், குளத்துத்தோட்டம், அவல்பூந்துறை, பேட்டை, முல்லாம்பரப்பு வழியாக இலக்காபுரம் வந்தடைந்தோம்.

பஞ்சலிங்கபுரம் தோழர் அமுதன் காலை உணவு தந்தார். தோழர் மோகன்ராசுவின் மாமனார் புதுவலசு கந்தசாமி மதியமும் இரவும் உணவு ஏற்பாடு செய்து தந்தார். இரவு அவர் வீட்டிலேயே தங்கினோம்.

10-05-2010

காலை 10 மணியளவில் இலக்காபுரத்தில் புறப்பட்டு சோலார், மூலப்பாளையம், நாடார்மேடு, கொள்ளம்பாளையம் வழியாக ஈரோடு நகரம் வந்தடைந்தோம்.

மாலை 6 மணியளவில் கிருட்டிணா திரையரங்கம் எதிரில் குறுநடைப்பயண நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். தோழர் குமரவேல் அனைவரையும் வரவேற்றார். தோழர்கள் ததேபொக நா.வைகறை, தமிழகத் தொழிலாளர் முன்னணி விசயகுமார் உரையாற்றினர். பயணம் குறித்த தொகுப்புரையைத் தோழர் பாரதி வழங்கினார்.

இறுதியாகத் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். ஈரோடு மாவட்ட ஜவுளித்  தொழிலாளர் சங்கத் தோழர் செந்தில்  அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு குறுநடைப் பயணம் 13 நாள்கள் 300 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து நிறை வடைந்தது. தமிழகத் தொழிலாளர் முன்ன ணியைச் சார்ந்த ஈரோடு மாவட்ட ஜவுளித் தொழிலாளர் சங்கம் மற்றும் ஓன்கார் தொழிலாளர் சங்கத் தோழர்கள் பயணம் முழுமையும் பங்குபெற்றனர். தோழர்கள் வழியெங்கும் மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கி உண்டியல் ஏந்தி நிதி திரட்டியபடியே வந்தனர். பயணத்தின் 7 ஆம் நாள் திங்களுர், காஞ்சிக்கோவில் உள்ளிட்ட ஊர்களில் தோழர் இராசாராம் பேசினார். மற்ற இடங்களில் தோழர் பாரதி உரையாற்றினார்.

- தொகுப்பு: வே.பாரதி.

Pin It