மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

மார்க்சை அறிவோம்! மார்க்சியம் கற்போம்!!

07 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

காரல் மார்க்சு 1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத்தில் பிறந்தார் காரல் மார்க்சு தன் பள்ளிப்படிப்பின் இறுதித்...

தேசிய இன விடுதலை - ஓர் அறிமுகம்

07 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

மார்க்சியப் பெரியாரியல் அறிஞரும் சிறந்த திறவினை யாளருமான வே.ஆனைமுத்து 21.06.1925இல் பெரம்பலூர் மாவட்டத்தில் முருக்கன்குடி எனும் சிற்றூரில் பிறந்தார். 96...

பெரியார் முதலாவதாக வெளியிட்ட குடிஅரசு ஏட்டின் மரபு

07 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

1920களில் இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்த பேராளுமையாளரான பெரியார் (கள்ளுக் கடை மறியல்) போராட்டத்திற்குத் தலைமை ஏற்றதற்காக கோவை சிறை யில்...

காவல் சித்திரவதையைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சிறப்புச் சட்டம் வேண்டும்!

07 ஜூலை 2025 கட்டுரைகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். மதிப்பிற்குரிய முதலமைச்சருக்கு வணக்கம். சிவகங்கை திருபுவனத்தில் சென்ற சூன்...

நினைவுப் பொட்டலம்

07 ஜூலை 2025 கட்டுரைகள்

நேற்று முட்டை வாங்கும் போதுதான் கவனித்தேன். முட்டைகளை பாலிதீன் பையில் போட்டு அப்படி இப்படி சுற்றி முடிச்சிட்டு தருகிறார் கடைக்காரர். முன்பெல்லாம் காகிதத்தில்...

ஒற்றை மலர்

07 ஜூலை 2025 கவிதைகள்

உன்னை நினைக்கும் போதெல்லாம்உன் முகம் ஞாபகத்திற்கு வருவதில்லைசொற்கள் தான் ஒலிகளால் நிரம்பியது தான்வாழ்க்கை என்றிருந்தாய் மெளனம் கடைசி வரையிலும்உன்னிடம்...

மேய்ச்சல் நிலம்

07 ஜூலை 2025 கவிதைகள்

வெறும் கோலத்தைத்தரையில் போட்டு விட்டுஅழகு கோலமாய்எழுந்து நிற்பவளிடம்கேட்க வேண்டியதுஅந்தக் கோலம் புள்ளியில்இந்தக் கோலம் மச்சத்திலா * காற்றுக்குகாற்றில்...

செட்டிநாட்டில் சீர்திருத்தப் புரட்சி

07 ஜூலை 2025 பெரியார்

நாட்டுக்கோட்டை நகரத்தார் லேவாதேவியின் மூலம் நன்றாய் பணம் சம்பாதிக்கக்கூடிய சமூகத்தார்கள் என்பது யாவரும் அறிந்ததாகும். ஆனால் அப்பணத்தை ஒழுங்கான முறையில் செலவு...

மதம் கொண்ட அரசியல்...!

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

கடவுள், மத நம்பிக்கை உடையவர்களே இன்றும் தமிழ்நாட்டில் மிக மிகப் பெரும்பான்மையினர் என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகம் முழுவதும்...

பாஜக - அதிமுக கூட்டணியின் தோல்வியை அறிவித்த முருகன் மாநாடு!

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

மதுரையில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில், பாஜகவின் கையாளான இந்து முன்னணி பெயரில் ஒரு மாநாட்டை பாஜகவே நடத்தியிருக்கிறது. திராவிடத்தை...

பகை நடுங்க வாழும் பெருமிதத் தலைவர் கு.இரா.

04 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

திராவிட இயக்க வரலாற்றில் உயிர்ப்பு மிகுந்த செயல்பாடுகளின் களமாகக் கோவை மண்டலம் எப்பொழுதும் விளங்கி வருகிறது. 1885இல் “திராவிட பாண்டியன்” இதழையும், பின்னர்...

காசிக்குப் போகும் பாஜக

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

பக்திவேடம் போட்டு வேலெடுத்து சுற்றித்திரிந்த காவிக் கூட்டத்தார், இப்போது முருக வேடமிட்டு முருகனைத் தூக்கத் தொடங்கி விட்டார்கள், தமிழ்நாட்டில். தமிழ்மீது...

வேஷம்

04 ஜூலை 2025 கவிதைகள்

இன்றைக்கு வாய்த்தது நல்ல வேடிக்கை காட்டும் முகம். பெரிய கோமாளியாகக் கடவதுஎன்று தினசரியில்என் பெயருக்கு ராசிபலன் பொய்யில்லை யாரைப் பார்த்தாலும் சிரித்து...

கையாலாகாதெனும் மெய்கள்

04 ஜூலை 2025 கவிதைகள்

ஒழுங்கற்று ஓடியதுபாதரசப் பொய்கள்பளிச்சென மனதிலேறிஒவ்வொருவரிடமும்நியாயமென பதிந்து. கேட்பாரற்றுக் கிடந்தது.தொன்மங்கள் உண்மையோடுஉறங்கி தொடுதலற்றுதூசுகளேறி...

போதை

04 ஜூலை 2025 கவிதைகள்

நண்பர்களுடன் அரட்டையடிக்கதனிமையைப் போக்கபுத்துணர்ச்சி பெறஇணையுடன் அளவளாவபணியிடையே சற்று இளைப்பாறபிறர் அகம் பற்றி புறம் பேசசாளரம் அருகிலமர்ந்துமழையை...

கீற்றில் தேட...

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா).

Periyar E.V.Ramasamyதிராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டாக்டர் கி. வீரமணி அவர்களுடைய பேச்சின் சுருக்கத்தை இங்குத் தருகிறோம்.

"அருமை நண்பர்களே! இப்படிப்பட்ட ஓர் ஆய்வு நூல் வரவேண்டும் என்று நினைத்து அய்.அய்.டியினுடைய பேராசிரியர் சகோதரி திருமதி.வசந்தா கந்தசாமி அவர்கள் மிக அடக்கமாகப் பணியாற்றி அமைதியாக, மிக ஆழமாக இந்நூலைத் தயாரித்திருக்கிறார். இந்தக் கணிதச் சூத்திரத்தில் பெரியாருடைய தீண்டாமை ஒழிப்புக் கருத்துகள் எல்லாவற்றையுமே மிக ஆழமாகத் தொகுத்து மிக நுண்ணியமாக வழங்கியிருக்கிறார். உரைநடையை விட இலக்கணத்திற்குட்பட்ட பாட்டு குறைவாக இருந்தாலும் எப்படி நிறைவாக இருக்கிறதோ அதுபோலக் கணிதத்தில் பெரியாரைப் பற்றிய இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இதைப்பற்றி விளக்கம் சொன்னபோது சகோதரி வசந்தா சொன்னார்கள்: அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞான அமைப்பும் (National Science Foundation) 1865ஆல் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட கார்மல் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்ற அறிவியல் துறைகளுக்கான இணையத் தளத்திலே (http://land.archiv.org) இந்தப் பெரியாரின் புத்தகம் இலவசமாக டவுன்லோடு செய்யும்படி ஏற்பாடாகி இருக்கிறது என்று.

அந்த இணையத் தளத்திலே உலக விரிவுவலை என்று சொல்லுகிறோமே உலகம் முழுதும் இருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் ஏராளமானோர் இதைப் படித்து இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் உலகமயம் ஆக்கப்படவேண்டும். உலகம் அனைத்தும் பெரியாரின் கருத்துகள் செல்லவேண்டும் என்ற நம் கருத்து இன்று நினைவாகி வருகிறது. பெரியார் அவர்களின் தத்துவம் அடங்கிய இந்தப் புத்தகம் என்பது நமக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருப்பது மட்டுமல்ல - இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிற ஏவுகணையாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியோடு இந்தச் சகோதரியாருக்கும் அவருடைய செல்வங்களுக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைவருக்கும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது. அதை அடுத்த பதிப்பிலாவது செய்ய வேண்டும். பேராசிரியர் வசந்தா கந்தசாமி இந்த நூலிலே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே இல்லை. வெளியே பார்ப்பவர்களுக்கு அவர்களது ஆற்றல் இன்னது என்று தெரிய வேண்டும். சாதாரணமாக இந்த அம்மையாரை என் சகோதரியாரைப் பார்த்தால் நம்பவே மாட்டீர்கள், இவர் பேராசிரியர் அதுவும் அய்.அய்.டி. பேராசிரியர் என்று நம்பவே மாட்டீர்கள். இவரைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தன் அடையாளத்தை மாற்றிக் கொள்ளாத ஒரு தமிழச்சியாக இவ்வளவு கொடுமைகளை அவர் தாங்கி இருக்கிறார். எதையும் தாங்கும் இதயம், எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லிக் கொண்டு போய்விடுவது மிகவும் சுலபம். ஆனால் பார்ப்பனக் கொடுமைகளைத் தாங்கும் இதயம் இருக்கிறதே அதற்குத் தனி ஆற்றல் வேண்டும். அதை அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?

பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி.

- கி.வீரமணி