
தீர்மானிக்கப்படுகின்றது
நீதி தேவதையின் இருப்பிடம்
வாக்குமூலங்களில் தொனிக்கின்ற
வர்ணமூலங்களே
நீதியின் விதைகளென
இருக்கின்றன
மரணங்களின் துர்வாடைகளின் மீது
தெளிக்கப்பட்ட மந்திர
வாசனைகளில் மயக்கமுறுகிறது
ஜனநாயகம்
ஆசிர்வாத மேடையில் அமரும்
பயங்கரவாதிகள் சூழ
வலம் வருகிறது குற்றம்
கையில் தண்டத்தோடு
நீதியின் கைகளில்
விலங்கினைப் பூட்டிவிட
இரைச்சல் போடுகின்றது மதத்திமிர்
வெட்டவெளியெங்கும் தகிக்கிற
கோபத்தை கொட்டி வைக்கிறோம்
இன்னும் அழியாத உங்களின்
செருக்கின்மீது