1) திருப்பதி ‘வேத பல்கலை’ வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்; வேதம் படிப்போர் முகமூடி அணிய வனத்துறை வேண்டுகோள். - செய்தி
‘பூணூல்’ போடாட்டாலும் பரவாயில்லை; ஓய்! முதலில் முகமூடியை போடுங்கோ! இப்ப அதுதான் முக்கியம்!

2) காதலர் தினத்தை எதிர்த்து இந்து முன்னணியினர் நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்தனர். - செய்தி
இந்த ‘சூத்திரர்கள்’ நாய்க்குத்தான் திருமணம் செய்ய முடியும்; ‘மனுஷாளுக்கு’ விவாகம் செய்யும் உரிமை ‘அவாளுக்கு’த்தான்!

3) டெல்லி தேர்தலில் 70 தொகுதிகளில் 3இல் மட்டுமே பா.ஜ.க. வெற்றி. - செய்தி
அப்படின்னா, ‘இராமனின்’ பிள்ளைகளை டெல்லி மக்கள் ‘வனவாசத்துக்கு’ அனுப்பிட்டாங்கன்னு, சொல்லுங்க.

4) குருவாயூர் கோயிலில் பின்பற்றவேண்டிய கடமைகளை ‘பகவான்’ கிருஷ்ணனிடம் அருள்வாக்காக கேட்டறிந்தார் சோதிடர் ராமன் நம்பூதிரி. - செய்தி
இனி ராமன் நம்பூதிரி மட்டும்தான் தன்னிடம் பேச வேண்டும்; அந்த உரிமை வேறு யாருக்கும் இல்லை என்று ‘கிருஷ்ணன்’ கூறியிருப்பாரே!

5) தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் தகுதியும், அரசியல் முதிர்ச்சியும் எங்களைத் தவிர வேறு எவருக்கும் கிடையாது.- மருத்துவர் இராமதாசு
உண்மைதான்; உங்க அறிவு முதிர்ச்சிக்கு இந்த அறிவிப்பே சரியான சான்று!

6) நாமக்கல் ‘ஆஞ்சநேயரு’க்கு வேத புரோகிதர்கள் 1008 குடம் பால் அபிஷேகம். - ‘தினமணி’ செய்தி
‘ஆஞ்ச நேயர’ இப்படி மூச்சுத் திணற வைக்குறதுல, ‘இவாளுக்கு’ அப்படி ஒரு மகிழ்ச்சியா?

7) கோயில் வளாகங்களில் திருட்டை தடுக்க எச்சரிக்கை மணிகள். - தமிழக அரசு உத்தரவு
அந்த மணிகள் ஒழுங்கா சக்தியோட வேலை செய்ய அதுகளுக்கும் அன்றாட அர்ச்சனைக்கு அப்படியே ஒரு உத்தரவு போட்டுடுங்க; அதுதான் பாதுகாப்பு.

8) 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு இன்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.- ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன்
ஆட்சி அமைக்கும் கட்சிக்கு, உடனே ஆதரவு தெரிவிச்சுடுவீங்க போலிருக்கு! இதுவும் நல்லாத்தான் இருக்கு!

 

 

Pin It