* மாட்டுக்கறி விருந்துநடத்துவது வேலை இல்லாதவர்கள் நடத்தும் போராட்டம்.     - அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன்

                உண்மைதான்! மாட்டுக்கறிக்கு தடை போட்டதால் அம்மாநிலங்களில் அதன் காரணமாக வேலை இழந்தவர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

* இந்திய வானொலியில் சமஸ்கிருதத்தில் செய்திகளை மீண்டும் ஒலி பரப்பலாம்.    - ஜெர்மனியில் மோடி

                அந்த செய்தியை கோயில் கர்ப்பகிரகத்தில் கொண்டு போய் ஒலி பரப்புங்க. கடவுளுக்குமட்டும்தான் அது புரியும்!

* அட்சய திருதியை நாளில் தங்க விற்பனையில் கலப்படம் அதிகம் நடக்கிறது.            - நுகர்வோர் சங்கம்

                அன்றைய தினம் கலப்பட தங்கம் வாங்குவதே - அய்தீகம்ன்னு அறிவிச்சுடலாம். அப்போதும் கூட்டம் முண்டியடிக்கும்.

* காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு (பார்ப்பனர்களுக்கு) தனி நகரம் உருவாக்கி, தனி குடியிருப்பு அமைக்கப்படும். - காஷ்மீர் அரசு முடிவு

                அங்கே பண்டிட்டுகளே தெரு கூட்டுவார்கள்; அவர்களே சாக்கடை அள்ளுவார்கள்!

* கிரெடிட் கார்டு மோசடி: அமெரிக்காவில் இந்து சாமியாருக்கு 27 வருட சிறை.        - செய்தி

                அமெரிக்காகாரன் இந்து துவேஷின்னு காட்டிட்டான்; உடனே தூதரக உறவை முறிச்சு, சாமியார மீட்டுட்டு வாங்க.

* மதமாற்ற தடைச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.                - சட்ட அமைச்சகம்

                அதனால் என்ன? ஆர்.எஸ்.ஸ்.சுக்கு அந்த அதிகாரத்தை வழங்கி, அவசர சட்டம் போடுங்க. குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் தருவார்.

* பெரியார் சிலையில் உள்ள கடவுள் இல்லைஎன்ற வாசகத்தை நாங்களே அழிப்போம்.     - எச். ராஜா

                ‘கடவுள் இல்லைஎன்பதால் மனிதர்களாகிய நாங்கள் தான் அதை அழிக்க வேண்டியிருக்கிறது என்று இதன் மூலம் ஒப்புதல் தருகிறது இந்த வெட்கம் கெட்ட பூணூல் கும்பல்.

Pin It