பாடு கண்ணே பாடு - பாவேந்தர்

பாரதி தாசனார் பைந்தமிழ் பாட்டினைப்

பாடு கண்ணே பாடு

யாழோடும் குழலோடும் பறைமுழங்க

ஊரோடும் இசையோடும் பாடு.

அயர்வினை உன்னில் நீக்கும் - மின்

     ஆற்றலை உடலில் சேர்க்கும்

துயருனை அண்டாது காக்கும் - வாழ்வில்

     தூயநல் இன்பமே தேக்கும்

தீயதாம் அச்சத்தை ஓட்டும் - அஞ்சா

     துணிவெனும் ஆயுதம் நீட்டும்

மாயையாம் மூடத்தைத் தீய்க்கும் - உன்னை

     மாசற்ற மனிதனா யாக்கும்

மானுட அறிவினை பெருக்கும் - இன

     மானமே குருதியில் கலக்கும்

ஊனினில் தமிழையே நாட்டும் - உரிமை

     விடுதலை புரட்சியை மூட்டும்

கன்னல் பாகாய் வார்ப்பாய் - அமிழ்தாம்

     கருத்தை மீட்டியே ஆர்ப்பாய்

அன்னைத் தமிழில் தீட்டிய - பாட்டை

     ஆருயிர் ஊறிட பாடு!

Pin It