2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அவசர அவசரமாக ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் காங்கிரஸ்ஆட்சி சேர்த்தது. உச்சநீதிமன்றம், மத்திய அரசின் இந்த உத்தரவை அண்மையில் இரத்து செய்து விட்டது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. காரணம், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ‘ஜாட்’ சமூகத்தினர் ஆதிக்க நிலையிலேயே இருந்து வருகிறார்கள். விரிவாக ஆய்வு நடத்திய மண்டல் ஆணையம் ‘ஜாட்’ சமூகத்தினரை பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. பிற்படுத்தப்பட் டோருக்கான தேசிய ஆணையமும் வாக்கு அரசி யலுக்காக இந்தப் பிரிவினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் காங்கிரஸ்கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதே நேரத்தில், இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும்போதெல்லாம், வழக்கிற்கு தொடர்பே இல்லாமல், இடஒதுக் கீட்டையே கேள்விக்குள்ளாக்கி, கருத்துகளை தெரிவிப்பது உச்சநீதிமன்றத்தின் வழக்கமாகி விட்டது. இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இதேபோல் விவாதத்துக்குரிய பிரச்சினைகளை எழுப்பியிருக்கிறது. நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் ரோகின்டன் எஃப். நாரிமன் ஆகியோர் இந்த வழக்கில், பிற்படுத்தப்பட்ட தன்மையை அடை யாளப்படுத்துவதற்கு ஜாதி என்ற ஒற்றை அளவு கோல் மட்டுமே போதுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.

தீர்ப்பில், “உண்மையிலேயே பிற்படுத்தப்பட் டோராக கருதப்பட வேண்டிய சமூகப் பிரிவுகள் இருக்கின்றன. இந்தப் பிரிவினரின் தொடர்ச்சியான பின்தங்கிய நிலையை ஆராய, ஜாதி என்ற அடை யாளத்தையும் தாண்டி மதிப்பீடு செய்ய வேண்டும்” என்று எழுதியுள்ளார்கள். திருநங்கைகள் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க தகுதியானவர்கள் என்றும் நீதிமன்றம் கூறுகிறது. இடஒதுக்கீட்டை ஒழிக்கக் காத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன உயர்ஜாதியினர், இத்தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளார்கள். திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு செய்வதில் தவறில்லை; அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கச் சொல்வதுதான் பிரச்சினை. பார்ப்பனர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று, ‘டைம்ஸ்ஆப் இந்தியா’ நாளேட்டில், சில மாதங்களுக்கு முன்பு நீலிக்கண்ணீர் வடித்து கட்டுரை எழுதிய ‘கிழக்குப் பதிப்பக’ உரிமையாளர் பத்ரி சேஷாத்திரி இப்போது நீதிபதிகளின் இந்தக் கருத்தை வரவேற்று, அதே ஆங்கில நாளேட்டில் எழுதியிருக்கிறார். இட ஒதுக்கீடு என்பது, ஏதோ, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் ‘சலுகை’ என்பது போலக் கருதி, இந்த ‘சலுகை’யை எவ்வளவு காலத்துக்கு வழங்க முடியும் என்பதுபோல் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவது சரியான பார்வை அல்ல. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை. ‘நலத் திட்டம்’ என்று சுருக்கிப் பார்க்க முடியாது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை விமர்சித்து, டெல்லி பல்கலையின் சமூகவியல் துறை பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (மார்ச் 27) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஜாதி ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களை முழுமையான குடி மக்களாக்குவதற்கும் கொண்டுவரப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை ‘சலுகைத் திட்டமாக’ நீதிமன்றம் கருதுவது சரியான பார்வை அல்ல. எந்தெந்த ஜாதிப் பிரிவினர், பிரதி நிதித்துவம் பெறாதவர்களாக இருக்கிறார்களோ, அவர்களைக் குறிப்பாகக் கண்டறிந்து, அவர் களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கும்போதுதான் அவர்கள் முழுமையான குடிமக்களுக்கு உரிய நிலையை எட்டுகிறார்கள். தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் உள்ள குறைகளை சரி செய்து, அனைத்து ஜாதிப் பிரிவினருக்கும் உரிய பிரதி நிதித்துவம் கிடைப்பதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் சமமான பிரதி நிதித்துவம் உறுதி செய்யப்படுவதே இடஒதுக்கீட் டின் நோக்கம் என்ற கருத்தை சதிஷ் தேஷ்பாண்டே அந்த கட்டுரையில் முன் வைத்துள்ளார். வரவேற்கப்பட வேண்டிய சரியான கருத்து! 

Pin It