சமூக மாற்றம்-வளர்ச்சிகளை தடைப்படுத்தும் ஜாதியம் சமூகத்தில் நிகழும் அரசியல்-பொருளாதார செயல்பாடுகளை மக்கள் மேம்பாட்டுக்கு பயன்படவிடாது, ஜாதியம் விழுங்கி செரிமானம் செய்கிறது என்று பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.

தமிடிநநாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் 30.3.2014 அன்று சிறப்புக் கருத்தரங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

காலை 10.30 மணிக்கு மாநிலக் குழுத் தலைவர் எல்.பி. சாமி தலைமையில் நடந்த முதல் அமர்வில் ‘ஜாதியப் பாகுபாடுகளும் வன்கொடுமைகளும்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்.

“ஜாதியப் பாகுபாடுகளுக்கு அடிப்படையானது ஜாதியமைப்பு; ஜாதியமைப்பு உலகிலே எங்கும் இல்லாது இந்தியாவில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிற பார்ப்பனர்களால் கட்டி எழுப்பப்பட்ட அமைப்பு.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வரும் வரை இந்தியா என்ற ஒன்று உருவாகவில்லை.

ஆனால், வேத காலத்தில் தொடங்கிய பார்ப்பனர்களின் புரோகித ஆட்சிகளையே அரசர்களும் குறுநில மன்னர்களும் நடத்தி வந்தனர். இதனால் உலகில் பல்வேறு சமூக அமைப்புகளில் நிகடிநந்த மாற்றங்கள் இங்கே உருப் பெறாமல் பார்ப்பனிய ஜாதியமைப்பு தடுத்து வந்தது. அரசுகளை துப்பாக்கி முனையில் இணைத்து பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய நிர்வாக அமைப்பில் ரயில் தொடர்பு, தபால் சேவை, தொழிற்சாலைகள் போன்ற நவீனத்துவத்தால் தேங்கிக் கிடந்த பார்ப்பனிய சமூக அமைப்பில் மாற்றங்கள் உருவாகத் தொடங்கி, பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஒரு புறமும், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை ஒரு புறமும், அதன்பிடிக்குள் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் உருவெடுத்தன. ஜாதியமைப்பு உருவாக்கிய அடிமைத்தனத்துக்கு எதிராக வகுப்புவாரி உரிமை கிளர்ச்சிகளும் இந்தி எதிர்ப்பு இயக்கங்களும் பார்ப்பன எதிர்ப்பும் முகிடிநத்தன.

காங்கிரசின் தேசிய அரசியலைக் கைப்பற்றிக் கொண்ட பார்ப்பனர்கள், சுதந்திரப் போராட்டத்தைப் பயன்படுத்தி பார்ப்பன இந்து நாட்டை உருவாக்கிடும் முயற்சிகளில் இறங்கினர். அதன் காரணமாக வந்த ‘சுதந்திரம்’ மக்களுக்காக இல்லாமல் பார்ப்பன-பனியா மேலாதிக்கத்துக்கே வழி திறந்துவிட்டது. அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, அனைவரும் சமம், 21 வயதுடைய அனைவருக்கும் ஒரு ஓட்டு என்ற சட்டங்கள் வந்த பிறகும் சமத்துவம் உருவாகி விடாமல் சமூகத்தைப் பார்ப்பனிய ஜாதியமைப்பே தனது பிடிக்குள் வைத்திருந்தது.

ஜாதிகளைக் கடந்து, அரசியல் நோக்கங்களுக்காக அரசியல் கட்சிகள் உருவானாலும், பல்வேறு ஜாதியினர், அரசியல் கட்சிஎன்ற குடையின் கீடிந ஓரணியாக திரண்ட போதும், அரசியல் கட்சிகளையும் ஜாதி செரிமானம் செய்து கொண்டது.

இந்தியாவின் ஜனநாயகம், பார்ப்பன நாயகமாகவே இருப்பதை பெரியார் 1925 ஆம் ஆண்டி லேயே சுட்டிக் காட்டினார். தேர்தல் முறையில்கூட சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் தனித்தொகுதி முறை கொண்டு வரப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் பட்டியலினத்தைச் சார்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் - சட்டப்பூர்வமாக உறுதியானது. ஆனால் சட்டம் எதுவும் இல்லாமலே ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதியின் எண்ணிக்கை அதிகமிருக் கிறதோ, அந்த ஜாதி வேட்பாளர்களையே நிறுத்துவதையே கட்சிகள் வழக்கமாக்கிக் கொண்டு விட்டன. ஆக தேர்தல் முறையிலும் ஜாதியை ஒழிக்க முடியாதது மட்டுமல்ல, அது மேலும் வலிமை யடையவே செய்தது.

புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் சாதனங்களின் வளர்ச்சி, தொழிற்சாலைகள் என்ற நவீனத்துவங்கள் வந்தாலும், ஜாதிகளைக் கடந்து வர்க்கங்களின் அடிப்படையில் தொழிற் சங்கங்கள் வந்தாலும் ஜாதியின் பிடி தளரவில்லை. ஜாதியமைப்பு அனைத்து நிறுவனங்களையும் செரிமானம் செய்துவிட்டது.
1990களில் ‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கை அமுலாக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குகதவுகள் திறந்துவிடப்பட்டன. இதன் பெருவளர்ச்சியும், ஜாதியமைப்பை அசைக்க முடியவில்லை.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் பார்ப்பனர்களும் வைசியர்களுமே இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், ஏன், ஒரு தலித்தோ, ஆதிவாசியோ இடம் பெறவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். ‘பார்ப்பன-பனியா’ மட்டுமே இந்த சமூகத்தில் பெரும் தொழிலதிபர்களாக வளரமுடிவதற்கு ‘அர்த்த சாஸ்திரம்’, ‘மனு சாஸ்திரம்’அவர்களுக்கு வழங்கி வந்த மத அதிகார உரிமைகள் தொடர்ந்து கட்டிக் காப்பாற்றப்பட்டு வருவதுதான் என்று அம்பேத்கரின் ‘ஜாதி ஒழிப்பு’ நூலுக்கு வழங்கிய முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார்.

பார்ப்பனர்கள் தங்களின் பிறவி ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்ள சமூகத்தில் திணித்த ஜாதியம் என்ற கருத்தியல், பாசிசக் கருத்தியலாகும். சக மனிதர்களை ஜாதியின் அடிப்படையில் பிளவுபடுத்துவதோடு ‘மேல்-கீழ்’ அடுக்குகளை உறுதியாக்கி, வெறுப்பையும் பகைமையையும் திணித்துக் கொண்டிருக்கிறது. பார்ப்பனியம், பார்ப்பனர்களிடம்தான் தங்கியுள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.

‘முதலாளித்துவ’, ‘நிலபிரபுத்துவ’ சிந்தனைகள் எப்படி முதலாளிகள், நில பிரபுக்களிடம் மட்டுமல்லாது சமூகத்தில் பல்வேறு படி நிலைகளில் பரவி இருப்பதுபோல் பார்ப்பனியமும் ஊடுருவி நிற்கிறது.

ஆனாலும், முதலாளித்துவத்தை எதிர்க்க முதலாளிகள் சுரண்டல் எதிர்ப்பை முதன்மைப்படுத்துவதுபோல் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக்கு நில பிரபுக்கள் எதிர்ப்பை முதன்மைப் படுத்துவதுபோல், ஜாதியத்துக்கு கருத்தியலை வழங்கிய பார்ப்பனியத்தை வீடிநத்த பார்ப்பனியஎதிர்ப்போடு பார்ப்பன எதிர்ப்பையும் முதன்மைப்படுத்த வேண்டும்” - என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில், வன்னியர் ஜாதிப் பெண்களை தலித் ஆண்கள் ‘நாடகக் காதல்’ நடத்தி ஏமாற்றுகிறார்கள் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு முன்வைக்கும் குற்றச்சாட்டை புள்ளி விவரங்களுடன் மறுத்து தமிடிநநாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலித் பெண்கள்தான் பிற ஆதிக்க ஜாதி ஆண்களால் ஏமாற்றப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.

மத்திய அரசு பிறப்பித்த வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்தத்துக்கான அவசரப் பிரகடனத்தின் புதிய கூறுகளை விளக்கினார். அரசியல் சட்டம், ஜனநாயகம், தேர்தல்,அரசியல் கட்சிகள், தொழில் வளர்ச்சி, உலகயமாக்கல் என்று வரிசையாக நிகடிநந்து வரும் சமூகபொருளாதார, செயல்பாடுகளையும் கடந்து ஜாதியமைப்பும் பார்ப்பனியமும் உயிர்த் துடிப்போடு சமூகத்தின் வளர்ச்சிக்கு தடை போட்டு வருகின்றன. எனவே, ஜாதியமைப்புக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றகருத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து கவிஞர் மனுஷ்ய புத்திரன், “மதவாதமும் வளர்ச்சி குறித்த மூடநம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் மோடியை முன்னிறுத்தி உயர்த்திப் பிடிக்கப்படும் மதவெறி அரசியலையும் குஜராத் வளர்ச்சி என்ற மாய்மாலத்தையும் ஊடகங்கள் பரப்பி வரும் பொடீநு பரப்புரைகளையும் விளக்கி பேசினார்.

Pin It