அக்டோபர் 03 : வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை அகற்றக்கோரி கல்லூரி முதல்வரிடம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடந்த 03.10.2023 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

சிலையை அகற்றிக் கொள்வதென கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்திருந்த நிலையில், மறுநாளே (04.10.2023) இந்து முன்னணியை சார்ந்த நிர்வாகிகள் கல்லூரிக்குள் நுழைந்து சிலையை அகற்றக்கூடாது என கல்லூரி நிர்வாகத்திடம் மனு கொடுத்து விட்டு, அங்கிருந்த பிள்ளையார் சிலையை வழிபட்டு சென்றனர்.pillaiyar statue vanavasi collegeஇதனையறிந்து மீண்டும் கல்லூரி முதல்வரை தோழர்கள் தொடர்புகொண்டு சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட நிலையில், 06.10.2023 அன்று கல்லூரி வளாகத்திற்குள் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கல்லூரி நிர்வாகத்தினர் அகற்றினர்.

இட துக்கீடு : வரலாற்று ஆவணமாக வெளிவந்துள்ள நூல்

நிகர்மொழி பதிப்பகம் “உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% EWS இட ஒதுக்கீடு சரியா? தவறா? என்ற நூலை வெளியிட்டிருக்கிறது.

தொகுப்பாசிரியர் : சு.விஜயபாஸ்கர்

தமிழக முதல்வர் முன்னுரை எழுதியுள்ளார். 104 சமூகநீதி ஆய்வாளர்களின் கட்டுரை இடம் பெற்றுள்ளது, இட ஒதுக்கீடு பற்றிய ஒரு வரலாற்று ஆவணமாக வெளிவந்துள்ள இந்நூல் ஒவ்வொரு சமூக நீதி போராளிகளுக்குமான அறிவாயுதம் என்றுதான் கூற வேண்டும். 608 பக்கங்களை கொண்ட இந்த நூலுக்கு மிகக் குறைவாக ரூ.600/- மட்டுமே விலை நிர்ணயித்துள்ளனர்.

நூலைப் பெற விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண் : 8428455455

Pin It