திருப்பூரில் கடந்த 22.10.2018 திங்கள் கிழமை அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி ஒன்று வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி ஒரு சுற்றறிக்கையை வெளியிட் டிருந்தார். அதில் என்ன பயிற்சி என்றோ, யார் நடத்துகிறார்கள் என்றோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆசிரியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

kolathoor mani at thirupur agitation22.10.2018 அன்று காலை பயிற்சி வகுப்புக்குச் சென்ற சுமார் 600 ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வகுப்பை நடத்த வந்தவர்கள் “இதிகாச சங்காலன சமிதி” என்ற வடமொழிப் பெயருடனும் வரலாற்றுத் தொகுப்புப் பேரவை என்று தமிழிலும் அறிமுகப் படுத்திக் கொண்டனர். பயிற்சியை நடத்தி யவர்கள் சுப்பிரமணியம் மற்றும் டி.வி.ரங்கராஜன் ஆகியோர். இதனை ஒருங்கிணைத்தவர் இந்துத்துவ அமைப்பின் முதன்மை உறுப்பினர் திருப்பூர் நிப்ட்-டீ-கல்வி நிறுவனத்தின் தலைவராவார். இதில் சிறப்புரை யாற்றித் தொடங்கி வைத்தவர் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி.

பயிற்சி முழுக்க இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் கருத்துகளே சொல்லப்பட்டன. நமது இதிகாச புராணங்களை நாம் மறந்துவிடக் கூடாது. அதிலுள்ள கருத்துகளை ஆசிரியர்கள் படித்து தெரிந்து கொண்டு மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். ஒவ்வொரு பாட வேலை தொடங்கும்போதும் “ஓம்” என்று சொல்லித் தொடங்கினால் மாணவர் களின் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும். பசு மாட்டின் மூத்திரம் சிறப்பான மருத்துவ குணங்களைக் கொண்டது. இதிகாச காலத்திலேயே விமானம் இருந்தது. அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. எல்லாம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன. சமஸ்கிருதம் உயர்ந்த மொழி. அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துகளைப் பேசினர். என்றைக்கு குருகுலக் கல்வி முறை மாற்றப்பட்டு மெக்காலே கல்வி முறை வந்ததோ அன்றே நம்நாடு நாசமாகி விட்டது. இப்போதுள்ள பாடத் திட்டம் குப்பை. இதையெல்லாம் தயாரிக்க ஒரு குழு வேறு தேவையா என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை மேடை யில் வைத்துக் கொண்டே பேசி னார்கள். அலுவலரும் சிரத்தையாகக் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

பயிற்சியில் கலந்து கொண்டவர் களில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்களும் இருந்தனர். இப்படிப் பட்ட ஒரு வகுப்பை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப் பட்டதைக் கண்டித்து எல்லோரும் பேசத் தொடங்கினர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யினர் மறுநாளே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தின் பொம்மை அரசைப் பயன்படுத்திக் கொண்டு பள்ளி மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் இதுபோன்ற காவிகளின் திட்டத்திற்கு உடந்தையாக இருந்த முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், இதுபோன்ற திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதும் நமது கருத்தாகும்.

இதையடுத்து, மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணை போகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழமை அமைப்பு களுடன் இணைந்து 25.10.2018 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் காவல்துறையின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவர் முகில்ராசு, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டச்செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் அகிலன், சங்கீதா, மாநகர தலைவர் தனபால், மாநகர செயலாளர் மாதவன். மாநகர அமைப்பாளர் முத்துகுமார், தெ.பகுதி அமைப்பாளர் ராமசாமி, மாணவர் கழக அமைப்பாளர் பிரசாந்த், மடத்துக்குளம் மோகன், சரஸ்வதி, சஜினா, முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், செயலாளர் சரவணன், பொருளாளர் முத்துப் பாண்டி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், காவை ஈஸ்வரன், கோவை மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், பல்லடம் கோவிந்த ராஜ்,சூலூர் ஒன்றியம் பாபு ஆகிய தோழர்களும் மற்றும் தோழமை அமைப்புகள் ஆறுமுகம் (தி.க.), மு.சம்பத் (மதிமுக தொழிற்சங்கம்) ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

துரை வளவன் - மாநில துணைச் செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அபுதாஹிர் - மாவட்டத் தலைவர், ளுனுஞஐ கட்சி, ஹபிபுர் ரஹ்மான் - மாவட்டத் தலைவர், பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா, ஜியாவுல்ஹக் - மாவட்ட ஒருங் கிணைப்பாளர், கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இண்டியா ஆகிய தோழர்கள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் கள் ஒருங்கிணைப்பு செய்தனர்.

பங்கேற்ற தோழர்களில் 63 பேர் கைது செய்து தென்னம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

மேலும் த.பெ.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் துணை அமைப்புகளும் தனித்தனியே போராட்டம் நடத்தினர்.

Pin It