நீ எனக்கும், உனக்கும் நானும் - இனி
நேருக்கு நேர் தித்திக்கும் பாலும், தேனும் (நீ)
தூய வாழ்வில் இதுமுதல் நமதுளம்
நேய மாக அமைவுற உறுதிசொல்! அடி (நீ)
கைம்பெண் என் றெண்ணங் கொண்டே
கலங்கினா யோகற் கண்டே?
காடு வேகு வதை ஒரு மொழியினில்
மூடு போட முடியுமோ உரையடி? ததி (நீ)
பைந்தமி ழைச்சீ ராக்கக்
கைம்மைஎன் னும்சொல் நீக்கப்
பறந்து வாடி அழகிய மயிலே!
இறந்த கால நடைமுறை தொலையவே. (நீ)
பகுத்தறிவான மன்று
பாவை நீஏறி நின்று
பாரடீ உன் எதிரினிற் பழஞ் செயல்
கோரமாக அழந்தொழிகுவதையே (நீ)
கருத்தொரு மித்த போது
கட்டுக்கள் என்ப தேது
கைம்மை கூறும் அதிசய மனிதர்கள்
செம்மை யாகும் படிசெய மனதுவை! அடி! (நீ)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ரவிக்குமாரின் அடுக்கடுக்கான பொய்கள்: கீழ் வெண்மணி - நடந்தது என்ன?
- இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் தடுமாற்றம்
- உடல் உறுப்பு கொடையாளிகளுக்கு அரசு மரியாதை
- சனாதன பூஜ்ஜியம்
- உபியில் சனாதன ஆட்சி இதுதான்
- கேள்வியும் - பதிலும்
- விடுமுறை நாளின் முதல் நாள் இரவுகள்
- ஒரு கோடி பறவை அவள்
- பெரியார் முழக்கம் செப்டம்பர் 28, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்