1) அசைவ உணவுக்கு அனுமதித்து பூஜைகளை தடை செய்யும் அய்.அய்.டி.கள் இந்து மதத்துக்கு எதிராக செயல்படுகின்றன.- ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு

அப்ப, அய்.அய்.டி.களை இந்து அறநிலையத் துறை அதிகாரத்துக்குக் கீழே கொண்டுவந்து, ஓர் அவசர சட்டம் போட்டுடுங்க.

2) கோயில் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை எதிர்த்து இராம. கோபாலன் போராட்டம். – செய்தி

புரோகிதர்கள் ‘தட்சணை’ வாங்குவதையும் இதுல சேர்த்துக்குங்க...

3) பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்.- பா.ஜ.க. தலைவர் தமிழிசை

இது என்ன பிரமாதம்! நாளைக்கே அன்புமணிதான் முதல்வர்ன்னு அறிவியுங்கள்; ஓடி வந்துடுவாங்க.

4) முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் கட்சிகள், பிற அமைப்புகள் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு. - செய்தி

ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவான ‘ராஷ்டிரிய மஞ்சின்’ நடத்திய நோன்பு திறப்பில் டில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பங்கேற்றார்களே, அநேகமாக அந்த நிகழ்ச்சியில்தான் இப்படிப் பேசியிருப்பாங்கபோல!

5) உப்பிலியப்பன் கோயிலில் உரிய மரியாதை தரவில்லை என்று தரிசனம் செய்யாமல் வெளியேறிய வானமாமலை ஜீயரிடம் அதிகாரிகள் மன்னிப்பு. - செய்தி

ஜீயர்களுக்கு அவமதிப்புன்னா மன்னிப்பு கேட்பீங்க. ‘சூத்திரர்’களுக்கு அவமதிப்புன்னா ‘அய்தீகம்’ என்பீங்க...

6) மகாராஷ்டிராவில் நாசிக்கில் கும்பமேளா திருவிழாவுக்கு நோய் தடுப்புத் துறை 8 இலட்சம் ஆணுறைகள் வினியோகம். - செய்தி

முன்பெல்லாம் காலரா ஊசி போடுவாங்க. இப்போ ‘ஆணுறை’ வழங்குறாங்க. பக்தி வளரவில்லை என்று யார் சொன்னது?

Pin It