
தடுத்தாள்வது எது
நம்முள் மூழ்கிடாமல்
தற்காத்துக் கொள்வது
எதன்பொருட்டு
நம் சந்திப்புகள் தொடர
சொல்லக் கூடாத உண்மை அல்லது
தெரிய கூடாத பொய் எது
மௌனத்தை
பிரித்துக்கொள்ளமுடியாதபடி
கட்டப்பட்டிருக்கிறோம்
எப்பொருளால் .
புறக்கணிப்பு
பற்றிக்கொள்கிறது தனிமை
திணிக்கப்படுகிறது அச்சம்
மறிக்கப்படுகிறது பாதைகள்
தொடர்கிறது சீண்டல்கள்
அவமதிக்கப்படுகிறது இருப்பு
முறிக்கப்படுகிறது
காலத்துடனான உறவு
- தங்கம் (