1957ஆம் ஆண்டு நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற இடையாற்றுமங்கலம் தோழர் முத்துச்செழியன் (92) டிசம்பர் 27 அன்று முடிவெய்தினார். ஜாதி ஒழிப்புப் போராளிகள், ஜாதி மறுப்புத் திருமணமே செய்வோம் என்று உறுதி எடுத்தனர். அந்த உறுதியைக் காப்பாற்றி ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர். சிறையில் இருக்கும் போதே தனது பி.ஏ. பட்டப்படிப்புக்கான தேர்வை திருச்சி தேசியக் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் எழுதியவர்.muthuchezhiyan 4001957, நவம்பர் 26இல் கைதாகி 1959 ஏப்ரலில் விடுதலையானார். வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சிறையில் ‘பி’ வகுப்பு தர அதிகாரிகள் முன்வந்தனர். ஏற்க மறுத்து தோழர்களுடன் ‘சி’ வகுப்பிலேயே தங்கினார்.

நீதிபதி பார்ப்பனர் என்பதால் லால்குடி பகுதி தோழர்களுக்கு ஒன்றே முக்கால் ஆண்டு தண்டனை விதித்தார். மற்ற மாவட்டங்களில் ஆறுமாத தண்டனை; நீங்கள் பார்ப்பனர் என்பதால் ஒன்றே முக்கால் ஆண்டு தண்டனை தருகிறீர்கள் என்று நீதிபதியிடமே கூறியவர் முத்துச்செழியன். சிறந்த பேச்சாளர், இறுதிவரை பெரியார் கொள்கையாளராகவே வாழ்ந்தார். கொள்கைப் போராளி முத்துச்செழியனுக்கு திராவிடர் விடுதலைக் கழக சார்பில் புகழ் வணக்கம்.

தோழர் எஸ்.நடராஜன் முடிவெய்தினார்.

இரட்டைமலை சீனிவாசன் பேரவையின் தலைவர் தோழர் எஸ்.நடராஜன் முடிவெய்தினார். (வயது 78) சூளைமேட்டில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்குக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, பகுதித் தமிழ், கோபிநாத், வீரா ஆகியோர்.s natarajanதோழர் எஸ்.நடராஜன், பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த சமூக நீதிக் கூட்டமைப்பில் இணைந்து சென்னை ஐ.ஐ.டி.யில் நிலவியப் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிரானப் போராட்டக் களத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டவர். மிகச்சிறந்த மனிதநேயருக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.

விடுதலை இராசேந்திரன்